Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ஹ்லாஜ் நிஹ்லானி  முன்பு சென்சார் போர்டு தலைவராக இருந்தபோது கலாசாரக் காவலராக கத்திரியும் கையுமாகத்தான் அலைந்துகொண்டிருப்பார். ஜேம்ஸ் பாண்ட் பட முத்தக்காட்சிகளைக்கூட வெட்டி எறிந்தவர். இப்போது அவர் இயக்கியிருக்கும் ‘ரங்கீலா ராஜா’ படத்துக்கு சென்சாரில் சிக்கல் வந்திருக்கிறது. இந்தப்படம் பெண்களைத் தவறாகச் சித்தரிக்கிறது, ஆணாதிக்கத்துக்கு ஆதரவான கருத்துகளைப் பரப்புகிறது எனப் படத்தில் இருந்து பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லியிருக்கிறார் தற்போதைய சென்சார் கமிட்டி தலைவர் பிரஸூன் ஜோஷி. பஹ்லாஜ் நிஹ்லானிக்கு இது தேவைதான் என ஒரு தரப்பு சென்சார் முடிவை கொண்டாட, செம கடுப்பில் இருக்கிறார் நிஹ்லானி. சிக்கலா ராஜா?

‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசனோடு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால் ஒரு கதாநாயகியாக முடிவு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு அல்லது துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. பாலிவுட்டிலிருந்து மேலும் ஒரு டாப் ஹீரோயினும் இந்தியனில் இடம்பெறக்கூடும் என்கிறார்கள். அதற்கு நடுவில் படத்திற்கான் செட் வேலைகள் பரபரவென நடக்க, 2.0 ரிலீஸ் முடிந்ததும் படத்தின் படப்பிடிப்பு புயல்வேகத்தில் தொடங்கவிருக்கிறது. சிம்புதான் பேரனா?

ஜினி  நடித்து வெளிவந்த ‘முத்து’ திரைப்படத்தை மீண்டும் ஜப்பானில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். டிஜிட்டல் 4k தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டு ‘நமஸ்கார் முத்து : ஓடுரு மஹாராஜா’ என்ற பெயரில் படம் வெளியாகி இருக்கிறது. அதையும் ஒரு திருவிழா போலக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் ஜப்பானிய ரசிகர்கள். ரஜினி ஜப்பான் அரசியலுக்குப் போவாரோ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

தீபிகா-ரன்வீர் திருமண ஆடைகளை வடிவமைத்தது கோலி- அனுஷ்கா ஜோடிக்கு ஆடை வடிவமைத்த சபியாசாச்சி முகர்ஜி எனத் தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. ஆனால் தீபிகாவின் ‘கொங்கனி’ ஸ்டைல் திருமண ஆடைகளின் டிசைனர் தீபிகாவின் அம்மா உஜ்ஜாலா படுகோன் என்பதுதான் ஸ்வீட் சர்ப்ரைஸ். இத்தாலியில் திருமணம் நடத்தினாலும் தன் மகளுக்குப் பெங்களூரில்தான் புடவை வாங்கியிருக்கிறார் உஜ்ஜாலா. புடவையில் கர்நாடக மாநிலத்தின் அரசுச் சின்னம் எல்லாம் வைத்து தன் மாநிலப் பற்றைக் காண்பித்திருந்தார் உஜ்ஜாலா. அம்மான்னா சும்மா இல்லை!

இன்பாக்ஸ்

ருணாச்சல பிரதேச சுற்றுலாத் துறையின் விளம்பரத் தூதுவராக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேச சுற்றுலாவை வளர்க்கும் முயற்சியாக ‘மெச்சுக்கா அட்வெஞ்சர் ஃபெஸ்டிவல்’ (Mechuka Adventure Festival ) என்ற விழாவையும் தொடங்கி வைத்திருக்கிறார் சல்மான். அங்கே மான்கள் நிறைய இருக்குமே!

ந்தியாவின் அந்தமான்- நிக்கோபர் தீவுகளுக்கு அருகே அமைந்திருக்கும் மிகச்சிறிய தீவுதான் சென்டினல். உலகின் மிக மூத்த பழங்குடியினரான சென்டினல் மக்கள் இங்கு வசித்துவருகிறார்கள். இந்த சென்டினல் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீவுக்குள் வெளியாட்கள் யாரும் நுழையக்கூடாது என்று அறிவித்து, சுயாட்சி அதிகாரத்தை இந்தத் தீவுக்கு அளித்திருக்கிறது இந்திய அரசு. ஆனால், சட்டத்தை மீறி மீனவர்களின் துணையுடன் தீவுக்குள் நுழைந்த அமெரிக்க மதபோதகர் ஆலனை வில் அம்பு எய்தி கொன்றிருக்கிறார்கள் சென்டினல் மக்கள். இப்போது ஆலனின் சடலம் வேண்டும் என்று இந்தியாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறது அமெரிக்கத் தூதரகம். பழங்குடிகளை வாழவிடுங்க!

இன்பாக்ஸ்

தென்னிந்திய திரையலகில் பிரபலமான நடன இயக்குநர் தில் சத்யா. அவர் இயக்கவுள்ள பன்மொழிப் படத்தில்  முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் ஆன்ட்ரியா. ‘இது ஒரு ஆக்‌ஷன், ஹாரர் பேன்டஸி படம். ஹாலிவுட் நாயகிகளைப் போன்ற உடலமைப்பும் நடிப்புத் திறமையும் கொண்ட நாயகியைத் தேடியபோது, அந்த கேரக்டருக்கு ஆன்ட்ரியாதான் கச்சிதமாக இருப்பார் என முடிவெடுத்து அவரை நடிக்கவைத்திருக்கிறோம்’’ என்கிறார் தில்சத்யா.  தென்னிந்திய ஏஞ்சலினா

இன்பாக்ஸ்

யக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த மணிமாறன் இயக்கும் படம் ‘சங்கத்தலைவன்’. இது பாரதிநாதனின் ‘தறியுடன்’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம். படத்தில் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த ரம்யா முதல்முறையாக நாயகியாக நடித்திருக்கிறார். அடுத்த அரசியல் சினிமா!

லகெங்கும் வைரலான #KiKichallenge போல இப்போது இந்தியா முழுக்க `நில்லு நில்லு சாலஞ்ச்’ என ஒன்றை சமூகவலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர் கேரள இளைஞர்கள். ஒடும் பேருந்திற்கு முன்னால் நின்று `நில்லு நில்லு’ என்று பாடுவது போல் வீடியோக்களை ‘டிக் டாக்’கில் பகிர்ந்து வருகின்றனர். 2004ம் ஆண்டு வெளிவந்த ‘Rain Rain Come Again’ என்ற மலையாளப் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றது. வைரல் ஃபீவர்ஸ்

இன்பாக்ஸ்

டைசி நம்பிக்கையான கிங்ஸ் லெவன் பஞ்சாபும் கழற்றிவிட, மீண்டும் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார் யுவராஜ் சிங்.  2019 ஐ.பி.எல் ஏலத்துக்கு முன், வேண்டாத வீரர்களையெல்லாம் ஐ.பி.எல் அணிகள் விடுவிக்கின்றன. இதில் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் யுவராஜ் சிங். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்கு ஏலம்போய் சாதனை படைத்தவர்  யுவராஜ். ஆனால், கேன்சரை வென்றுவந்த 36 வயதான யுவராஜை இப்போது எந்த அணியும் வாங்க விரும்பவில்லை.  2018- ஐபிஎல்லுக்காக நடந்த ஏலத்தில் பஞ்சாபின் ப்ரீத்தி ஜிந்தாவைத் தவிர வேறு யாரும் யுவராஜ் சிங்கை ஏலம் கேட்கவில்லை.  கடந்த சீசனே இதுதான் நிலைமை என்பதால் இந்த ஆண்டு யுவராஜ் சிங்கை வேறு யாரும் ஏலத்தில் எடுக்கமாட்டார்கள் என சோக ஸ்மைலி போடுகிறார்கள் யுவி ரசிகர்கள். ஓய்வு துரத்துது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism