தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் நடிகை அஞ்சலி, ‘ஆனந்த வைபவி’ என்ற படத்தில் நடிக்கிறார். ராய் லட்சுமியும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

நாக சைதன்யா - சமந்தா ஜோடி இணைந்து நடித்துவரும் படம், ‘மஜிலி’. இந்தப் படத்தில் இருவரும் கணவன் மனைவியாகவே நடிக்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘ரங்கீலா’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார் நடிகை சன்னி லியோன். ‘ரோடு மூவி’ ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தை, தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத் தளங்களில் படமாக்கவுள்ளனர்.

தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே தேர்ந்தெடுக்கும் ஆண்ட்ரியா, புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். இதை கன்னட படங்களில் நடன இயக்குநராக இருந்த சத்யா இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு பரோடா, கொச்சினில் நடக்கவிருக்கிறது.

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டர் நடிகை நமீதா. ‘சத்ரபதி’ படத்தின் இயக்குநர் ஸ்ரீமகேஷ் இயக்கத்தில், ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கும் நமீதாவுக்கு, அதில் பத்திரிகையாளர் கேரக்டராம்.

தெலுங்குப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் நிவேதா பெத்துராஜ். சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடிக்க, கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகிவந்த ‘கொலையுதிர் காலம்’ படத்தின் தயாரிப்புப் பணிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டன. இப்போது, மீதியிருக்கும் படப்பிடிப்பு எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடைபெறவுள்ளது.

போட்டோ ஷாப்

நடிகை ஈஸ்வரி ராவ்: “பாலுமகேந்திரா சாரின் ‘ராமன் அப்துல்லா’ படத்தில் நடிக்கிறதுக்கு முன், அந்தப் படத்துக்கான போட்டோ ஷூட் நடந்தது. அந்த நேரத்துல, ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்துகிட்டோம். அப்போ எடுத்த போட்டோ இது. எனக்குப் பிடிச்ச போட்டோக்கள்ல இது முக்கியமானது.”

கேள்வி கார்னர்

ராஜேந்திரன், டப்பிங் யூனியன் இணைச் செயலாளர்

டப்பிங் யூனியனிலிருந்து சின்மயி நீக்கப்பட்டதற்கு என்ன காரணம்?

“டப்பிங் யூனியனுக்குச் செலுத்த வேண்டிய சந்தாவை இரண்டு ஆண்டுகளாக சின்மயி செலுத்தவில்லை. மேலும், ‘டப்பிங் யூனியனில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளன’ என்று யூனியன் நிர்வாகத்துக்கு எதிராக அவர் பேட்டி கொடுத்துள்ளார். சங்க விதிமுறைப்படி, உறுப்பினர் சந்தாவைக் கட்டாதவர்கள் தானாகவே தகுதி நீக்கத்துக்கு ஆளாகிவிடுவார்கள்.”

சைலன்ஸ்

‘அரசு’ நடிகருக்கு புகழ் நடிகையின் மீது ஆரம்பத்திலிருந்தே அலாதியான பிரியம். அவர்தான் இரு படங்களில் இவரை சிபாரிசு செய்தாராம். இப்போது, புதுப் படத்துக்கும் அரசரையே நாடியுள்ளாராம் புகழ்.

ஆதவன் சேனலின் சிறப்பு நிகழ்ச்சிக்கு முதலில் இளையவேள் நடிகரை அழைத்தாராம், பாயும்புலி நடிகர். வேள் நடிகரோ, இன்ப அதிர்ச்சியோடு காத்திருக்க... திடீரென்று நோ சொல்லித் தவிர்த்துவிட்டாராம் பாயும்புலி .