பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிங்க்’. இதன் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார்... ஹெச்.வினோத் இயக்குகிறார்... போனி கபூர் தயாரிக்கிறார் என்று செய்தி வெளியானது. இந்தப் படத்தின் தயாரிப்பில், ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

• இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் நடிகர் விஷால். விலங்குகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ஒரு படத்திற்கான கதையை அவர் எழுதி முடித்துள்ளார். இதன் ஆரம்பகட்டப் பணிகள் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது.

• மாதவன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவிருக்கும் இப்படம் பற்றிய அறிவிப்பை, அதன் தயாரிப்பாளர் கோனா வெங்கட் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

• அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகி, ரெஜினா கஸாண்ட்ரா. இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார், நடிகை ஓவியா.

மிஸ்டர் மியாவ்

• பாலிவுட் இயக்குநர் குணால் கோலி தெலுங்கில் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சந்தீப் கிஷன் - தமன்னா நடிக்கின்றனர். இப்படத்திற்கு, ‘நெக்ஸ்ட் ஏன்டி’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை லண்டன், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

• பாபி சிம்ஹா - ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘அக்னி தேவ்’ படத்தில் வில்லியாக நடித்துள்ளார் நடிகை மதுபாலா. இதில் அவருக்கு அமைச்சர் கேரக்டராம். இவருக்கும் பாபி சிம்ஹாவுக்கும் இடையே நடக்கும் பூனை - எலி விளையாட்டுதான் ‘அக்னி தேவ்’. 

• இயக்குநர் கொரடாலா சிவா இயக்கவிருக்கும் ஒரு படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ரஜினிகாந்துடன் ‘காலா’ படத்தில் நடித்த ஹூமா குரேஷியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது படக்குழு.

மிஸ்டர் மியாவ்

• நாகசைதன்யா - சமந்தா ஜோடி, திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார்கள். இவர்கள் மிகவும் ஆசையுடன் ஒரு நாய்க்குட்டியைத் தத்தெடுத்துள்ளனர். அதற்கு ‘புகாபு’ எனப் பெயரிட்டுள்ளனர். புகாபுவை தன் இனஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், நடிகை சமந்தா. 

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

சாந்தினி தமிழரசன்:
“நான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகை. ஒருமுறை அவரை ஹைதராபாத் ஏர்போர்ட்டில் சந்திச்சபோது எடுத்த போட்டோ இது. எனக்கு வாழ்த்துகள் சொன்னார். நான் முதல்ல செல்ஃபி எடுக்கதான் போனேன். ஆனா, “செல்ஃபி எடுத்தா க்ளாரிட்டியா இருக்காது. நீங்க வாங்க யாரையாவது எடுக்கச் சொல்லலாம்”னு சொல்லி பக்கத்தில இருந்தவங்களை வைத்து எடுக்கச் சொன்னார். ‘தல’ சூப்பர்ல..!”

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

ஷூட்டிங் இல்லாத சமயத்தில உங்களுடைய ஹாபி என்ன ?

நடிகை அதுல்யா ரவி: “ ஷூட்டிங் இல்லாத சமயங்களில் ஊர்ல அப்பா கூடத் தோட்டத்துக்குப் போவேன். அப்படி போகும்போது ‘தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு’னு அப்பா பாட, ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’னு நான் பாடுவேன். இப்படி ஏட்டிக்கி போட்டியா ரெண்டு பேரும் பாட்டு பாடிட்டேத் தோட்டத்துக்குப் போவோம்.”

சைலன்ஸ்

மாநில சர்கார் நடத்துவோர் மத்தியில் நாட்டாமை நடிகருக்குச் செல்வாக்கு இருந்தது. நாட்டாமையின் வாரிசு அரச படத்தில் நடித்த விதத்தைப் பார்த்துவிட்டு ஆளும்கட்சி ஆவேசம் ஆனது. நாட்டாமைக்கு போன் போட்டு ஆளும்கட்சியினர் அதிருப்தியை வெளியிட, தன் வாரிசுக்கு போன் போட்டு வறுத்தெடுத்தாராம் நாட்டாமை.

• காமெடி புயல் மீது பிரமாண்ட டைரக்டர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென்று காமெடிக்கு தகவல் அனுப்பியது தயாரிப்பு கவுன்சில். ஆனால், வாய்தா மேல் வாய்தா வாங்கி டிமிக்கி கொடுத்துவந்தது புயல். தற்போது பிரமாண்டம் நெருக்கடி கொடுக்க, ‘பஞ்சாயத்துக்கு வந்தே ஆக வேண்டும்’ என்று காமெடிப் புயலிடம் கடுமை காட்டியிருக்கிறதாம் கவுன்சில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு