Published:Updated:

“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

“நாங்க மியூசிக் ஃபேமிலி!”
பிரீமியம் ஸ்டோரி
“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

Published:Updated:
“நாங்க மியூசிக் ஃபேமிலி!”
பிரீமியம் ஸ்டோரி
“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

‘காற்றின்  மொழி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார், ஏ.ஹெச்.காஷிஃப். ஏ.ஆர் ரஹ்மானின் தங்கை பாத்திமாவின் மகன். “இசைதான் எங்க குடும்பத்துக்கு எல்லாமே. ரஹ்மான் மட்டும் இல்லைனா, எங்க குடும்பமே இல்லை. அவர் மியூசிக்ல நானும் பாடியிருக்கிறேன் தெரியுமா?” என்று நம்மை ஆச்சர்யமூட்டுகிறார். ஃபாத்திமா. 

“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

“என் கூடப் பிறந்தவங்க மூணு பேர், ரஹ்மான் அண்ணன், ரெஹானா அக்கா மற்றும் இஷ்ரத் தங்கச்சி. எல்லோருமே மியூசிக்ல இருக்க, ஜி.வி.பிரகாஷும், அவன் தங்கச்சி பவானியும் திரையில ஜொலிக்கிறாங்க. ஆமா, ‘போ போ என்’, ‘காதல்’ மியூசிக் வீடியோக்களில் பவானி நடிச்சிருக்காங்க. எங்க குடும்பத்துல இருந்து ஜி.வி நடிக்கப் போனப்போ சர்ப்ரைஸா இருந்துச்சு, சந்தோஷப்பட்டோம். மியூசிக்கையும் விட்டுடக்கூடாதுன்னு அறிவுரை சொன்னோம். என் மகள் பெயர் அமீனா, 11-ஆம் வகுப்பு படிக்கிறாங்க. இப்போதைக்கு பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பிச்சிருக்கா, பாடுறதுக்கு டிரெயினிங் எடுத்துக்கிட்டிருக்கா. 

காஷிஃப்புக்கு சின்ன வயசுல இருந்தே இசை ஆர்வம். ரஹ்மான் அண்ணா வீட்டுல இருக்கிற கீ-போர்டுல ரெண்டு வயசு இருக்கும்போதே வாசிக்க ஆரம்பிச்சுட்டான். பிறந்தநாள் பரிசாகூட கீ-போர்டுதான் வேணும்னு கேட்பான். மூணு வயசா இருக்கும்போது, இவனுக்கு மியூசிக் கத்துத்தர வந்த மாஸ்டர், இவன் கேட்குற கேள்விகளைப் பார்த்து, ‘இனி உனக்கு நான் மியூசிக் கத்துத்தர முடியாது’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஏன்னா, இவன் கேள்விகளுக்கு அவர்கிட்ட பதில் இல்ல” என்று அம்மா சொல்லி முடிக்க, காஷிஃப் ஆரம்பித்தார்.

“எனக்கு மூணு வயசு இருக்கிறப்போ, ரஹ்மான் மாமா ‘சின்னச் சின்ன ஆசை’ பாட்டை வாசிக்கச் சொல்லிக்கொடுத்தார். அடுத்தநாள் மாமாவைப் பார்க்கும்போது அந்த ஸ்வரத்தை வெச்சு இன்னொரு பாடலும் சேர்த்து கம்போஸ் பண்ணி எடுத்துக்கிட்டுப் போனேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம், ஆச்சர்யமும்கூட. 9-வது படிக்கும்போது மாமாகிட்ட இன்டர்ன்ஷிப் போனேன். ‘வெஸ்டர்ன் பாடலை மட்டும் நீயே கத்துக்கோ. இவ்ளோ திறமை இருக்கிற நீ அதை ஈஸியா கத்துக்கலாம்’னு சொன்னார். தாஸ் டேனியல் மாஸ்டர், கிரி மாஸ்டர் இவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து வெஸ்டர்ன் கத்துக்கிட்டேன்.

சன் ஷைன் ஸ்கூல் வேலைகளைப் பார்க்கவும், சினிமா வேலைகளைப் பார்க்கவுமே ரஹ்மான் மாமாவுக்குப் பாதிநேரம் போயிடுது. 2012-ல ஒலிம்பிக் கல்ச்சுரல் ஈவென்ட்ல பங்கேற்க எனக்கு சான்ஸ் கிடைச்சது. லண்டன் ஒலிம்பிக் மேடையில 15 நிமிடம் மியூசிக் பண்ற வாய்ப்பு அது. மாமாவின் உதவியோட பாடல்களை கம்போஸ் பண்ணி அங்கே வாசிச்சேன். ஸ்கூல் படிப்பு முடிந்ததும் லயோலாவுல விஸ்காம் சேர்ந்தேன். மூணு செமஸ்டர்தான் போனேன், டிஸ்கன்டினியூ பண்ணிட்டேன். ஒருநாள் நண்பன் அஸ்வின் வீடியோ ஆல்பம் பண்ணலாம்னு ஐடியா சொன்னான். ‘கண்ணாளனே’ பாடலை ஏற்கெனவே கம்போஸ் பண்ணி வெச்சிருந்தேன். ‘கண்ணாளனே’, ‘காதல்’, ‘போ போ என்’ ஆகிய மூணு ஆல்பங்கள் இதுவரைக்கும் ரிலீஸ் பண்ணியிருக்கேன். பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனா, சினிமாவுக்கு மியூசிக் பண்ற அளவுக்கு தைரியம் அப்போ இல்லை” என்றார், காஷிஃப். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

“சின்ன வயசுல இருந்தே மியூசிக்ல நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கீங்க. காற்றின் மொழிக்கு இசையமைக்கிறதுக்கான காரணம் என்ன?” எனக் கேட்டதற்கு, “ராதாமோகன் - ஜோதிகா கம்போ எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, இந்தப் படத்துல என்னை அறிமுகமாக்குறதைப் பெருமையா நினைச்சாங்க. மாமா அளவுக்கு வரமுடியுமான்னு தெரியலை. அவர் பாராட்டற அளவுக்கு, கொஞ்சமாவது மியூசிக் பண்ணணும்னு எனக்குக் குறிக்கோள். ‘துமாரி சுலு’ பாடல்களை ஏற்கெனவே கேட்டிருக்கேன். படத்தோட கதையைத் தெரிஞ்சுக்கிறதுக்காக அந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனா, அதுல இருந்து எதையுமே எடுத்துக்கக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன்” என்றார்.
 
“எனக்குப் பாடகி ஆகணும்னு ஆசை. ரேடியோவுல ஒருசில நிகழ்ச்சிகள்  பண்ணியிருக்கேன். அண்ணாவோட இசையில் மூணு பாட்டு பாடியிருக்கேன். ஷாக் ஆகாதீங்க... எல்லாமே கம்போஸ் பண்ணிட்டிருந்த சமயத்துல டிராக்குக்குப் பாடியது. இதுவரை ‘ரோஜா’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘திருடா திருடா’ ஆகிய படங்கள்ல பாடியிருக்கேன். அப்புறம் கல்யாணம் ஆயிருச்சு. அண்ணன் வீட்டுக்குப் போறது குறைஞ்சிருச்சு. காஷிஃப் 11-வது படிக்கும்போது சும்மா ஒரு பாடல் கம்போஸ் பண்ணினான். அதுக்கு நான் வரிகள் எழுதிக் கொடுத்தேன். அதைப் பாட்டாகவும் பாடிக் காட்டியிருக்கேன். எப்படியெல்லாம் இவனுக்கு சப்போர்ட் பண்ண முடியுமோ, பண்ணியிருக்கேன்” என்றார் பாத்திமா.

“லயோலா காலேஜ் விஸ்காம் இன்டர்வியூ அப்போ, வெற்றி மாறன் சார் ‘உன் திறமை என்ன’ன்னு கேட்ட கேள்விக்கு, நான் கம்போஸ் பண்ணிய முதல் பாடலைப் போட்டுக் காட்டினேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘இது உனக்கு யார் கம்போஸ் பண்ணிக் கொடுத்தா, எங்கே மிக்ஸ் பண்ணுனே’ன்னு கேள்விகள் கேட்டார். கடைசியில அட்மிஷன் கொடுத்துட்டார். முதல் வருடமே நிறைய வகுப்புகளை மிஸ் பண்ணிட்டேன். காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் வேற!” என காஷிஃப் சிரிக்க, அம்மா குறுக்கிட்டார். “ஆமா, 39 வயசுல நான் லயோலாவுல ஹெச்.ஆர் கோர்ஸ் பண்ணினேன். கிளாஸ்ல என்னைவிட எல்லோரும் சின்னப் பசங்களா இருந்தாங்க. ஸ்ட்ரிக்டா இருந்ததுனாலதான் நிறைய கத்துக்க முடிஞ்சது” என்றார்.

“கீ-போர்டு கத்துக்கிறது மியூசிக்ல பாதிக் கடலைத் தாண்டுறதுக்குச் சமம். நடுவுல கொஞ்சம் டிரம்ஸ் கிளாஸுக்குப் போனேன். வேலைக்கே ஆகல. அந்த மாதிரிதான் அம்மா ஹெச்.ஆர் கிளாஸுக்குப் போனதும்! கரெக்ட்டா அம்மா?!” என்று கிண்டலடித்தார், காஷிஃப்.

“நாங்க மியூசிக் ஃபேமிலி!”

“எங்க வீட்டுக்கு எதிர்ல இருக்கிற எம்ஜிஆர் ஸ்கூல்ல இருந்து ஆறு வருடத்துக்கு முன்னாடி மியூசிக்ல ஆர்வமுள்ள பசங்களைக் கண்டெடுத்தோம். அவங்க எல்லோரும் வசதி இல்லாத பசங்க. அவங்களுக்கு மியூசிக்ல டிரெயினிங் கொடுத்தோம். சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா சென்னையில இல்லை. அதை நாம ஏன் உருவாக்கக்கூடாதுன்னு நினைச்சுதான் இந்த முடிவெடுத்தோம். ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இப்போ கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு வருது. எல்லாமே எலெக்ட்ரிக்கா மாறிடுச்சு. ஸோ, அந்தப் பாரம்பர்ய இசை நம்மைவிட்டுப் போயிடக்கூடாதுன்னு சன் ஷைன்ல கிளாஸ் எடுப்போம். இந்தக் குழந்தைகள் ஐநா சபை வரைக்கும் போய் மியூசிக் பண்ணிட்டு வந்திருக்காங்க. காஷிஃப் அப்பா முகமது ரஃபீக், ஆரம்பத்துல டெக்ஸ்டைல் பிசினஸ், அதுக்கப்புறம் ரியல் எஸ்டேட் பிசினஸ்னு பல வேலைகள் பார்த்துக்கிட்டிருந்தார். இப்போ அண்ணாவோட சேர்ந்து அவரோட இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிற வேலையைப் பார்க்கிறார்” என்றார் பாத்திமா.

“ஜி.வி.பிரகாஷ் என் கம்போஸிங்கைக் கேட்டு, அப்பப்போ அறிவுரை சொல்வார். ரெண்டு பேரும் மியூசிக் பத்தி அதிகமா உரையாடுவோம். எங்க ரெண்டுபேருக்கும் பதில் சொல்லிச் சமாளிக்கிறதுதான், மாமாவோட வேலை. என்கூட இப்போ வேலை பார்க்கிற எல்லோருமே மாமா டீம்ல உள்ளவங்க. சின்ன வயசுல இருந்தே மாமாவோட வேலை பார்க்கிற  பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரையும் எனக்கும் நல்லா தெரியும். ‘ஒன் ஹார்ட்’ படம் மூலமா உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்... அவங்கதான் எனக்கு இப்போ சப்போர்ட் பண்றாங்க. என் 18-வது பிறந்தநாளுக்கு அப்பா எனக்குக் கொடுத்த பரிசு ஸ்டுடியோ. அதுல இருக்கிற கீ-போர்டு மாமாவோடது” என்ற காஷிஃப் தொடர்ந்தார்.

“சண்டே எங்களுக்கு ஃபேமிலி டே. அன்னைக்கு எங்க பாட்டி வீட்டுக்கு எல்லோரும் வந்தே ஆகணும்னு ரூல். இல்லைனா, முதல் ஆளா கோபப்படுறது ரஹ்மான் மாமாதான். ஃபேமிலி கெட்-டு-கெதரை ஆரம்பிச்சதும் அவர்தான். அடுத்து மலையாளத்துல மம்மூட்டி நடிக்கிற ‘பதினெட்டாம் படி’ படத்துக்கு மியூசிக் பண்ணிக்கிட்டிருக்கேன்” என உற்சாகமாக முடித்தார் காஷிஃப்.

சுஜிதா சென் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism