Published:Updated:

``நடிப்பு, பிசினஸ்னு ரெண்டிலும் கலக்கப்போறேன்!" - நடிகை சந்திரா லட்சுமணன்

கு.ஆனந்தராஜ்
``நடிப்பு, பிசினஸ்னு ரெண்டிலும் கலக்கப்போறேன்!" - நடிகை சந்திரா லட்சுமணன்
``நடிப்பு, பிசினஸ்னு ரெண்டிலும் கலக்கப்போறேன்!" - நடிகை சந்திரா லட்சுமணன்

`காதலிக்க நேரமில்லை' சீரியலில் தமிழ் நெஞ்சங்களை ஸ்கோர் செய்த நடிகை சந்திரா லட்சுமணன், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இம்முறை வெப் சீரிஸ் மூலம் தொடங்கியிருக்கும் தன் ரீஎன்ட்ரி பயணம் குறித்துப் பேசினார்... 

``சினிமா, சீரியல்னு நிறையவே வேலைபார்த்துட்டேன். அதிலும், சீரியல்கள்தான் எனக்கான தனி அடையாளம். நடிப்பில் புதுசா ஏதாவது பண்ணலாம்னு பிரேக் எடுத்தேன். நல்ல வாய்ப்புக்காக நீண்ட காலமாகக் காத்திருந்தேன். இப்போவரை பல முன்னணி சேனல்கள்ல இருந்து வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா, எதுவும் எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. இப்போ, வெப் சீரிஸ் புதுமையாகவும் வித்தியாசமாகவும் எடுக்கப்படுது. இயக்குநர் கெளதம் மேனன் சாரின் `ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' நிறுவனத் தயாரிப்பில் உருவாகும் புது வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. என்னுடன் சுனைனாவும் நடிக்கிறாங்க. முன்புபோல சினிமா, சீரியல்னு இனி தொடர்ந்து நடிக்கப்போறேன்" என்கிறார், சந்திரா லட்சுமணன்.

பிசினஸ் பயணம் குறித்துப் பேசுபவர், ``நாங்க பெயின்டிங் பிசினஸ் பண்ணிட்டு இருக்கிறோம். பெற்றோர் பெயின்டிங் பண்ணுவாங்க. அவங்களுக்கு பெயின்டிங் செய்ய சப்போர்ட் பண்றதுடன், மார்கெட்டிங் என்னுடைய பொறுப்பு. புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக, நிறைய ஆர்டர்ஸ் வந்திருக்கு. அமெரிக்கா கஸ்டமர் ஒருவருக்காக, `ஶ்ரீ ராமர் பட்டாபிஷேகம்' கான்செப்ட்டில் பெரிய கேன்வாஸ் ஓவியத்தை நான்கு மாத திட்டமிடலுடன் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். நடிப்பு, பிசினஸ்னு பரபரப்பா வேலை செய்றது ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று ரசித்துச்சொன்னார்.