அட்லி இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்கும் படத்திற்கான செட் வேலைகள் சென்னை பின்னி மில்லில் தொடங்கிவிட்டன. அடுத்த தீபாவளிக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘மெர்சலி’ல் பணியாற்றிய மொத்த டெக்னிகல் டீமும் மீண்டும் இணையும் இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். வெயிட்டிங்ணா!

2.0 ரிலீஸ் ஆகிவிட்டது. `பேட்ட’ ஷூட்டிங் முடிந்துவிட்டது. ரஜினிகாந்த்தின் அடுத்த மூவ் என்ன என்று திரையுலகம் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களும் எதிர்பார்த்திருக்க, அடுத்து ஏ.ஆர்.முருகதாஸோடு படம் பண்ணவிருக்கிறார் என்கிறார்கள். இந்தப் படமும் முருகதாஸின் முந்தைய படங்களைப் போலவே அரசியல் படம்தானாம். படத்திற்கு இப்போதைக்கு `நாற்காலி’எனப் பெயர் வைத்திருப்பதாகச் சொல்கிறார். நாற்காலிக்குச் சண்டை போடும் நாடு நம் பாரத நாடு!

சமீபத்தில் வெளியான க்ரீட் 2வை ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாட, இன்னொரு பக்கம் சோக முகம் காட்டுகிறார்கள் சில்வஸ்டர் ஸ்டாலோனின் ரர-க்கள். இந்தப் படத்துடன் ராக்கி கதாபாத்திரத்துக்கு, ஸ்டாலோன் `பை பை’ சொல்வதே காரணம். ‘ராக்கி’யின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் `மிஸ் யூ’ ஸ்டேட்டஸ்களைப் போட்டுத்தள்ளுகிறார்கள். ‘ராக்கி’ கதாபாத்திரத்தின் நீட்சியாக, கறுப்பின வீரனின் பயிற்சியாளராக ‘க்ரீட் 2’-ல் நடித்துள்ளார் ஸ்டாலோன்.  ராக்கி ராக்ஸ்!

ஹாலிவுட்டின் ‘ராவான’ இயக்குநர் குவென்டின் டாரன்டி னோவின் திருமணம்தான் ஹாலிவுட்டில் ஹாட் டாபிக். 55 வயதான டாரன்டினோ, 35 வயதான இஸ்ரேலிய பாடகி டேனியல்லா பிக்கைத் திருமணம் செய்திருக்கிறார். 10 ஆண்டு களுக்கு முன் ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ பட புரோ மோஷனுக்காக டாரன்டினோ இஸ்ரேல் சென்ற போது இருவரும் சந்தித்திருக்கி றார்கள். தன் படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் கோர்ட்னி ஹாப்மேனுடனான காதல் முறிவுக்குப் பிறகு, டேனியல்லா பிக்குடன் இணைந்துள்ளார் டாரன்டினோ. காதலுக்கு வயசில்ல!

`கனா’ படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளராகத் தன் இரண்டாவது படத்தைத்தொடங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சிப் பிரபலம் ரியோ நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை, ப்ளாக்ஷீப் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கார்த்திக் வேணுகோபால் இயக்க விருக்கிறார். இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். செம காம்போ!

விவசாயக் கடனிலிருந்து விவசாயிகளை விடுவிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றவும், குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவரவும் வலியுறுத்தி டெல்லியில் 35,000-க்கும் அதிகமான விவசாயிகள் பிரமாண்ட பேரணியை நடத்தினர். தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன விவசாயிகளின் மண்டையோடுகளோடும், படங்கள் ஒட்டிய பதாகைகளோடும் விவசாயிகள் வந்தது உருக்கமாக இருந்தது. பேரணியின் முடிவில் ஜந்தர் மந்தரில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தியும், அர்விந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினர். கைகொடுப்போம்!

இந்த வாரமும் ஜேஸ் மொரினியோதான் கால்பந்து உலகின் சென்சேஷன். யங் பாய்ஸ் அணியுடனான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைடட் அணி தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்ததால், உச்சகட்டக் கடுப்பில் இருந்தார் ஜோஸ். 91-வது நிமிடத்தில் ஃபெல்லாயினி கோல் அடித்ததும், அருகில் இருந்த வாட்டர் பாட்டில் ஸ்டாண்டை, தூக்கி வீசியெறிந்து தன் கடுப்பையெல்லாம் ஆற்றிக்கொண்டார். அந்தப் புகைப்படமும், வீடியோவும் ஓவர்நைட்டில் டிரெண்டாக, ‘ஸ்பெஷல் ஒன்’ எது செஞ்சாலும் வைரல்தான் என்று 15 செகண்ட் வீடியோவை, திரும்பத் திரும்ப ரீவைண்ட் செய்து பார்த்துக்கொண்டிருக்கிறது ரெட் டெவில்ஸ் ரசிகர் பட்டாளம். கால்பந்து களேபரங்கள்!

‘ஃபாஸ்ட் அன் ஃப்யூரியஸ்’ படங்களில் வந்த பிரபலமான பாத்திரங்கள் டெக்கர்ட் ஷா மற்றும் லூக் ஹாப்ஸ். இப்போது அந்த இரண்டு பாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ‘ஹாப்ஸ் அன் ஷா’ என்ற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாத்திரங்களில் முன்பு நடித்த `ராக்’ ட்வெயின் ஜான்சனும் ஜேசன் ஸ்டேத்தமுமே நடிக்கவிருக்கிறார்கள். படத்தை இயக்கவிருப்பவர் ‘டெட்பூல்’
படங்களை இயக்கிய இயக்குநர் டேவில் லீட்ச்... ரிப்பீட் ட்ரீட்!.