Published:Updated:

`மதம் பிடிக்காத மனுஷ சாதி' - ராஜுமுருகனின் `ஜிப்ஸி' டீசர்!

`மதம் பிடிக்காத மனுஷ சாதி' - ராஜுமுருகனின் `ஜிப்ஸி' டீசர்!
`மதம் பிடிக்காத மனுஷ சாதி' - ராஜுமுருகனின் `ஜிப்ஸி' டீசர்!

`ஜோக்கர்' இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் `ஜிப்ஸி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில், சமீபகாலத்தில் மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய படம், ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்'.  இப்படத்தைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் அடுத்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு, 'ஜிப்ஸி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜீவாவுக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாசலப்பிரதேசம் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார்.

இவர், பாலிவுட்டில் விளம்பரப் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். `குக்கூ’ படத்தை அடுத்து மீண்டும் ராஜுமுருகனுடன் இசையமைப்பாளராகக் களமிறங்குகிறார் சந்தோஷ் நாராயணன். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, `அருவி' படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்ட ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, இப்படத்தை எடிட் செய்கிறார்.

நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையைக் கொண்டு உருவாகி வருகிறது `ஜிப்ஸி.’ பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இசை, காதல் காட்சிகள், வசனங்கள் வரவேற்பைப் பெற்று வருகிறது.