Published:Updated:

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"
``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

அறிமுகமான முதல் படத்திலேயே தங்களின் திறமையை நிரூபித்த 25 கலைஞர்களைப் பற்றிய தொகுப்பு இது.

2018-ஆம் வருடம் தமிழ்த் திரையுலகில் வெளியான நூற்றுக்கணக்கான படங்களில், ஏராளமான அறிமுகக் கலைஞர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். அப்படி, கோலிவுட்டிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தங்களின் திறமையை நிரூபித்த 25 அறிமுகங்கள் பற்றிய தொகுப்பு இது. 

நடிகர்கள் :

ஆண்டனி (மேற்குத் தொடர்ச்சி மலை), ஆதித்யா பாஸ்கர் (96), தர்ஷன் (கனா), சிபி புவனச்சந்திரன் (வஞ்சகர் உலகம்), விஜய் தேவரகொண்டா (நோட்டா).

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

தனக்குச் சொந்தமாக ஒரு நிலம் கிடைக்காதா என்ற கனவுடன் ஏலக்காய் மூட்டைகளைச் சுமக்கும் ரங்கசாமியாக ஆண்டனி, மலைகளின் மைந்தராக `மேற்குத் தொடர்ச்சி மலை'யில் வாழ்ந்திருந்தார். காதலியின் கனவுகளுக்கு அவளுக்கே தெரியாமல் உதவிக்கொண்டிருக்கும் ஒருதலைக் காதலன் முரளியாக, கனாவில் தர்ஷன் காட்டியது குறும்புச் சித்திரம். ஜானுவின் கைபட்டால், ஆயிரம் வாட்ஸ் கரன்ட் அடித்ததுபோல வெளுத்துப்போகும் ராமாக, ஆதித்யா பாஸ்கர் கலக்கினார். ரொமான்டிக்கான திருட்டுத்தனமும், துறுதுறுப்பான முரட்டுத்தனமுமாக `வஞ்சகர் உலகத்தில்' கியூட் முகம் காட்டினார், சிபி புவனச்சந்திரன். பிளேபாய், டம்மி முதலமைச்சர், பொறுப்பான முதலமைச்சர் என ஒரே படத்தில் வெரைட்டி நடிப்பை வெளிப்படுத்தினார், விஜய் தேவரகொண்டா. 

நடிகைகள் :

இவானா (நாச்சியார்), கௌரி கிஷன் (96), ரைசா (பியார் பிரேமா காதல்).

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

புதுமுகமென்று யாரும் சொல்லிவிட முடியாத அளவுக்கு இவானாவும் சரி, கௌரி கிஷனும் சரி... தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர். `நாச்சியார்' திரைப்படத்தில் பால்யத்தின் விளிம்பிலேயே அதிகார வர்க்கத்து நபரால் கர்ப்பிணி ஆக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளியாக, அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், இவானா. `இப்படி ஒரு காதலி கிடைத்தால் நன்றாக இருக்குமே!’ என்ற ட்ரீம் கேர்ள் இலக்கணத்தின் அப்டேட் வெர்ஷனாக `96’ படத்தில் மலர்ந்து நின்றார், கௌரி கிஷன். நாம் பார்க்கின்ற அல்ட்ரா மாடர்ன் மங்கைகளின் பிராண்ட் அம்பாசிடராக `பியார் பிரேமா காதலி'ல் தனித்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், `பிக் பாஸ்' ரைசா.

இயக்குநர்கள் :

மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்), லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை), அருண்ராஜா காமராஜ் (கனா), பி.எஸ்,மித்ரன் (இரும்புத்திரை), பிரேம்குமார் (96), நெல்சன் திலீப்குமார் (கோலமாவு கோகிலா), இளன் (பியார் பிரேமா காதல்),  கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு).

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

சாதியால் எளிய மனிதர்கள் அனுபவிக்கும் வலிகளையும், பிணிகளையும் வலிந்து திணிக்காமல், வலுவான அரசியல் களத்துடன்  `பரியேறும் பெருமாள்' படத்தில் பதிவு செய்தார், மாரி செல்வராஜ். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏலக்காய் மூட்டை சுமக்கும் ரங்கசாமியின் வாழ்க்கையோடு, அந்த மலைக் கிராம மக்களின் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களையும், ஏக்கங்களையும் முழுமையான வாழ்வியல் பதிவாக `மேற்குத் தொடர்ச்சி மலை'யில் பதிவு செய்தார், லெனின் பாரதி. விளையாட்டை வாழ்க்கையாகக் கொண்ட மகளையும், தந்தையின் வாழ்க்கையோடு விளையாடும் விவசாயத்தையும் சரிவிகிதத்தில் `கனா'வில் பதிவு செய்து கலக்கினார், அருண்ராஜா காமராஜ். டிஜிட்டல் உலகில் நடக்கும் க்ரைம் மோசடிகளை லாஜிக் மீறல்கள் இல்லாமல், `இரும்புத்திரை'யில் சுவாரஸ்யமாகத் தந்தார், பி.எஸ்.மித்ரன். பள்ளிப் பருவக் காதலை இழைக்க இழைக்க மீண்டும் நினைவுகளில் துளிர்க்கவிட்டது, பிரேம்குமார் இயக்கிய `96'. தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீளும் `கோலமாவு கோகிலா'வின் கதையை, பிளாக் ஹியூமர் ஜானரில் சொல்லி அசத்தினார், நெல்சன் திலீப்குமார். இந்தக் காலத்து யுவன் யுவதிகளின் லேட்டஸ்ட் வெர்ஷன் காதலை, `பியார் பிரேமா காதல்' படத்தில் பதிவு செய்தார், இளன். மனிதர்களின் குற்றங்களுக்குத் தோட்டாக்கள் தீர்வல்ல என்ற மெசேஜை த்ரில்லர் சினிமாக `துப்பாக்கி முனை'யில் கொடுத்தார், தினேஷ் செல்வராஜ். வித்தியாசமான போலீஸ் ஸ்டோரியாக `அடங்க மறு'வைத் தந்தார், கார்த்திக் தங்கவேல். இந்த ஒன்பது இயக்குநர்களும் வருங்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை வரவுகள்!

இசையமைப்பாளர் :

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

(கனா)  

இசைக்கும் கதைக்குமான நெருங்கிய தொடர்பை விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்களில் நிச்சயம் உணர முடியும். `கனா' படத்தில் அரையிறுதி கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, கதையின் உச்சகட்ட பதற்றத்தை ரசிகனுக்குக் கடத்தி, சீட் நுனிக்குத் தள்ளியதில் திபு நினன் தாமஸின் பின்னணி இசைக்குப் பெரும் பங்குண்டு. தொடர்ந்து, உங்களுடைய `கனா' பலிக்கட்டும் ப்ரோ!

உறுதுணை நடிகர் :

தங்கராஜ் (பரியேறும் பெருமாள்)

`பரியேறும் பெருமாளில்' பரியனின் அப்பா மாதிரியான ஒரு பாத்திரப் படைப்பு இதற்கு முன் தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததே இல்லை எனச் சொல்லலாம். `எங்கும் புகழ் துவங்க' பாடலிலிருந்து சட்டக் கல்லூரியில் நிர்வாணமாக ஓடுவது வரை... ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும்போது நெஞ்சு ஏகத்துக்கும் கனத்துப்போனது. படம் பார்த்த அனைவரின் மனதிலும் நிழலோவியமாய்ப் பதிந்து நின்றார், தங்கராஜ்.

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

உறுதுணை நடிகை :

அஞ்சலி பாட்டில் (காலா)

`சக்ரவியூஹா’, `மிஸஸ் ஸ்கூட்டர்’, `நியூட்டன்’ எனக் `காலா'வுக்கு முன்பே  தைரியமான பல கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறார், அஞ்சலி பாட்டில். ஆனால், தமிழ் மக்களிடம் அறிமுகமான `புயல்’ கதாபாத்திரம், இவரை மக்களிடம் வெகுவாவே கவர்ந்தது. கணவருடன் இணைந்து தாராவிக்காகப் போராடுவதிலிருந்து, அவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதிலடியாக லத்தியைத் தூக்கி அடிப்பது வரை `காலா'வின் ஒகி `புயல்' அஞ்சலிதான். 

பாடகர் :

ராகுல் தீட்ஷித் (நீயும் நானும் அன்பே), ஶ்ரீகாந்த் (நீங்களும் ஊரும்)

2018-ஆம் ஆண்டின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் மாஸ் ஹிட் அடித்த பாடல்களில், `இமைக்கா நொடிகள்' படத்தில் இடம்பெற்ற `நீயும் நானும் அன்பே'வும் ஒன்று. ராகுல் தீட்ஷித்தின் குரல் தொடங்கும்போதே, உள்ளம் தன்னாலே காதல் வயலினை வாசிக்கத் தொடங்கிவிட்டது. `சூப்பர் சிங்கர்' ஶ்ரீகாந்தும் `ஜீனியஸி'ல் இடம்பெற்ற `நீங்களும்  ஊரும்' பாடலைச் சிறப்பாகப் பாடியிருந்தார். தொடர்ந்து கலக்குங்க ப்ரதர்ஸ்!

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

பாடகி :

பிரித்திகா (வா ரயில் விடப் போலாமா)

கிராமத்துத் தெருக்களில் ஓடி விளையாடிய பிரித்திகா, இன்று உலகறிந்த குயில். `பரியேறும் பெருமாள்' படத்தின் `வா ரயில் விடப் போலாமா' பாடல் கேட்பவர், அனைவரின் மனதையும் உருக்கியது. படம் வெளியாகி, இவ்வளவு நாள்களைக் கடந்த பின்பும்கூட, ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ப்ரித்திகாவின் குரலில் சொக்கிக் கிடக்கிறார்கள், இசைப் பிரியர்கள்.

வில்லன் :

சரவணன் (ராட்சசன்), அனுராக் காஷ்யப் (இமைக்கா நொடிகள்)

``ராம், ஜானு, புளியங்குளம் செல்வராஜ், கிறிஸ்டோபர்.. 2018-ன் டாப் 25 அறிமுகங்கள்!"

`யாருப்பா அந்த ராட்சசன்.. எங்களுக்கே பார்க்கணும்போல இருக்கு' என நினைக்கும் அளவுக்கு, `ராட்சசன்' படத்தில் `கிறிஸ்டோபராக' மிரட்டியிருந்தார், சரவணன். படத்தின் ஷுட்டிங் ஆரம்பித்ததிலிருந்து ரீலிஸாகி சில நாள்கள் வரை சரவணனை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தனர், குழுவினர். இறுதியாக, கிறிஸ்டோபரை அறிமுகம் செய்யும் விழா எனும் பெயரிலேயே விழா எடுத்து அறிமுகம் செய்து வைத்தனர். `இமைக்கா நொடிகள்' படத்தின் உண்மையான ஷோ ஸ்டீலர் அனுராக் காஷ்யப்தான்!. இயக்குநர் மகிழ் திருமேனியின் குரலில் ஒவ்வோர் அசைவிலும் சைக்கோ `ருத்ரா'வாகப் பயமுறுத்தி அனுப்பினார், அனுராக். 

2018-ன் அறிமுகங்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு