Published:Updated:

“திராவிடர்கள் திரள வேண்டும்!”

“திராவிடர்கள் திரள வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“திராவிடர்கள் திரள வேண்டும்!”

“திராவிடர்கள் திரள வேண்டும்!”

“திராவிடர்கள் திரள வேண்டும்!”

“திராவிடர்கள் திரள வேண்டும்!”

Published:Updated:
“திராவிடர்கள் திரள வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“திராவிடர்கள் திரள வேண்டும்!”

சினிமா நடிகர் அந்தஸ்து அரசியலுக்கு முதல்படியா, ஆந்திராவில் மெகா ஸ்டாராக இருந்தும் அண்ணன் சிரஞ்சீவியின் அரசியல் கனவு தகர்ந்தது ஏன், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் அணி அல்லது மாற்று அணியை முன்னிறுத்துவதற்குப் பிரதமர் பதவி ஆசைதான் காரணமா? எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது, பவன் கல்யாணிடம். சென்னை வந்திருந்தவரிடம் பேசினேன்.

“திராவிடர்கள் திரள வேண்டும்!”

“நீங்க பவன் கல்யாணா, பவர் ஸ்டாரா?”

“நான் என்னைக்குமே பவன் கல்யாண்தான். சென்னையில் படிக்கும்போது எப்படி இருந்தேனோ, அதேமாதிரி தான் என்னை நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். நான் நடிக்க வந்தது, தற்செயலானது. அது எனக்கு ஒரு சம்பாத்தியம் தரக்கூடிய வேலை. நான் நடிக்கிறது பிடிச்சுப் போய் மக்கள் எனக்குப் பவர் ஸ்டார் பட்டத்தைக் கொடுத்தி ருக்காங்க. நான் அந்தப் பட்டத்தை என்னைக்கும் என் தலைக்கு ஏத்திக்கிட்ட தில்லை; ஏத்திக்கவும் மாட்டேன்.”   

“ஆந்திர சினிமாவுல உச்ச நட்சத்திரம், பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு. இதுதான் அரசியல் ஆசைக்கும் காரணமா?” 

 
“சென்னையில் இருக்கும்போது தான் எனக்கு அரசியல் விழிப்பு உணர்வு வந்தது. நான் இங்கே படிக்கும்போது, பூதாகரமா இருந்த தமிழ் ஈழப் பிரச்னை என் சமூக உணர்வுக்கு ஒரு காரணம். மக்களுக்குச் சில விஷயங்கள் செய்யணும்னுதான் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கினேன். இப்போ, அரசியல் களம்தான் எனக்குத் திருப்தியா இருக்கும்னு தோணுது.”

“அண்ணன் சிரஞ்சீவிக்கு  அரசியல் வாழ்க்கை பிரகாசமா அமையலை. உங்க அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினைக்குறீங்க?”

“சிரஞ்சீவி அண்ணனின் பிரஜா ராஜ்யம் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நான் ‘காமன் மேன் புரொடெக்‌ஷன் ஃபோர்ஸ்’னு தொண்டு நிறுவனத்தை நடத்திக்கிட்டு இருந்தேன். இது மக்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசுகிற அமைப்பாக இருந்தது. 2008-ல்தான் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சார். அண்ணன் கட்சியில சேர்ந்து வேலை பார்க்கச் சொன்னாங்க. ஆனா அப்போ, அண்ணன்கூட இருந்தவங்க சரியில்லை. மூன்று வருடத்துலேயே அண்ணன் கட்சியை காங்கிரஸோட இணைச்சுக்கிட்டார். என்னைப் பொறுத்தவரை ஒரு கட்சியை ஆரம்பிக்கிறதைவிட, அதை வழி நடத்துறது பெரிய விஷயம். அரசியலுக்காக நிறைய தியாகங்களை செய்யணும். நம்ம குடும்பம், நாமனு இருக்கமுடியாது. இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டுதான் நான் என் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கேன். நான் கட்சி ஆரம்பிக்கிறப்போ, ரஜினி சார் மாதிரியோ, சிரஞ்சீவி சார் மாதிரியோ எனக்குப் பெரிய சப்போர்ட் இல்லை. தெலுங்கானா பிரிவினை சமயத்துல உள்ள வர்றேன், நான் ஏதாச்சும் தப்பா பேசிட்டா ஏன் தலையை எடுத்துடுவாங்க. என் விடாமுயற்சியால மட்டும்தான் நான் நிலைக்க முடியும்... இப்படி எல்லாத்தையும் உணர்ந்தேன். இன்னொரு விஷயம், நான் ஒரு அரசியல்வாதியா நின்னு கருத்து சொல்றதைவிட, மக்கள்ல ஒருவரா இருந்து அவங்களோட ஆதங்கத்தைச் சொல்லணும்னுதான் எனக்குத் தோணுச்சு. அதுதான், என்னை இங்கே நிற்க வெச்சிருக்கு.”

“மக்கள் மாற்றம் வேணும்னு நினைக்கும்போது, 2014-ல நீங்க தெலுங்கு தேசம் கட்சிக்கும், பா.ஜ.க-வுக்கும் ஆதரவு தெரிவிச்சது சரியா?”

“அதுக்காக நான் வருத்தப்படுறேன். இதுமூலமா, சந்திரபாபு நாயுடுகிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு கத்துக்கிட்டேன். அவர் எப்போ நண்பரா இருப்பார், எப்போ எதிரியா மாறுவார்னு தெரியாது.”

“சினிமா பிரபலமா இருக்கிறது, அரசியல்வாதியா மாறுவதற்கான முதல்படியா நினைக்கிறீங்களா?”
 
“அப்படி இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகவோ, ஆசிரியர் ஆகவோ நிறைய படிக்கணும். மக்களுக்காக ஆட்சி செய்யணும்னு நினைக்கிற அரசியல்வாதி ஆகுறதுக்கு நிறைய அனுபவம் தேவை. அதுக்கு சமூகத்துல இறங்கி வேலை செய்யணும். நான் அதுக்குத் தயாரா இருக்கேன். கண்டிப்பா என்னால ஓவர்நைட்ல எல்லாத்தையும் மாத்திட முடியாது. சில காலங்கள்ல அந்த அனுபவமும், பக்குவமும் எனக்குக் கிடைக்கும்.” 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“திராவிடர்கள் திரள வேண்டும்!”

“இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை வடஇந்தியா மட்டும் முடிவு பண்ணுதுனு எப்படிச் சொல்றீங்க?”

“இந்தியாவை ஆளும் கட்சி யார்னு தேர்ந்தெடுப்பதில் பீகார் மற்றும் உத்திரப் பிரதேச மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் பங்கு வகிக்கும். தேசத்தின் வளர்ச்சியில், கலாசாரத்தில் முக்கியப் பங்காற்றும் தென்னிந்தியாவில் குரல்கள் அதிமாக வேண்டும் என்று  நான் நினைக்கிறேன். அதன் முயற்சியாக, தென்னகத்தின் முக்கியத்துவத்தை சொல்லக்கூடியவர்களை ஒரு அணியாகத் திரட்டவிருக்கிறேன். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா... என திராவிட கலாசாரத்தைப் பின்பற்றும் அணியாக அது இருக்கும்.”

“தென் மாநிலங்களை ஒன்று திரட்ட நினைக்கும் முயற்சி இருக்கட்டும்... இந்த மாநிலங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ (சிரிப்புடன்) காவிரி, கிருஷ்ணா, பெண்ணாறு... என நீர் பகிர்மானப் பிரச்னைகள்தான் இதுல பிரதானமா இருக்கும். அந்தப் பிரச்னைகள் அப்படியே இருக்கட்டும். குடும்பத்துக்குள்ள சண்டைகள் இருப்பது சகஜம்தான். அதை சரி பண்ணிக்கலாம். அது வேற; இது வேற. இந்த நேரத்துல நமக்குள்ள இருக்கிற பிரச்னைகளைவிட, நமது உரிமைகள்தான் முக்கியம். அதுக்காக திராவிடர்கள் திரளவேண்டும்.”

“பவன் கல்யாண் ஆந்திராவின் முதல்வரானா, அண்டை மாநிலத்துடனான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?”  
 
“கண்டிப்பா! நாம எந்தப் பிரச்னையை எப்படி அணுகுகிறோம்ங்கிறதுலதான் நல்ல தீர்வு கிடைக்கும். என்.டி.ஆர் சார் இருக்கும்போது, எம்.ஜி.ஆர் சாருக்காக நெல்லூரை விட்டுட்டு சென்னைக்குக் கொண்டுவந்ததுதான், தெலுங்கு கங்கா திட்டம். அவர் அந்தத் திட்டத்தால தன் மக்கள் தனக்கு எதிராகத் திரும்புவாங்கனு யோசிச்சதைவிட, நெல்லூர் மக்களை எப்படி சமாதானப்படுத்தலாம்னுதான் யோசிச்சார். அப்படித்தான் நாமளும் சிந்திக்கணும். எல்லாப் பிரச்னைக்கும் இங்கு தீர்வு இருக்கு. அதைப் புரிஞ்சுக்கிட்டு, மாநிலங்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை பாதுகாக்கணும்.”

“ஏன் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவிச்சீங்க?”

“ ‘சத்யாகிரஹி’ என்ற படத்தை நான் எழுதி இயக்குறதா இருந்தது. அந்தப் படம் வந்திருந்தா, பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். ஆனா, அதே விஷயத்தை நான் ரியலா அரசியல்ல பண்ணா நல்லா இருக்கும்னுதான், அரசியலுக்கு வந்துட்டேன். சில விஷயங்களை நேரடியா செஞ்சா திருப்தி கிடைக்கும். அதனாலதான், இந்த முடிவு.”

“பெரியார் , அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றுகிற நீங்க, சாதி, ஆணவக்கொலைகளைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“இந்தியா சாதிகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகம். இதை முதல்ல புரிஞ்சுக்கணும். ஜெர்மன்ல இருக்கிற ஒரு தொழிற்சாலை, அங்கிருக்கும் தொழி லாளர்களுக்குப் பாதிப்பை உண்டாக்கினால், அது வர்க்கப் பிரச்னையாக மட்டுமே மாறும். இந்தியாவில்தான், அது சாதிப் பிரச்னையாக உருவெடுக்கும். உதாரணத்துக்கு, ஒரு சுரங்கம் தோண்டுவதாக இருந்தால், அந்தத் திட்டம், அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களைப் பாதிக்கும். சுரங்கத்தைத் தோண்டும் முதலாளி ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருப்பார், பாதிப்படையும் மக்கள் வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆணவக் கொலைகள் விஷயத்துல மக்களுக்கு நிறைய கவுன்சிலிங் தேவைப்படுகிறது. சாதியம் ஆழமாக வேர் பிடித்திருக்கிறது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும். எல்லா மக்களையும் படிப்பு, சமுதாய, பொருளாதார ரீதியாக மேம்படுத்தணும். இதெல்லாம் நடக்கும்போது, இந்தப் பிரச்னைகள் மாறும்.”

அலாவுதீன் ஹுசைன் - படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism