Published:Updated:

சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!

சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!

ஓவியம்: செந்தில்

சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!

ஓவியம்: செந்தில்

Published:Updated:
சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!
பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!
சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!

காமிக்ஸ் என்பது குழந்தை களுக்கானது மட்டுமல்ல. அது அனைவருக்குமானது!”- ஸ்டேன் லீ.

இன்று நாம் கொண்டாடும் ஸ்பைடர்மேன், தி ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ், தி ஃபென்டாஸ்டிக் ஃபோர், டேர்டெவில், பிளாக் பேந்தர், எக்ஸ்-மென், ஏன்ட்மேன், அயர்ன் மேன், தோர் போன்ற மார்வெல் சூப்பர்ஹீரோக்களின் தொடக்கப்புள்ளியைத் தேடினால் “ ‘ஸ்டேன் லீ’யைத் தெரியாதா உனக்கு?” என கூகுளே நம்மை ஏளனம் செய்யும். தன் 17 வயது முதல் 95 வயது வரை காமிக்ஸ் உலகுக்காக உழைத்தவர் கடந்த நவம்பர் 12 அன்று காமிக்ஸ் பிரியர்களின்  நினைவுகளில் கலந்துவிட்டார். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள்... 200 கோடிக்கும் அதிகமான காமிக்ஸ் புத்தகங்கள்... ஒரு துறையில் இப்படியொரு சாதனையை இனி எவரேனும் நிகழ்த்துவார்களா என்பது சந்தேகம்தான்.  

சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்வெல் காமிக்ஸுக்குத் தொடர்புடைய படங்களைத் திரையில் பார்க்கும்போது ஒரு காட்சியை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது. அதிரடி சண்டைக் காட்சிகள், பிரமாண்டமான அரங்க அமைப்புகள், ஆச்சர்யமூட்டும் கிராபிக்ஸ் காட்சிகள் எனப் பல கலவரங்கள்  அரங்கேறிக்கொண்டிருப்பதன் நடுவே பெரிய மூக்குக் கண்ணாடி ஒன்றை அணிந்த வயதான நபர் ஒருவர் திடீரெனத் தோன்றி ஒரு பன்ச் வசனமோ, கேலி கிண்டலோ செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவார். அதற்கு அரங்கமே ஆர்ப்பரிக்கும். யோசிக்கவே வேண்டாம், அவர்தான் ஸ்டேன் லீ!

மார்வெல்லின் அனைத்துப் படங்களிலும் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டவர். வித்தியாசமான வேலைகளைத் தேடிச் சென்று செய்வதில் ஆர்வம் கொண்டவர். இவர் தன் 17-வது வயதில் தட்டிய கதவு ‘டைம்லி காமிக்ஸ்’ என்ற நிறுவனத்தினுடையது. வேடிக்கை என்னவென்றால் அது ஒரு காமிக்ஸ் நிறுவனம் என்பதே ஸ்டேன் லீ-க்குத் தெரியாது. 1939-ம் ஆண்டு அங்கு வேலைக்குச் சேர்ந்தவருக்கு முதலில் கொடுக்கப்பட்ட பணிகள் மதிய உணவு வாங்கிவருவது, ஓவியர்கள் காமிக்ஸ் பக்கங்களை வரைந்து முடித்தவுடன், வெளியே தெரியும் பென்சில் கோடுகளை ரப்பர் வைத்து அழிப்பது போன்றவை மட்டுமே. அவரை வேலைக்கு எடுத்த அந்நிறுவனத்தின் ஜோ சைமன் மற்றும் ஜாக் கிர்பிக்கு அப்போது தெரியாது, இந்த இளைஞன் நம்முடன் இணைந்து காமிக்ஸ் உலகின் தலையெழுத்தையே மாற்றப்போகிறான் என்று!

பணிக்குச் சேர்ந்த சில வருடங்களிலேயே ‘கதை உதவி’ வேலை, எடிட்டிங், ப்ரூஃப் ரீடிங் எனப் பல படிகளைச் சுலபமாகத் தாண்டினார் ஸ்டேன் லீ. 1960-களில் ‘டைம்லி காமிக்ஸ்’ நிறுவனம் `மார்வெல்’ காமிக்ஸாக உருவெடுத்தது. பின்னாளில் அந்நிறுவனத்தின் எடிட்டர், தயாரிப்பாளர், பப்ளிஷர், பொறுப்பாசிரியர், தலைவர் என அசுர வளர்ச்சி அடைந்தார் ஸ்டேன் லீ. 1960-களில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் சம உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்தபோதே `பிளாக் பேந்தர்’ எனும் சூப்பர்ஹீரோவை ஒரு கறுப்பின மனிதனாக ஜாக் கிர்பியுடன் இணைந்து உருவாக்கி அழகுபார்த்தார். கற்பனைக் கதைகளுக்கு ஸ்டேனிடம் பஞ்சமே இல்லை. 1963-ம் ஆண்டு செப்டம்பரில், எக்ஸ்-மென்னும், டேர்டெவிலும் வெளியாகவேண்டிய சமயம்.  சில காரணங்களால், டேர்டெவில் தள்ளிப்போக, சட்டென ‘அவெஞ்சர்ஸ்’ ஐடியாவுடன் களம் இறங்கினார் ஸ்டேன் லீ. அதன்பின் நடந்தவையெல்லாம் பில்லியன் டாலர் பிசினஸ்.
 
“பூச்சின்னா மக்கள் எல்லாம் விரும்பமாட்டாங்க, வேணாம் ஸ்டேன்” என்பதுதான் ஸ்டேன் லீயின் ஸ்பைடர்மேன் ஐடியாவுக்கு மார்வெல்லின் பதில். ஆனால், அதை பப்ளிஷ் செய்வதில் தீர்மானமாக இருந்தார் ஸ்டேன். இப்போதுவரையில் குழந்தைகளின் சூப்பர்ஸ்டார் ஸ்பைடர்மேன்தான்.  இதுவரை வந்த ஸ்பைடர்மேன் படங்களில் டாம் ஹோலண்டு நடித்திருக்கும் ஹோம்கம்மிங் படம்தான், தான் உருவாக்கிய ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருப்பதாகச் சொல்கிறார் ஸ்டேன் லீ. காரணம், அவர் மனதில் உருவான ஸ்பைடர்மேனுக்கு அந்த வயதுதான். அந்தக் கதாபாத்திரமும் அப்படியானதுதான்.

1980-களில் ஸ்டேன் லீயின் ‘ஹல்க்’ கதை லைவ் ஆக்ஷன் டிவி தொடராக வெளியானது. அதில்தான் முதன்முதலாக கேமியோ வேடத்தில் தோன்றினார் ஸ்டேன் லீ. 2000-த்தின்போது வெளியான எக்ஸ்-மென் திரைப்படத்தில்தான் முதன்முதலாக வெள்ளித்திரையில் தோன்றினார். அதன்பிறகு இவர் இல்லாத மார்வெல் படங்களே இல்லை. விதவிதமான கெட்டப்புகள், தான் உருவாக்கிய சூப்பர்ஹீரோக்களைத் தானே கிண்டலடிப்பது, அட்வைஸ் செய்வது என அதகளம் செய்யத் தொடங்கினார். அனிமேஷன், டிவி தொடர், திரைப்படங்கள் என 65 முறைக்கும் மேலாக கேமியோ ரோல்களில் தோன்றியவரை ‘கேமியோ சூப்பர்ஸ்டார்’ என உலகமே கொண்டாடியது. பல வெற்றிப்படங்கள் இவரின் கதைகளைத் தழுவியே எடுக்கப்பட்டன. அதில் பலவற்றின் கௌரவ நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருந்தார் ஸ்டேன் லீ. 

“பலர் பாலங்கள் கட்டிக்கொண்டிருக்கும்போது, மருத்துவத் துறையில் சாதித்துக்கொண்டிருக்கும்போது, நான் ஒரு சாதாரண காமிக்ஸ் புத்தக எழுத்தாளர் என்பது எனக்கு தர்மசங்கடத்தையே ஏற்படுத்தியது. பிறகுதான் எனக்குப் புரிந்தது, பொழுதுபோக்கு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று; மக்களை என்னால் மகிழ்விக்க முடியும் என்றால், நான் நல்லதொரு பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று!” என்கிறார் ஸ்டேன் லீ.

இனி வரும் நாள்களில் ஸ்டேன் லீ-யின் சூப்பர்ஹீரோக்கள் திரையில் தோன்றும்போதெல்லாம் கரவொலியும், விசிலும் முன்பைவிட அதிகமாக அரங்கை அதிரச் செய்யும். அவை அனைத்தும் ஸ்டேன் லீ-க்கானதுதான். தன் கதைகளின் மூலம் பல்வேறு உலகங்களை நமக்காகப் படைத்தவர் இன்று வேறு ஓர் உலகுக்குச் சென்றுவிட்டார். வி வில் மிஸ் யூ #StanTheMan!

சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ!

டுத்த வருடம் வரவிருக்கும் மூன்று மார்வெல் படங்களான கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ் 4, ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் ஆகியவற்றுக்கான தன் கேமியோ காட்சிகளை ஏற்கெனவே நடித்துக் கொடுத்துவிட்டார் ஸ்டேன் லீ.

இத்தனை கேமியோ ரோல்களில் நடித்தவரை “உங்களுக்குப் பிடித்த, உங்கள் கேமியோ ரோல் எது?” என்று ஒரு பேட்டியில் கேட்டனர். “அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான். ஏனென்றால் அதில்தான் என் கேமியோ இரண்டு ஷாட்கள் அளவுக்கு நீண்டிருக்கும். மற்ற படங்களில் எல்லாம் ஒரு ஷாட்தான்!” என்று குறும்புடன் பதிலளித்தார் ஸ்டேன் லீ.

தன் சூப்பர் ஹீரோக்களுக்கான இன்ஸ்பிரேசனாக ஸ்டேன் சொல்வது, 1905-ம் ஆண்டு வெளியான ‘ஸ்கேர்லெட் பிம்பர்நெல்’ நாவலைத்தான்.

ர.சீனிவாசன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism