Published:Updated:

`நடிக்கும்போது விஜய் சேதுபதி செல்லமா சொல்லிக் கொடுப்பாங்க!'- குஷியில் `பேபி' மானஸ்வி

`நடிக்கும்போது விஜய் சேதுபதி செல்லமா சொல்லிக் கொடுப்பாங்க!'- குஷியில் `பேபி' மானஸ்வி
`நடிக்கும்போது விஜய் சேதுபதி செல்லமா சொல்லிக் கொடுப்பாங்க!'- குஷியில் `பேபி' மானஸ்வி

`இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் நம்மைக் கவர்ந்த சுட்டி மானஸ்வி. இவர் நடிகர் கொட்டாச்சியின் மகள். மானஸ்வி தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

``ஹாய்.. எல்லோருக்கும் ஹாப்பி நியூ இயர்! நான் இப்போ ஒரு கிராமத்துல இருக்கேன். விஜய் சேதுபதி அங்கிள் என்கூடத்தான் இருக்காங்க. நியூ இயரை நான் விஜய் சேதுபதி அங்கிளோட செமையா செலிபிரேட் பண்ணேன். நியூ இயர் அன்னைக்கு அங்கிள் எனக்குப் பணம் கொடுத்தாங்க. அப்புறம் முத்தம் கொடுத்தாங்க. ஷூட்டிங் ஸ்பார்ட்டுல என்னை `மானு' இல்லைன்னா `கொட்டாச்சி பொண்ணு'ன்னு செல்லமா கூப்பிடுவாங்க. ஷூட் இல்லாதப்போ என்கூட ஜாலியா விளையாடுவாங்க. நாங்க தினமும் நிறைய நேரம் விளையாடிட்டே இருப்போம். ஆனா, கேமரா முன்னாடி நடிக்கும்போது ``ஏய்! ஒழுங்கா நடின்னு" செல்லமா சொல்லிக் கொடுப்பாங்க. என் அங்கிள் ரொம்ப ஸ்வீட்..! 

இப்போ ஷூட்ல இருக்கிறதுனால ஸ்கூலுக்கு லீவு சொல்லிட்டேன். ஷூட்டிங் ஸ்பார்ட்டில் ஹோம்ஒர்க் எதுவுமில்லாம ஜாலியா இருக்கேன். 'இமைக்கா நொடிகள்' படத்துல அங்கிள்கூட டிராவல் பண்ண முடியலைன்னு வருத்தப்பட்டேன். ஆனா, இப்போ நானும், அங்கிளும் மட்டும்தான் இருக்கோம்!" எனப் புன்னகைக்கிறார், மானஸ்வி.