Published:Updated:

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”
பிரீமியம் ஸ்டோரி
“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

Published:Updated:
“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”
பிரீமியம் ஸ்டோரி
“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“இசைக்கருவி செய்யும் குடும்பத்திலி ருந்து ஒரு பையன் இசை கத்துக்க வந்தால் எப்படி இருக்கும் என்பதில் நந்தனார் சரிதத்தையும் சேர்த்து ஒரு கதை எழுதினேன். அதுதான் ‘சர்வம் தாளமயம்.’  படத்தில் நந்தனாரான பீட்டர், சிவனான சங்கீத குருவிடம் இசை கத்துக்கக் காத்திருக்கிறார். பீட்டரைத் தன்னுடைய சிஷ்யனாக அவர் ஏற்பாரா, மாட்டாரா என்பதுதான் கதை’’ - மலையாளம் கலந்த தமிழில் அழகாகப் பேசுகிறார், ராஜீவ் மேனன்.

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“இசை தெரிந்த நடிகராக இருக்கிறனாலதான் ஜி.வி.பிரகாஷை ஹீரோவாகத் தேர்ந்தெடுத்தீங்களா?”

“ஆமா. அதுமட்டும்தான் ஒரே காரணம். முதலில் மிருதங்கம் வாசிக்கிற சில ஆட்களை நடிக்க வைக்கலாம்னு ஆடிஷன் பண்ணினேன். அவங்களுக்கு நடிக்கிறது கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்புறம் ஜி.வி-யை நடிக்க வைக்கலாம்னு அவருக்கு ஆடிஷன் வெச்சு, ஓ.கே பண்ணினேன்.ஜி.வி மத்த படங்களுக்கு எப்படி வொர்க் பண்றார்னு தெரியலை; ஆனால், இந்தப் படத்துக்கு பயங்கரமா உழைச்சிருக்கார். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி உமையாள்புரம் சிவராமன் சார்கிட்ட ஒரு வருஷம் மிருதங்கம் கத்துக்க ஜி.வி-யை அனுப்பி வெச்சேன். அதுமட்டுமல்லாமல்  படத்துல ஒரு ட்ராவல் போர்ஷன் இருக்கு. அது ஷூட் பண்ணும் போதெல்லாம் பாத்ரூம் வசதிகூட இல்லாத இடத்தில் எடுத்தோம். பாத்ரூம் போகணும்னா ஸ்பாட்டிலிருந்து கொஞ்ச தூரம் பைக்ல போகணும். அந்த சிரமத்தை எல்லாம் பெருசா எடுத்துக்காம வொர்க் பண்ணினார் ஜி.வி.’’

“மற்ற நடிகர்களும் இசைக்குத் தொடர்புள்ளவர்கள்தானா?”

“ஆமா. ஜி.வி-க்கு மிருதங்கம் சொல்லிக் கொடுக்கிற குருவா நெடுமுடி வேணு நடிச்சிருக்கார். வேணு பிரமாதமா மிருதங்கம் வாசிக்கக்கூடியவர். அவருக்கு உதவியாளரா வினித் நடிச்சிருக்கார். குருவிடம் பீட்டரை நெருங்கவிடக்கூடாதுன்னு திட்டம் போடுற நெகட்டிவ் ரோல் வினித்துக்கு. ’மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் நடிச்ச அபர்ணாதான் இந்தப் படத்தோட ஹீரோயின். அவரும் ஒரு இசைக் குடும்பத்திலிருந்து வந்தவர்தான். இந்தக் கதாபாத்திரங்கள் தவிர டிடி ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருக்காங்க.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே அவரோட படங்களில் புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்துவார்... இசை சம்பந்தப்பட்ட படத்தில் அது எந்தளவுக்கு இருக்கு?”

``படத்தில் அதிகமா மிருதங்கம் பயன்படுத்தியிருப்பதால் பாடல்களிலும் ரீரெக்கார்டிங்கிலும் வித்தியாசமான இசைக்கருவிகளை வெச்சு புது புது சவுண்ட்ஸைப் பயன்படுத்தியிருக்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்காக ரெண்டு வருஷமா வேலை பார்த்துட்டிருக்கார்.’’

“பயங்கர பிஸியா இருக்கிற ஏ.ஆர்.ரஹ்மான், இந்தப் படத்துக்காக ரெண்டு வருஷமா வேலை பார்த்துட்டிருக்கார்னா, அதுக்கு ஸ்கிரிப்ட்டைத் தாண்டி உங்களோட நட்புதான் காரணமா இருக்கும்... இந்த நட்பு எப்போ ஆரம்பிச்சது?”

‘`நான் பண்ணின ஒரு விளம்பரத்துக்கு சில்வர் தட்டு உடையற மாதிரி ஒரு சவுண்டு தேவைப்பட்டது. சில்வர் தட்டை அடிச்சு உடைச்சு சவுண்டு ரெக்கார்டு பண்ணினோம்; ஆனால், அது விஷூவலுக்கு செட்டாகலை. அதனால கற்பனை பண்ணி ஒரு சவுண்டு கிரியேட் பண்ண, ஆளைத் தேடிட்டிருந்தேன். அப்போ என் நண்பர் ஒருத்தன், ‘எனக்கு ஒரு யங் பாயைத் தெரியும்; அவன் பெயர் திலீப்’னு சொல்லி அழைச்சுட்டுப் போனார். அப்போதான் நான் ரஹ்மானை முதல்முறையா பார்த்தேன். நான் கேட்ட மாதிரி ஒரு சவுண்டை பக்காவா போட்டுக் கொடுத்துட்டு, ஒரு கேசட்டையும் என் கையில் கொடுத்து, ‘நான் இந்த மாதிரி சவுண்ட் மட்டும்தான் கிரியேட் பண்ணுவேன்னு நினைச்சுடாதீங்க சார். இந்த கேசட்ல இருக்குற பாட்டெல்லாம் நான் கம்போஸ் பண்ணுனதுதான்; கேட்டுப் பாருங்க சார்’னு சொன்னார். நானும் கேட்டேன். வித்தியாசமா இருந்துச்சு. அதுக்கப்புறம் தொடர்ந்து பல விளம்பரங்களுக்கு சேர்ந்து வொர்க் பண்ணினோம். இப்படி தொழில் ரீதியா ஆரம்பித்த எங்க நட்பு, போகப் போக குடும்ப நண்பர்களாகி இப்போ வரைக்கும் அது தொடர்ந்துட்டிருக்கு.’’

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

“இந்தப் படத்தில் நீங்களும் ஒரு பாட்டு கம்போஸ் பண்ணியிருக்கீங்களே?”

``அது ஒரு நாள் யதார்த்தமா நடந்த விஷயம். `என்னை சிஷ்யனா ஏத்துப்பீங்களா’ன்னு குரு வீட்டு வாசல்ல பீட்டர் நிக்கும்போது ஒரு பாட்டு வரணும்னு ப்ளான் பண்ணியிருந்தேன். ஒரு நாள் என் ஆபீஸ்ல சும்மா உட்கார்ந்து அந்தப் பாடலைப் பற்றி யோசிக்கும் போது, `வரலாமா உன் அருகில்… பெறலாமா உன் அருளை’னு ஒரு வரி ஞாபகத்துக்கு வந்துச்சு. அதை ஒரு ட்யூனா பாடிப் பார்த்தேன். நல்லா இருந்துச்சு. உடனே மதன் கார்க்கிக்கு போன் பண்ணி,  `உடனே ஆபீஸ் வாங்க’ன்னு சொன்னேன்.  ‘சார் இந்த வரி நல்லா இருக்கு. இதை வச்சே நானும் எழுதுறேன்’னு பல்லவியை முடிச்சார். சரணத்துக்கு என்ன ட்யூன் போடுறதுன்னு எனக்குத் தெரியலை. அதனால கார்க்கியை முதலில் சரணத்துக்கான வரிகளை எழுதச் சொன்னேன். அவர் எழுதுனதும் அதை ஒரு ட்யூனா பாடினேன். ஒரு வழியா பாட்டு ஃபைனல் ஆகிடுச்சு. இப்போ இதைப் போய் ஏ.ஆர்கிட்ட சொல்லணுமே; அவர் ஓகே பண்ணுவாரானு தெரியலையேன்னு குழப்பத்தோட அவர்கிட்ட போனேன். 

“ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!”

நான் பாட்டைப் பாடிக் காட்டினதும், என்கிட்ட எதுவும் சொல்லாம, பாடகர் சீனிவாஸுக்கு போன் பண்ணி, ‘ராஜீவ் ஒரு ட்யூன் வெச்சிருக்கார்; அதை இன்னைக்கு ரெக்கார்டு பண்ணிடுங்க’ன்னு சொல்லிட்டு, ‘இன்னொரு தடவை பாடுங்க’ன்னு ரிப்பீட்டா கேட்க ஆரம்பிச்சுட்டார். இப்படித்தான் அந்தப் பாட்டு ஃபைனல் ஆச்சு.’’

“உங்களோட ரெண்டாவது படத்தை 2000-த்தில் பண்ணுனீங்க. மூணாவது படத்தைப் பண்றதுக்கு ஏன் 18 வருஷம் ஆகியிருக்கு?”

``இந்த 18 வருஷத்துல நான் ஏழு ஸ்கிரிப்ட் எழுதினேன். அதெல்லாமே ஒவ்வொரு காரணத்தால அப்போ படமாகலை. அதுபோக நான் ஒளிப்பதிவுக்கு ஒரு பயிற்சி நிறுவனம் நடத்திக்கிட்டிருக்கேன். அதோட வேலைகள் அதிகமா இருந்துச்சு. இப்படிச் சில காரணங்கள் இருந்ததனாலதான் என்னால படம் பண்ண முடியலை.”

மா.பாண்டியராஜன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism