“ ‘கேஜிஎஃப்’ - முழுக்க முழுக்க கோலார்த் தங்க வயலில் படமாக்கப்பட்டது. முதல் பாகம் 1950-களில் தொடங்கி, 1970-கள் வரை தொடரும். 60 வருடங்களுக்கு முந்தைய வீடுகளையும் கிராமத்தையும் வடிவமைச்சோம். 140 நாள் நடந்த ஷூட்டிங்குல நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் சேர்த்து சுமார் ஆயிரம் பேர் வேலை பார்த்தோம். கொஞ்சம் சிரமமாதான் இருந்துச்சு. ஆனா, சந்தோஷமா உழைச்சோம்!” - கன்னட சினிமாவில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘கேஜிஎஃப் (கோலார் கோல்டு ஃபீல்ட்ஸ்)’ படத்தின் நாயகன் யாஷ், படம் குறித்த அனுபவத்தை இப்படிப் பகிர்ந்துகொள்கிறார்.

“கன்னடத்தில் டாப் நடிகரா இருக்கீங்க. இந்தச் சூழல்ல தமிழிலும் அறிமுகமாக நினைச்சதுக்கு என்ன காரணம்?”

“ ‘கேஜிஎஃப்’ கதையைக் கேட்கும்போது, இந்தப் படம் மூலமா எனக்கு யுனிவர்சல் டச் கிடைக்கும்னு நம்புறேன். இந்தக் கதையில இருக்கிற எமோஷனை எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் கொண்டுபோக ஆசை. தவிர, படத்திலும் தமிழ், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழி மக்களும் இருக்காங்க. இதைக் கன்னடப் படம்னு சுருக்கிட முடியாது. எல்லா மொழி பேசும் மக்களுக்கும் பொதுவானது. தெலுங்கு சினிமா ரசிகர்களைவிட, தமிழ் சினிமாவுக்கு ரசிகர்கள் அதிகம். அதுவும் ஒரு காரணம்.”

“சின்னத்திரை டு சினிமாப் பயணம் எப்படி சாத்தியமாச்சு?”

“மைசூர்ல இருக்கிற ஒரு சின்ன கிராமம்தான், என் ஊர். அப்பா கர்நாடகால அரசு பஸ் டிரைவர். காலேஜ் படிக்கிற காலத்துலேயே பல நிகழ்ச்சிகள்ல டான்ஸ் ஆடுறது, நாடகங்கள்ல நடிக்கிறதுன்னு இருப்பேன். ‘எதிர்காலத்துல என்ன ஆகப்போறீங்க?’ன்னு ஸ்கூலில் கேள்வி கேட்கும்போது, எல்லோரும் போலீஸ், டாக்டர்னு சொல்வாங்க. நான் ஹீரோ ஆகப்போறேன்னே சொல்லிட்டேன். ஆனா, அதைச் சாத்தியப் படுத்துறதுக்குத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். சினிமால நடிக்கிறதை என் வீட்டுல இருக்கிறவங்க ஏத்துக்கல. 2002-ல் வீட்டை விட்டுக் கிளம்பி பெங்களூரு வந்துட்டேன். கொஞ்சநாள் கஷ்டப்பட்டு ‘ஸ்டாப்’ங்கிற படத்துல அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். தங்குறதுக்கு இடம் கிடைச்சாச்சுன்னு நினைக்கும்போது, ரெண்டே நாள்ல அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. பிறகு என்ன பண்றதுன்னு தெரியாம, ஒரு டிராமா கம்பெனியில சேர்ந்தேன். நாடகத்துக்கு பேக் ஸ்டேஜ் வேலை. நடிகர்களுக்கு நான்தான் டயலாக் பிராம்ப்ட் பண்ணுவேன். சமயத்துல நடிக்கவும் வைப்பாங்க. யாரும் வரலைனா நடிக்கிறதால, என்னை ‘எமர்ஜென்சி நடிகர்’னுதான் கூப்பிடுவாங்க. பிறகு, கொஞ்சம் கொஞ்சமா பெரிய பெரிய கேரக்டர்கள் கிடைச்சது. அதுமூலமா டிவி சீரியல் வாய்ப்புகள். அப்போதான், ‘மோகினமனசு’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். படமும் ஹிட், எனக்கும் ஃபிலிம்பேர் விருது கிடைச்சது... அவ்ளோதான்!”

“ ‘கேஜிஎஃப்’ என்ன மாதிரியான அனுபவம் கொடுக்கும்?”

“ஒரு சின்னப் பையன் (ராக்கி), தனக்கு இதுதான் முக்கியம்னு நினைக்கிற விஷயத்தைத் தேடிப் போறான். இந்தப் பயணத்துல அவன் சந்திக்கிற மனிதர்கள், நடக்கிற சம்பவங்கள்தான் கதை. கோலார்த் தங்கச் சுரங்கத்தில் இருக்கிறவங்களுக்கும், அந்தப் பையனுக்குமான உறவு, ஒரு அம்மா, தன் பையனுக்கு எப்படி தைரியத்தைச் சொல்லி வளர்க்கிறாங்க... இந்தப் பின்னணியில் திரைக்கதை நகரும்.”

“உங்களுக்கும், தமிழ் சினிமாவுக்குமான உறவு?”

“தமிழ் எனக்கு எப்பவுமே நெருக்கம்தான். நல்லா இருக்கோ இல்லையோ, நான் பேசுற தமிழுக்குக் காரணம், நான் பார்த்த தமிழ்ப் படங்கள்தான். அப்படின்னா, நான் எவ்ளோ தமிழ்ப்படங்களைப் பார்த்திருப்பேன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க! தவிர, சென்னையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. என் பட வேலைகளுக்காக அடிக்கடி சென்னைக்கு வந்திருக்கேன். நிறைய தமிழ் டெக்னீஷியன்ஸ் என் படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காங்க. நடிகர்கள் விஷால், ரமணா ரெண்டுபேரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். விஷால்தான் என் படத்தைத் தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்றார். அவருக்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ்!”

அலாவுதீன் ஹுசைன்