Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• தமிழ், தெலுங்கு என்று பிஸியாக இருக்கும் ரகுல்ப்ரீத் சிங்குக்கு பாலிவுட் வாய்ப்புகள் குவிகின்றன. அஜய் தேவ்கன், தபு ஆகியோருடன் நடித்துவருவதைத் தொடர்ந்து, சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக ‘மர்ஜாவான்’ எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

மிஸ்டர் மியாவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• புற்றுநோயால் பாதிக்கப்பட்டது முதல் அதிலிருந்து மீண்டுவந்தது வரை தன் வாழ்க்கையைப் புத்தகமாக எழுதியுள்ளார், நடிகை மனீஷா கொய்ராலா. புத்தகத்தின் பெயர், ‘Healed - How Cancer Gave Me A New Life’.

மிஸ்டர் மியாவ்

• மலையாளத்தில் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த நிக்கி கல்ராணி, மற்ற மொழிப் படங்களில் அதிகக் கவனம் செலுத்திவந்தார். தற்போது, ‘இதிகாசா’ படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்திரஜித் - நிக்கி கல்ராணி நடிக்கும் இப்படத்தில், அவருக்குப் பழங்குடி இனப் பெண் கேரக்டராம்.

மிஸ்டர் மியாவ்

• வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார் நடிகை சன்னி லியோன். இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நோரா பதேகி எனும் கனடா மாடல் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் மியாவ்

• சமீபமாக ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்துக்காகக் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேள்வி கார்னர்


‘மெரினா புரட்சி’ பட இயக்குநர் ராஜ்   

மறுசீராய்வுக் குழுவும் உங்களின் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை. உங்கள் நிலைப்பாடு என்ன?


“அடுத்ததாக சட்டப்படி, நான் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ‘FCAT’ (Film Certification Appellate Tribunal) குழுவுக்குப் படத்தை காட்டணும். ஆனா, அப்படிச் செய்யாமல் இரண்டாவது மறுசீராய்வுக் குழுவுக்கு காட்டணும்னு சொல்றாங்க. நான் அவங்களுக்குப் படத்தைக் காட்டப்போவது இல்லை. நீதிமன்றத்திடம்தான் போவேன். மத்த நாடுகள்ல இந்தப் படம் திரையிடப்பட்டு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுட்டு இருக்கும்போது, நம்ம ஊர்ல இப்படி நடக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு.”

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

நடிகை ஆர்த்தி:
“எனக்கு எல்லாமே அம்மாதான். அம்மா இறந்ததை என்னால ஏத்துக்கவே முடியலை. அம்மாவின் போட்டோக்கள் எல்லாத்தையும் இப்படிச் சேர்த்து வெச்சிருக்கேன். இதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள்ள ஒரு எனர்ஜி வரும். இதுல ஒவ்வொரு போட்டோவுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு கதை இருக்கு. நான் காலையில கண் முழிக்கிறதும், நைட் கடைசியா பார்க்கிறதும் இந்த போட்டோக்களைத்தான்.”

சைலன்ஸ்

• பிரபல ஹோட்டல் நாமத்தைக்கொண்ட நடிகரும், மங்களகரமான வாரிசு நடிகையும் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டிவருகிறார்களாம். கண்ணாலம் கட்டிக்காமலே லிவிங் டுகெதராக வாழ்க்கை நடத்துவதற்கு இருவரும் திட்டமிட்டுவருகிறார்களாம்.   

• அக்கட பூமிக்கு வாக்கப்பட்ட நம்ம ஊர் நடிகை மீது கடுங்கோபத்தில் இருக்கிறதாம் கணவரின் குடும்பம். விரைவில் குவா குவா சத்தம்  கேட்கும் என்று குடும்பமே எதிர்பார்க்க... நடிகையோ அவர்களின் ஆசையைப்  புறந்தள்ளிவிட்டு புதுபுதுசாகப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துக்கொண்டிருப்பதே அவர்களின் கோபத்துக்குக் காரணமாம்.