அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை நிவேதா தாமஸ், தெலுங்கில் பிஸியாக இருந்தார். பின், அவர் நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் நிவேதா தாமஸ்  குத்தாட்டம் போட்டு, அதைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் செம வைரல்.

மிஸ்டர் மியாவ்

• பாலிவுட் இயக்குநர் குணால் கோலி தெலுங்கில் அறிமுகமாகும் படம், ‘நெக்ஸ்ட் ஏன்ட்டி’. சந்தீப் கிஷன் - தமன்னா ஜோடி நடித்திருக்கும் ரொமான்டிக் என்டர்டெய்னர் படத்தின் படப்பிடிப்பை 24 நாட்களிலேயே நிறைவு செய்துள்ளனர். டிசம்பர் முதல் வாரம் படம் திரைக்கு வருகிறது. தமிழுக்கும் வாங்க பாஸ்!

• அறிமுக இயக்குநர் முகில் இயக்கத்தில் பிரபுதேவா - நிவேதா பெத்துராஜ் நடித்துவரும் ‘பொன்.மாணிக்கவேல்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடக்க உள்ளது. டிசம்பருக்குள் இதன் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. மீதமுள்ள காட்சிகளை எடுக்க டிசம்பர் முதல் வாரத்தில் ஃபாரின் போகிறது படக்குழு.

மிஸ்டர் மியாவ்

• ‘2.0’ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், சில ஆக்‌ஷன் சீக்வென்ஸ்களுக்காக, தான் பயிற்சி எடுத்த

மிஸ்டர் மியாவ்

வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், நடிகை எமி ஜாக்‌சன். இந்த ஸ்லோமோஷன் வீடியோ ஒரு மில்லியன் வியூஸ்களைத் தாண்டி வைரலாகி வருகிறது.

கேள்வி கார்னர்

இயக்குநர் வெங்கடேஷ் குமார்

பிரபாகரன் பயோபிக்கான ‘சீறும் புலி’ எந்த அளவுல இருக்கு?


“இதைக் ரெண்டு பாகமா எடுக்க ப்ளான் பண்ணியிருக்கோம். பிரபாகரன் போராளியா மாறின கதையை முதல் பாகத்திலும், பிரபாகரன் தமிழ் ஈழத்தின் தலைவரான கதையை இரண்டாவது பாகத்திலும் சொல்லப் போகிறோம். ஜனவரியில் ஷூட்டிங் ஆரம்பிக்கும்.”

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

மதுமிதா:
“ ‘புலி’ படத்தோட ஷூட்டிங்கைக் காட்டுக்குள்ள எடுத்தோம். அப்போ, என் அம்மாவுக்குப் பிறந்தநாள் வந்தது. நாங்க இருந்த இடத்தில இருந்து கொஞ்ச தூரம் தள்ளி போனால்தான் சிக்னல் கிடைக்கும். நானும் விஜய் சாரும் என் அம்மாவுக்கு வாழ்த்து சொல்றதுக்காக சிக்னல் கிடைக்கிற இடத்தைத் தேடித்தேடிப் போய் பேசிட்டு வந்தோம். அந்த நாளை மறக்கவே முடியாது.  அன்னிக்கு எடுத்த செல்ஃபிதான் இது!”

சைலன்ஸ்

• ஒன்றரை டன் அடி கொடுத்த நடிகரை, வைத்து சண்டை சேவல்விடும் நடிகரின் அண்ணன் படம் இயக்கிவருகிறார்.  அறுபது நாள்களுக்கு மேல் ஷூட்டிங் முடிந்து, அவர் எடுத்த காட்சிகளை எடிட் செய்து பார்த்தால் ஒரு மணி நேரத்துக்குள்தான் காட்சிகள் இருக்கிறதாம். தயாரிப்பு தரப்பு செம அப்செட்!

• ‘சென்னை பட்டணம்’  இயக்குநர் ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுப்பதாகச் சொல்லியிருந்தார். அதில் ‘ஆர்.ஜே’ படத்தில் புகழ் பெற்ற பாலிவுட் நடிகையை ஜெயலலிதாவாகவும் காதலான டீச்சர் நடிகையை சசிகலாவாகவும் நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.