Published:Updated:

டிக்கெட் ப்ளீஸ்!

டிக்கெட் ப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டிக்கெட் ப்ளீஸ்!

டிக்கெட் ப்ளீஸ்!

டிக்கெட் ப்ளீஸ்!

டிக்கெட் ப்ளீஸ்!

Published:Updated:
டிக்கெட் ப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
டிக்கெட் ப்ளீஸ்!
டிக்கெட் ப்ளீஸ்!

ப்பா ஊரில் இல்லை. அம்மாவோ கட்டிலில் எந்தவித சலனமுமின்றி மயங்கிக்கிடக்கிறாள். வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் தனித்து அலையும் இரண்டு வயதுக் குழந்தை பிஹுவின் திக்திக் ஒரு நாள்தான், இந்தியில் வெளியாகியிருக்கும் `பிஹு’ படம்.  படத்தின் நாயகி இரண்டு வயதுக் குழந்தை மைராதான். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் தனதாக்கிக்கொள்கிறது இந்த க்யூட் வாண்டு. படத்தின் கதைக்கேற்ப பாப்பா நடித்திருக்கிறாளா அல்லது, பாப்பாவின் போக்கில் கதை நகர்கிறதா என யூகிக்க முடியாத அளவுக்குக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். உங்கள் வீட்டில் எந்தப் பொருளெல்லாம் குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்னும் கேள்விக்கு, `எல்லாமேதான்’ எனத் திகில் கிளப்புகிறார் இயக்குநர் வினோத் கப்ரி. உறவுச் சிக்கல்கள், அபார்ட்மென்ட் வாழ்க்கை, தற்கொலை மனநிலை, மன அழுத்தம் எனப் பல விஷயங்களைப் பரபரப்பாக பயம்காட்டிப் பேசுகிறாள் இந்தப் பிஹு. 

டிக்கெட் ப்ளீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்த வேலையும் பிடிக்காமல் கடைசியில்  சொந்தமாக ஒரு வின்டேஜ் காரை வாங்குகிறான் நாயகன். நன்மைகளோடு சேர்த்து, ‘ஹட்ச்’ நாய் போல், தீமையும் காரின் மூலமாகவே விரட்டுகிறது. ஒரு கட்டத்தில் காரில் இருக்கும் பேய்க்கு நாயகன் நண்பனாகிவிடுகிறான். காருக்குள் எப்படிப் பேய் வந்தது, அதன் நோக்கம் என்ன என்பவற்றையெல்லாம் சயின்ஸ் ஃபிக்ஷனாகச் சொல்லியிருக்கிறது தெலுங்குப் படமான ‘டாக்ஸிவாலா.’ கம்ப்ளீட் பேக்கேஜாகப் படம் வர வேண்டும் என்பதால் அம்மா சென்டிமென்ட், பேய், காமெடி, ரொமான்ஸ் எனக் கலந்துகட்டி அடித்திருக்கிறார் இயக்குநர் ராகுல் சங்கிர்த்யன். ஜெர்கின், வாயில் குச்சி, கூலர்ஸ் என நெசமாலுமே கார் டிரைவர் நாயகனாக விஜய் தேவரகொண்டா. பேயைப் பார்த்து பம்முவதும், பின் அதிரடியாவதுமாகக் கலக்கியிருக்கிறார். சில பல பேய்ப்பட டெம்ப்ளேட்டுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் டாக்ஸிவாலாவோடு ஜாலிரைடுதான்!

டிக்கெட் ப்ளீஸ்!

ங்கிலப்பாடல் அதிகம் கேட்காதவர்களுக்கும்கூட ஓரளவு தெரிந்த பாடல் ‘வீ வில் ராக் யூ’. அந்தப் பாடலால் புகழ்பெற்றவர்தான் ஃப்ரெட்டி மெர்குரி.  இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த பார்சி இனத்தைச் சேர்ந்த ஃபாரூக் புல்சரா பிரிட்டனின் ‘குயின்’ பேண்டை மெருகேற்றி அதன் தலைவனாகும் பயணமே ஹாலிவுட் படமான ‘பொஹீமியன் ரப்ஸோடி’ படம். போராடிக் கிடைக்கும் வெற்றி, துரோகத்தால் ஏற்படும் வீழ்ச்சி, தன்னை அறிந்து கொண்டதால் ஏற்படும் குழப்பம், மீண்டும் இணையும் நட்பு, உலகப் புகழ்... எனப் பல அத்தியாயங்களாக விரிகிறது கதை. 1985-ம் ஆண்டு குயின் பேண்ட் லைவாகக் கலந்துகொண்ட ‘Live Aid’ கான்செர்ட்டை தத்ரூபமாகப் படம்பிடித்து ‘குயின்’ ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார் இயக்குநர் ப்ரையன் சிங்கர். ஃப்ரெட்டி மற்றும் குயினைப் பற்றித் தெரியாதவர்களும்கூட இந்த ‘பொஹீமியன் ரப்ஸோடி’யை நிச்சயம் ரசிக்கலாம். காரணம் ஃப்ரெட்டியின் வாழ்வு அத்தனை சுவாரஸ்யமானது.

டிக்கெட் ப்ளீஸ்!

புகழ்பெற்ற மதபோதகர் ஒருவருக்கு, தன் மகன் தன்பாலின ஈர்ப்பு கொண்டவன் என்பது தெரியவருகிறது. அதைக் குற்றம் எனக் கருதி மகனை ஒரு கன்வெர்ஷன் தெரபிக்கு அனுப்புகிறார். அங்கு அரங்கேறும் ட்ரீட்மென்ட்டுகள், கட்டுப்பாடுகள் இவ்வகைத் தெரபிகளின் கோர முகத்தை அவனுக்குப் புரிய வைக்கிறது. குழப்பத்தில் இருந்தவன், தான் யார் என்பதையும் உணர்ந்துகொள்கிறான். இவ்வகை தெரபிகளின் ஏமாற்று வேலைகளை, கொடூரங்களை உலகுக்கும் தெரியப்படுத்துகிறான். LGBTQ சமூகத்துக்காகத் தொடர்ந்து போராடிவரும் ஜரார்ட் கான்லெயின் (Garrard Conley) சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருக்கிறது ‘பாய் எரேஸ்டு’, ஹாலிவுட் படம். மூத்த நடிகர்கள் ரசல் க்ரோவ், நிக்கோல் கிட்மேனுடன் தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக நடித்திருப்பது லூகஸ் ஹெட்ஜஸ். படத்தை இயக்கியுள்ள ஜோயல் எட்ஜர்டன்னே ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் பயமுறுத்தி, மாறச்சொல்லிக் கட்டாயப்படுத்துவதும் ஒருவகை வன்புணர்ச்சிதான் என்று அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. இந்த வருட ஆஸ்கர் ரேசில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த ‘பாய் எரேஸ்டு.’

கார்த்தி, ர.சீனிவாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism