பிரீமியம் ஸ்டோரி

• சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘பிளாக் ஷீப்’ டீம் இயக்கத்தில் ரியோ ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஷிரின் கான்ச்வாலா என்பவர் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். காமெடியுடன் கலந்து சமூக அக்கறையுள்ள கருத்துகளையும் படத்தில் சொல்லவிருக்கின்றனர்.

மிஸ்டர் மியாவ்

• அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படத்துக்கு ‘கோமாளி’ எனப் பெயரிட்டுள்ளனர். யோகி பாபி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். 

• ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.

• செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - ரகுல் ப்ரீத்சிங் - சாய் பல்லவி நடிக்கும் ‘என்.ஜி.கே’ படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித் ஸ்ரீ ராம் - ஸ்ரேயா கோஷல் ஆகியோர் ஒரு பாடல் பாடியுள்ளனர்.

மிஸ்டர் மியாவ்

• நடிகர் ஆரவ் - ஆஷிமா நார்வால் நடித்துவரும் ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு, பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஆரவ். 

மிஸ்டர் மியாவ்

• ‘2.0’ படத்துக்குப் பிறகு ‘இந்தியன் 2’, விஜய் - நயன்தாரா நடிக்கும் புதிய படம் என இரண்டு பெரிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார், கலை இயக்குநர் முத்துராஜ். இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

 “பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வர்றீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க?”

மஹத்:
“மகிழ்ச்சியா, அதேசமயம் பயமாகவும் இருக்கு. என்னோட வேலையை நான் பெஸ்டா பண்றேன்.
அதுக்கு மக்கள் ஆதரவு கிடைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும்”.

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

லைலா: 
“பிரசாந்தோடு ‘பார்த்தேன் ரசித்தேன்’ படம் பண்ணினேன். இந்தப் படத்தில் நான் ரொம்ப சீரியஸா முகத்தை வெச்சிக்கிட்டு நடிச்சிருப்பேன். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல செம ஜாலியா சிரிச்சிட்டு இருப்பேன். டேக்லயே சிரிச்சி, சிரிச்சி ரீடேக் வாங்கிட்டே இருப்பேன். பாவம் பிரசாந்த், நான் சிரிச்சனா அவரும் சேர்ந்து ரீடேக் வாங்குவார். அதில் ஒரு சாம்பிள்தான் இந்த போட்டோ”.

சைலன்ஸ்

• சிவகார்த்திகேயனைப்போல் தானும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவோடு டி.வி-யில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகரின் முதல் படம், பல ரிலீஸ் தேதிகள் கடந்தும், இன்னும் வெளியாகவில்லை. அதனால் அந்த நடிகர், தயாரிப்பாளர்மீது வருத்தத்திலும் ஆதங்கத்திலும் உள்ளாராம்.

• ஒரு டி.வி நிகழ்ச்சியில் தோன்றியதால், கடந்த வருடம் சினிமா வாய்ப்புபெற்ற நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தனது காதலரையும் வரவழைத்துவிடுகிறாராம். இவர்களின் சந்திப்பு, வேலைக்கு இடையூறாக இருப்பதாக இயக்குநரும் தயாரிப்பாளரும் புலம்பித் தவிக்கிறார்களாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு