Published:Updated:

`பேரன்போடு அமுதவன்' - ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில் `பேரன்பு' டிரெய்லர்!

`பேரன்போடு அமுதவன்' - ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில் `பேரன்பு' டிரெய்லர்!
`பேரன்போடு அமுதவன்' - ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில் `பேரன்பு' டிரெய்லர்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி நடித்துள்ள `பேரன்பு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், தனது படைப்புகள்மூலம் புகழ்பெற்ற இயக்குநர்களில் முக்கியமானவர், இயக்குநர் ராம். `கற்றது தமிழ்’ தொடங்கி `தரமணி’ வரை இதுவரை 3 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், தனது ஒவ்வொரு படத்தையும் உயிரோட்டம் உள்ள படைப்பாக இதுவரை தந்துள்ளார். தற்போது, இவரது 4-வது படைப்பாக 'பேரன்பு' உருவாகியுள்ளது.

முதல் மூன்று படங்களிலும் சிறிய நடிகர்களுடன் கைகோத்த ராம், பேரன்பில் மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் கைகோத்துள்ளார். மம்மூட்டியுடன் அஞ்சலி, 'தங்க மீன்கள்' சாதனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைக்கு வருவதற்கு முன்பே நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ், ஷாங்காய் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, அங்கு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது.

படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு டீசர் வெளியாகியது. இந்நிலையில், இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றுவரும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' விழாவில் வைத்து டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.