`எதற்கும் சரிப்பட்டு வரமாட்ட’ என்று அப்பா, அக்காக்களால் ஏளனமாகப் பேசப்படும், ‘ப்ளஸ் டூ ஃபெயில்’ ஜோதிகாவுக்கு, யதார்த்தமாகக் கிடைக்கும் ஆர்.ஜே வேலை உற்சாகம் அளிக்கிறது. அவர் காற்றில் பேசும் மொழியே அவருக்குச் சில பிரச்னைகளைக் கொடுக்க அவற்றின் விளைவுகளை அழுத்தமாக, அழகாகப் பேசியிருக்கும் படம் ‘காற்றின் மொழி.’

விஜி @ ஆர்ஜே ‘மது’வாக, ஜோதிகா. துறுதுறுவென அடுத்த ரவுண்டுக்குக் ‘கெளம்பி’யிருக்கிறார் ஜோ. ‘கோப்பால்ல்ல்..’ என மிமிக்ரி; விதார்த்துடன் ‘நேத்து ராத்திரி யெம்மா’ ரொமான்ஸ், அப்பா, அக்காக்களுடன் வார்த்தை மோதல், புறாவுடன் தனிமைப் பேச்சு... என மொத்தப் படத்தையும் தாங்குகிறார். ரேடியோ ஜாக்கியாக அவர் சொல்லும் அந்த ஹஸ்கி ‘ஹல்ல்லோ’வுக்கு ஆயிரம் லைக்ஸ்!

அழுகை, சோகம், இயலாமை, வெற்றி என அத்தனை உணர்வுகளையும் அழகாகக் கடத்த விஜிக்கு உறுதுணையாக இருக்கிறார், கணவனாக நடித்திருக்கும் விதார்த். போராளிக் கவிஞன் ‘கும்கி’யாக அசத்துகிறார் இளங்கோ குமரவேல். அப்பளக் கட்டு ஜிங்கிள்ஸுக்குப் பாடலெழுதும்போது கோபப்பட்டுக் கிளம்புவதும், அடுத்த நாள் காபி கப்போடு ஸ்டேஷன் ஹெட்டை சமாதானப்படுத்துவதும் என, கொண்டாட்ட கும்கி!

எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சாண்ட்ரா, லஷ்மி மஞ்சு, மயில்சாமி, உமா பத்மநாபன், மோகன் ராம், ஜோவின் அக்காக்கள் சிந்து-சீமா, திண்டுக்கல் சரவணன் எனப் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் மனதில் பதிகிறார்கள். குறிப்பாக, எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரமும் அவரது தனிமைக் கதையும் ராதா மோகன் ஸ்பெஷல். ‘மூட்டுவலி’ மயில்சாமியின் அந்த முந்திரிப் பருப்பு காமெடியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு.

பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காற்றின் மொழி’யை வசனங்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. ‘நீங்க சுட்டாதான் பூரி புஸ்ஸுனு வரும்’, ‘அவனுக்கு லைசன்ஸே நான் தான் வாங்கிக்கொடுத்தேன்... இப்ப என்னையே ஓட்டறான்” எனக் கதையோடு பயணிக்கும் வசனங்களுக்காக, வாழ்த்துகள் பொன்.பார்த்திபன்.

ரேடியோ ஸ்டேஷன், அப்பார்ட்மென்ட், பால்கனி... எனக் குறைந்த இடங்களில் பயணித்தாலும், மனதுக்கும் கண்களுக்கும் மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது, மகேஷ் முத்துசாமியின் கேமரா. ஏ.ஹெச்.காஷிப் இசைக்குப் பெரிதாய் வேலையில்லை.

ரீமேக்தான் என்றாலும், தமிழுக்குத் தகுந்தபடி அதைக் காட்சிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார், இயக்குநர் ராதாமோகன். வழக்கம்போல் நாடகத் தொனி ஆங்காங்கே எட்டிப்பார்த்தாலும், முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லாத, இரட்டை அர்த்த வசனம் இல்லாத, ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் இல்லாத நல்லதொரு ஃபீல்குட் சினிமாவைக் கொடுத்து, ஃபார்முக்குத் திரும்பி யிருக்கிறார், ராதாமோகன்.

- விகடன் விமர்சனக் குழு