Published:Updated:

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”
பிரீமியம் ஸ்டோரி
3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

Published:Updated:
3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”
பிரீமியம் ஸ்டோரி
3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

``தன் அம்மாவுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிற லிசா, பர்மிஷன் கேட்க தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போறாங்க. அந்த வீட்டுல பேயால ஒரு பிரச்னை. அங்க என்னெல்லாம் நடக்குது; அந்தப் பிரச்னையில இருந்து எப்படி எல்லாரும் வெளிய வந்தாங்க என்பதுதான் லிசாவோட கதை...’’ - தனது முதல் படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ராஜு விஸ்வநாத்.

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

``என் அப்பா ஒரு படத்தைத் தயாரிச்சு இயக்கணும்னு ஆசைப்பட்டார். அந்தப் படத்துக்கான ஷூட்டிங் போயிட்டிருக்கும் போது எதிர்பாராதவிதமா அவர் இறந்துட்டார். எங்களோட சொத்துகளை விற்றுதான் அப்பா அந்தப் படத்தை எடுத்திருந்தார். அவர் இறந்ததும் எங்க குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியா பெரிய அடி விழுந்திருச்சு. எங்க அப்பா ஷூட் பண்ணி வெச்சிருந்த ஃபிலிம் ரோலை எல்லாம் கிலோ 5 ரூபாய்னு எடைக்குப் போட்டு எங்க அம்மா குடும்பத்தை நடத்தியிருக்காங்க. அப்போ நான் ரொம்ப சின்னப் பையன். நான் வளர்ந்து வந்ததுக்கு அப்புறம் எங்க அம்மா, `இது ஒரு காலத்துல நம்ம வீடா இருந்துச்சு; இந்த நிலம் நம்மளோடதா இருந்துச்சு’ன்னு சொல்லிக் கேட்டிருக்கேன். எனக்கு அந்த வயசுல இருந்தே சினிமா மேல ஆர்வம் இருந்துச்சு. ஆனால், அதை எங்க வீட்டுல சொல்ல முடியாத நிலைமை. அதனால படிச்சு, ஐடி கம்பெனியில வேலைக்குப் போயிட்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இது நமக்கான இடம் இல்லை; நாம சினிமாவில்தான் இருக்கணும்னு ஓடி வந்துட்டேன். சினிமாவுக்கு வந்ததும் பி.ஜி.முத்தையா சாரோட நட்பு கிடைச்சது; அந்த நட்பால `லிசா’ பட வாய்ப்பும் கிடைச்சது. ஹாலிவுட்டில் நிறைய பேய்ப் படங்கள் 3டி-யில் வந்திருக்கு. ஆனால் தமிழில் 3டி-யில் பேய்ப் படங்கள் அதிகம் வந்ததில்லை. அதனால் இந்தப் படத்தை 3டி ஸ்டீரியோஸ்கோப்பில் எடுத்திருக்கோம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

‘` `பலூன்’, ‘லிசா’, `ஓ’ன்னு வரிசையா பேய்ப் படங்களிலேயே நடிச்சிட்டிருக்காங்க அஞ்சலி. இந்தப் பேய்ப் படத்தில் எந்த அளவுக்கு ஈடுபாட்டோட இருந்தாங்க?

“3டி-ல ஷூட் பண்ணும்போது ரொம்பவே குஷியாகிட்டாங்க. ஷூட் பண்ற காட்சிகளை அங்கேயே 3டி மானிட்டர்ல பார்க்கிற மாதிரி 3டி ரூம் செட் பண்ணியிருந்தோம். ஒவ்வொரு சீன் முடிச்சதும் மானிட்டர் பார்க்கும்போது குழந்தை மாதிரி துள்ளிக் குதிப்பாங்க. சில காட்சிகள் ஷூட் பண்ணும்போது, `நான் இந்த சீன்ல திரும்பி நடக்கும்போது என் கையை கேமரா பக்கமா கொண்டு வந்து திரும்பவா, அது 3டி-ல பார்க்கும்போது நல்லா இருக்கும்ல’ன்னு அவங்களே 3டி-க்கு ஏற்ற மாதிரி நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அஞ்சலியோட இந்த ஈடுபாடு ஒரு சீனில் என் தலையையே பதம் பார்த்துடுச்சு. ஆமாங்க, ஒரு சீன்ல டயலாக் பேசிட்டு தோசைக்கல்லை கேமரா பக்கமா தூக்கிப் போடணும். அவங்க தூக்கிப் போட்ட தோசைக்கல் என் நெத்தியில பட்டு, தையல் போடுற அளவுக்குப் போயிடுச்சு. இதுக்கு மேலேயும் நான் அவங்களோட ஈடுபாடு பற்றிச் சொல்லணுமா என்ன..!’’

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

“பி.ஜி.முத்தையா இந்தப் படத்துக்கு நல்ல ஒளிப்பதிவாளரா, இல்லை, நல்ல தயாரிப்பாளரா?”

3 டி-யில் ஒரு பேய்ப்படம்!”

``ரெண்டுமேதான். ஒரு நாள் சாயங் காலம் 5 மணிக்குள்ளேயே ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. ஒரே ஒரு ஷாட் மட்டும் நைட் எஃபெக்ட்ல எடுக்கணும். நான் முத்தையா சார்கிட்ட, `நைட் மோடு ஆன் பண்ணிட்டு அந்த ஷாட்டை எடுத்திடலாம் சார்’னு சொன்னேன். `இல்லை. 6 மணிக்கு மேல இருட்டிடும்; அப்புறம் எடுத்துக்கலாம். அப்போதான் அந்த ஷாட் நல்லா வரும்’னு சொன்னார். இந்த இடத்தில் ஒரு ஒளிப்பதிவாளரா அவரோட ஈடுபாடு என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். ஆனால், 6 மணிக்கு மேல ஷூட்டிங் போனா எல்லா டெக்னீஷியனுக்கும் டபுள் பேட்டா கொடுக்கணும். அதையும் ஒரு தயாரிப்பாளரா பெருசா எடுத்துக்காம அந்த ஷாட்டை ஆறு மணிக்கு மேல எடுத்தார். இது ஒண்ணு போதாதா?!”

மா.பாண்டியராஜன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism