Published:Updated:

யுத்தத்தைப் பேசுதல்!

யுத்தத்தைப் பேசுதல்!
பிரீமியம் ஸ்டோரி
யுத்தத்தைப் பேசுதல்!

யுத்தத்தைப் பேசுதல்!

யுத்தத்தைப் பேசுதல்!

யுத்தத்தைப் பேசுதல்!

Published:Updated:
யுத்தத்தைப் பேசுதல்!
பிரீமியம் ஸ்டோரி
யுத்தத்தைப் பேசுதல்!
யுத்தத்தைப் பேசுதல்!

“நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் ஆயிரம் வீடியோக்களைக் கடந்து போர் என்பது கடந்த நூறாண்டுகளாக அப்படியேதான் இருக்கின்றது. எரிந்துபோன வீடுகளும், மரித்துப்போன பிள்ளைகளுக்காகக் குமுறும் பெண்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். இந்தத் தொழிலில் வேலைவாய்ப்பு குறைந்ததே இல்லை. மிகவும் கடினமான விஷயம்... புதைந்துபோன மனித நேயம், பிறருக்காகக் கண்ணீர் சிந்தவேனும் துளிர்க்காதா?” -  போர்கள் குறித்து ஒவ்வொரு முறையும் நேரடி பதிவு செய்த மேரி கால்வினின் வரிகள்தாம் இவை. 

யுத்தத்தைப் பேசுதல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கிலும் நடைபெற்ற போர்கள் பற்றிய செய்திகளைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கால்வின். இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூடாரங்களுக்கு வந்து அங்கிருக்கும் நோயாளிகளைப் பதிவு செய்தார். பின்னர் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டு இடங்களுக்குச் செல்ல முற்படும்போது, ராணுவத்தினர் அவரைக் கொடூரமாகத் தாக்குகிறார்கள். மேரி கால்வின் தன் ஒரு கண் பார்வையை இழக்கிறார். இலங்கை, லிபியா, ஆப்கன், சிரியா எனக் கண்டங்கள் கடந்து யுத்தங்களைப் பதிவு செய்த கால்வினின் இறுதி அத்தியாயங்களைப் பதிவு செய்கிறது ‘எ பிரைவேட் வார்’ (A Private War) திரைப்படம். 

யுத்தத்தைப் பேசுதல்!

படத்தில் மேரி கால்வினாக ரோசாமண்டு பைக் (Rosamund Pike) நடித்திருக்கிறார். இரண்டு கண்களைக் கொண்டு பார்த்தவர்கள்  சட்டென ஒரு கண் பார்வைக்கு மாறும்போது ஏற்படும் சிரமங்கள் முதல் அதீத குடிப்பழக்கம், போதைப் பொருள்கள், அதைத் தொடர்ந்து மாறும் பற்களின் நிறம் வரை உடல்மொழிக்கு மெனக்கெட்டிருக்கிறார். போர்களை நேரில் சென்று பதிவு செய்வதால், post-traumatic stress disorder (PTSD) என்னும் மன அழுத்தத்தின் பாதிப்புக்குள்ளாகிறார். மன அழுத்தம், தற்கொலை முயற்சி, குழந்தையின்மை, காதல்,  துரோகம், அதிகார துஷ்பிரயோகம் என... ரோசாமண்டு பைக் மறைந்து மேரி கால்வின் மட்டுமே கண்முன் நிற்கிறார்.

இங்கிலாந்து புகைப்படக் கலைஞரும், மேரியின் போர்க்காலப் பயணங்களின் சக இருதயருமான பால் கன்ராயாக ஜேமி டார்னன்.ஆப்கனில் மாட்டிக்கொள்ளும்போது பதறுவதும், பின்னர் மேரிக்காக இறுதிவரை காத்திருப்பதுமென மிகையில்லாத நடிப்பு. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியரான சீயன் ரியனிடம் (டாம் ஹாலண்டர்), “நீங்கள் இதையெல்லாம் பார்க்கக்கூடாது என்பதற் காகவே, நான் இதையெல்லாம் பார்க்கிறேன்” என்பார் மேரி. ஒரு பத்திரிகையாளருக்கு அவர்தம் ஆசிரியர் எவ்வளவு முக்கியம் என்பதை நினைவுறுத்துகிறார் சீயன் ரியன். 

யுத்தத்தைப் பேசுதல்!

ஆவணப்பட இயக்குநரான மாத்யூ ஹெய்ன்மேன், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது அவரது முதல் திரைப்படம்.  சிதைந்த உடல்கள், சிரியாவின் சிதிலமடைந்த கட்டடங்கள், ஆஃப்கனில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சாமானியர்கள், சிரியாவில் உயிருக்குப் போராடித் தோற்றுப்போகும் குழந்தைகள் என, படம் அந்தந்தப் பிரேதசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. தரையைப் பிளக்கும் வெடிகுண்டுகளுக்கு இடையே, மேரி கால்வினோடு நம்மையும் பதைபதைப்போடு பயணிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ராபர்ட் ரிச்சர்டுசன். இவற்றைத் தாண்டி, படத்தின் எடிட்டிங், தத்ரூபக் காட்சிகளுக்கும் பைக்கின் நடிப்புக்கும் நிறையவே நியாயம் சேர்த்திருக்கிறது.  படம் பார்த்துவிட்டு வந்த சில மணிநேரம் ஆனாலும், அந்த உடல்களும், ரோசாமண்டு பைக்கின் நடிப்பும் கண்ணை விட்டு அகல மறுக்கின்றன.

வேனிட்டி ஃபேர் என்னும் இதழுக்காக மேரி பென்னர் என்னும் புலனாய்வுப் பத்திரிகையாளர் எழுதிய ‘Marie Colvin’s Private War’ என்னும் கட்டுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஒரு புனைவு மட்டுமே இத்திரைப்படம். அதனாலேயே என்னவோ, படம் இலங்கை முதல் சிரியா வரை மேரி கால்வின் சந்தித்த அனுபவங்களை மட்டுமே பேசுகிறது. எனவே, இதை ஒரு முழுநீள பயோபிக்காக எடுத்துக்கொள்ள முடியாது.

இது மேரி கால்வின் என்னும் பெண் பத்திரிகையாளரின் அனுபவங்களை மட்டும் பதிவு செய்யவில்லை. உலகெங்கும் யுத்தம் சிதைத்த மனித வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறது. அதனாலேயே ‘எ பிரைவேட் வார்’ முக்கியமான படமாகிறது.

கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism