Published:Updated:

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

“எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சென்னை ஓ.எம்.ஆர் பகுதியை அடிப்படையா வெச்சு ஒரு கதையைச் சொன்னார். நேரடிக் கள ஆய்வுக்காக ஓ.எம்.ஆர் பகுதிக்குப் போனப்போ, அங்கே இருக்கிற கண்ணகி நகர் ஏரியா மூலமா வேறொரு கதை கிடைத்தது. எஸ்.ரா ஏற்கெனவே சொன்ன கதையை விட்டுட்டு, அவர் சொன்ன அடிப்படையை மட்டும் வெச்சுக்கிட்டு இன்னொரு கதையை உருவாக்கினோம். ஓ.எம்.ஆர் பகுதி எப்படிப்பட்டது, அதுக்குப் பின்னாடி இருக்கிற வரலாறு என்ன, அங்கே நடக்கும் விஷயங்கள் என்ன... இப்படியான கதைதான், ‘ஜெயில்’ ஆகியிருக்கு!” - புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் வசந்தபாலன். 

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

“பல காரணங்கள் சொல்லி, சென்னையில் இருக்கும் குடிசைப் பகுதி மக்களையெல்லாம் இங்கே குவிச்சிருக்காங்க. ஒருத்தருக்குச் சொந்தமான நிலப்பரப்பு இங்கே 100 சதுர அடிதான். ரெண்டு வீட்டுக்கு ஒரு பாத்ரூம்தான் இருக்கு. கூலி வேலைக்குப் போய் வாழ்க்கையை ஓட்டுற இந்த மக்களை ஏற்கெனவே அவங்க இருந்த இடத்துல இருந்து 23 கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு வந்து குடி அமர்த்தியதால, வாழ்வாதாரத்தைத் தொலைச்சுட்டு நிற்கிறாங்க. அங்கிருக்கும் குழந்தைகளோட படிப்பு பாதிப்புக்குள்ளாகியிருக்கு. அரசாங்கம் எடுத்த ஒரே ஒரு தவறான முடிவுதான், இந்த மக்களோட கஷ்டத்துக்குக் காரணம். குடிசைவாழ் பகுதி மக்களைக் குடிபெயர்வுக்கு உட்படுத்தும்போது, அவங்க இருக்கிற ஏரியாவில் இருந்து 3 கி.மீ தூரத்துக்குள்ள அவங்களுக்கான வாழ்விடத்தை அமைச்சுத் தரணும். ஆனா, அரசாங்கம் அந்த விதியைப் பின்பற்றலை. சுருக்கமா சொன்னா, குப்பையை அப்புறப்படுத்துற மாதிரி இந்த மக்களை அப்புறப்படுத்தியிருக்காங்க. இது ஒரு நவீனத் தீண்டாமை.

கண்ணகி நகர் நிலையை ‘force to fingers’னு டெல்லியைச் சேர்ந்த ஒருத்தர் டாக்டரேட் பண்ணி யிருக்கார். ‘disaster of resettlement india’ன்னு தன் பி.ஹெச்.டி படிப்புக்காக இந்தியா முழுக்க ரீ-செட்டில்மென்ட் எங்கெல்லாம் நடந்திருக்குன்னு ஆய்வு பண்ணிப் பதிவு பண்ணியிருக்கார். அது எனக்குப் பெரும் உதவியா இருந்தது. அந்தப் பகுதி மக்களின் குரலாக இருக்கும் இந்தப்படம்.”

“டைட்டிலுக்கு என்ன காரணம்?”

“சுதந்திரம் மறுக்கப்படும், அதிகாரத்தின் கைகள் நீளும், பூட்ஸ் சத்தம் கேட்கும், லத்திகள் உடையும் இடம்... ஜெயில். சிறை பற்றிய மக்களின் பிம்பம் இதுதான். இதெல்லாம் ஜெயில்ல மட்டும்தான் நடக்குதா?! அங்கிருக்கும் அதிகாரம், துஷ்பிரயோகம் எல்லாம் மக்கள் வாழ்ற இதுமாதிரி இடங்களிலும்தான் நடக்குது. எப்போவும் சைரன் சத்தம் கேட்கிற, பூட்ஸ் கால்கள் நடக்கிற, போலீஸ் ரவுண்ட்ஸ் வர்ற பகுதியை ஜெயில்னு சொல்லாம வேறென்ன சொல்றது? எங்கே குற்றம் நடந்தாலும், குற்றவாளிகளை இங்கேதான் தேடுறாங்க. முதல்ல ‘புறாக்கூண்டு’ன்னுதான் யோசிச்சேன், பிறகு ‘ஜெயில்’னு மாத்தினேன்.” 

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

“படத்துக்கு இரண்டு எழுத்தாளர்களைப் பயன்படுத்தி யிருக்கீங்களே?!”

“ஆமா, படத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணனும், பாக்கியம் சங்கரும் வசனம் எழுதியிருக்காங்க. கதை தெளிவான வடிவத்துக்கு வர எஸ்.ரா உதவியா இருந்தார். இந்தப் படத்தைத் தொடங்குறதுக்கு முன்னாடி, பாக்கியம் சங்கர் எழுதிய ‘வடசென்னைக்காரன்’ புத்தகத்தைப் படிச்சேன், ரொம்பப் பிடிச்சிருந்தது. சென்னை பாஷைக்கு பாக்கியம் சங்கர் தேவைப்பட்டார். அதனாலதான், இருவரையும் பயன்படுத்திக்கொண்டேன்.”

“ ‘வெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்துனீங்க. இப்போ ‘ஜெயில்’ படத்தில் நடிகரா வேலை வாங்கியிருக்கீங்க...”


“ ‘வெயில்’ படத்துல ஜி.வி எனக்கு அறிமுகமானப்போ, அவருக்குப் பதினேழு வயசு. அப்போ டார்லிங், செல்லம்னு உரிமையா ஒருமையில் கூப்பிடுவேன். சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரைச் சந்திக்கும்போது, அவர் எழுபது படங்களுக்கு மியூசிக் பண்ணியிருந்தார், 11 படத்துல ஹீரோவா நடிச்சிருந்தார். அதனால மரியாதையா, ‘ரெடி ஆயிட்டீங்களா சார்?’னு கூப்பிடுறேன். ஜி.வி. படத்துல ‘கர்ணா’ங்கிற கேரக்டரை அவ்வளவு அழகா பண்ணியிருக்கார். இந்தப் படத்துல ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன் அவர்கிட்ட தெரியும்.

ஜி.வி-க்கு நான் சொன்ன கதை பிடிச்சிருச்சு. சம்பள விஷயத்துல பிரச்னை வந்தப்போ, ‘உங்களுக்காக நான் பண்றேன் சார்’னு மிகப்பெரிய சமரசம் பண்ணிக்கிட்டார். அதுக்கு நான் அவருக்கு நன்றி சொல்லிக்கணும்.”

“ ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ புகழ் அபர்ணிதி எப்படி நடிச்சிருக்காங்க?”

“கண்ணகி நகர் ஏரியா பெண்கள் ரோட்டு ஓரத்தில் குஸ்கா விற்பாங்க, கலகலன்னு பேசுவாங்க, மேக்கப் இல்லாம நைட்டி போட்டுக்கிட்டு, தலையில கொண்டையை முடிச்சுப் போட்டுக்கிட்டு ஏரியாவைச் சுத்திக்கிட்டு இருப்பாங்க. அவங்களைப் பிரதிபலிக்கிற ஒரு முகம் தேவையா இருந்தது. முக்கியமா, அந்த முகம் ஜி.வி-க்கு சமமா வாய் பேசுற பொண்ணா இருக்கணும்னு நினைச்சேன். அதுக்கு, அபர்ணிதி சரியா இருந்தாங்க. ‘ரோசாமலர்’ கேரக்டரை ரொம்ப சூப்பரா பண்ணியிருக்காங்க. இவங்களைத் தவிர, ‘கோலிசோடா’ பாண்டி, இசையமைப்பாளர் சிற்பி சாரோட பையன் நந்தன் ராவ் நடிச்சிருக்காங்க. ஜி.வி.பிரகாஷுக்கு அம்மாவா ராதிகா மேடம் நடிச்சிருக்காங்க.” 

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

“ரங்கநாதன் தெருவைக் கடக்குறப்போ, உங்க மனநிலை என்னவா இருக்கும்?”

“ ‘அங்காடித் தெரு’ படத்துக்குப் பிறகு ரங்கநாதன் தெருவுக்குப் போற சூழல் எனக்கு அமையலை. என் மனைவி துணி எடுக்கப்போறப்போ, வசந்தபாலன் மனைவின்னு தெரிஞ்ச சிலர், ‘`அங்காடித் தெரு’ படத்துக்குப் பிறகு எங்க வாழ்க்கை மாறியிருக்கு. உணவு, தங்குற இடம் ஒழுங்காகியிருக்கு. எட்டு மணிநேர வேலை சரியா நடக்குது. சார்கிட்ட எங்க நன்றியைச் சொல்லுங்க’ன்னு சொல்லி அனுப்புறாங்க. 

இன்னைக்கு மீ டூ ஹேஷ்டேக்ல எழுதுறவங்ககூட ‘அங்காடித் தெரு’ படத்துல பாலியல் சுரண்டலைக் குறிப்பிட்டுச் சொல்றாங்க. இதெல்லாம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது. சினிமாவைப் பொழுதுபோக்குச் சாதனமா பயன்படுத்துறதைத் தாண்டி, ஒரு ஆயுதமா மாத்துறதுக்கான வேலையை நம்மளால செய்ய முடிஞ்சிருக்குன்னு தோணுது. கண்டிப்பா, ‘ஜெயில்’ படமும் இப்படி ஒரு சந்தோஷத்தை எனக்குக் கொடுக்கும்னு நினைக்கிறேன்.” 

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

“ ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ படங்களின் தோல்வி கொடுத்த வலிகளிலிருந்து மீண்டு வந்துட்டீங்களா?”

“ ‘நம்ம படத்துல என்ன குறை, ஏன் ஓடலை, இதுல அவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு’ன்னு ‘அரவான்’ படத்தைத் தயாரிச்ச சிவா சார் என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார். ‘மறுபடியும் நாம ஒரு படம் பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார். ‘காவியத் தலைவன்’ படத்துக்குத் தமிழக அரசின் ஒன்பது விருதுகள், நார்வேயில் இருந்து பத்து விருதுகள் கிடைச்சது.  

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் ‘ஜெயில்’தான்!”

இரண்டு படமும் வியாபார ரீதியா சரியா போகலை. எனக்குப் பொருளாதார ரீதியா பின்னடைவைக் கொடுத்துச்சு. ஆனா, ஒரு படைப்பாக ரெண்டுமே நல்ல படங்கள்தான். ரஹ்மான் சாரும், நீரவ் ஷாவும் ‘காவியத் தலைவன்’ பத்தி அடிக்கடி பேசுவாங்க. ஒரு கலைஞனால இதைத்தான் பண்ணமுடியும். வியாபார ரீதியான வெற்றியை ரசிகர்கள்தான் தரணும். இந்தப் படங்களை எடுத்ததுக்காக நான் பெருமைப்படுறேன்.”

சனா