“இந்த உலகத்துல இருக்கிற கடைசி மனிதனின் சிந்தனை என்னவாக இருக்கும், உலகத்துலேயே சிறந்ததுனு அவன் நினைக்கிறது என்ன? - இதை அடிப்படையா வெச்சுப் படமாக்கணும்னு நினைச்சேன். கதை, திரைக்கதை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு எல்லாமே நான்தான். அதுமட்டுமில்லை, நடிப்பும் நான் மட்டும்தான்.” - ‘ஒன்’ படம் பற்றி உற்சாகமாகத் தொடங்குகிறார் ‘வெங்காயம்’ பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.

“ஒரு பெரிய படத்துக்கு எப்படி, குழுவா சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதி, நடிச்சு செயல்படுவாங்களோ, அதேமாதிரிதான் இந்தப் படத்தையும் எடுத்தேன். ஆனா தனி ஆளா, மேக்கப் தொடங்கி பேக்அப் வரை நான் மட்டுமேதான். அடுத்து என்ன எடுக்கணும், இந்த ஷாட் சரியா இருக்கா, நடிச்சதுல ஏதாவது தப்பு இருக்கானு எல்லாத்தையும் பார்க்கிறது ரொம்ப சிரமமாதான் இருந்தது. அதைவிட, எங்கே எந்தக் காட்சியை எடுத்தேன், எத்தனை முறை எடுத்தேன், அது எந்த ஹார்ட் டிஸ்க்ல எந்த ஃபோல்டர்ல இருக்குனு ஞாபகம் வெச்சு, தேவைப்படும்போது எடுக்கிறது இருக்கே... தலையே சுத்திடும். என்ன சீன் எடுக்கிறேனோ, அதை அங்கேயே எடிட் பண்ணிப் பார்த்திடுவேன். ஏதாவது தப்பு தெரிஞ்சா, ரீ-டேக்தான். இந்தியா, தாய்லாந்து, மலேசியானு நிறைய இடத்துல ஷூட்டிங் பண்ணேன். க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் அமெரிக்காவுல எடுத்தேன்.

என் காரையே ஒரு கேரவன் மாதிரி ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அதுல எடிட்டிங் ரூம் இருக்கும் எல்லாப் பொருள்களும் இருக்கும். நான் என்ன சீன் எடுத்தாலும் ஸ்பாட்லயே எடிட் பண்ணிடுவேன். காரணம், கடைசியா எடிட் பண்ணிக்கலாம்னு வெச்சா, எந்த இடத்துல என்ன எடுத்தோம்னு தெரியாது. சீன் சரியா வரலைனு மறுபடியும் இங்கே வந்து ஷூட் பண்ண முடியாது.

பத்து பேரை நூறு பேரா காட்டணும்னா, பத்து முறை எடுத்து ‘crowd multiplication’ பண்ணிக்கலாம். ஆனால், தியேட்டர் சீன்ல ஒருத்தரை எப்படி ஐந்நூறு பேரா காட்டமுடியும்?! வெவ்வேற காஸ்ட்யூம்கள்ல வெவ்வேற கெட்டப்லதான் நடிக்கணும். ஏன்னா, தியேட்டருக்கு வர்ற எல்லோரும் ஒரேமாதிரி இருக்கமாட்டாங்க இல்லையா... அதனாலதான், அதை 500 முறை எடுக்க வேண்டியதாகிடுச்சு. இந்தப் படத்துல 90% கிராஃபிக்ஸ் இருக்கும். இப்போதான் எல்லாத்துக்கும் சாஃப்ட்வேர் இருக்கே... டியூனை மட்டும் ரெக்கார்ட் பண்ணிட்டா, அதை எல்லா இசைக்கருவியோட இசையாகவும் மாத்திக்கலாம்.

இவ்வளவு சொல்லிட்டு நடிப்பைப் பத்திச் சொல்லாம இருந்தா எப்படி? மெயின் கேரக்டர் நாலு பேர். அந்த நாலு கேரக்டருக்கும் நானேதான் நடிச்சேன். நாலு பேருக்குள்ள பேசுற மாதிரி சீன் எடுக்கும்போது, சிரமமா இருந்தது. பலமுறை எங்கேயோ பார்த்துப் பேசி சொதப்பிருக்கேன். அதனால, கண்ணாடியைப் பார்த்துப் பேசுற மாதிரி நினைச்சுப் பேசினேன். ஒரு கேரக்டர் முடிச்சவுடனே வேகமா காஸ்ட்யூம் மாத்திட்டு வந்து அடுத்த கேரக்டரா மாறி பேசணும். அப்படி எல்லாக் கேரக்டரும் பேசி முடிக்கிற வரை, அந்தக் காட்சிக்கு ரெடி பண்ண லைட்டிங் ஒரே மாதிரி இருக்கணும். இல்லைனா, சிக்கல்தான். ஒரு ஷாட்டை முடிக்கிறதுக்காக ஐநூறு டேக் எடுத்தேன். தியேட்டர்ல படம் பார்க்குற ஒரு காட்சி அது. தியேட்டர்ல உட்கார்ந்திருக்கிற 500 நபர்களாகவும் நான்தான் நடிச்சேன். ஒவ்வொரு சீட்லேயும் வெவ்வேற கெட்டப்ல மாறி மாறி உட்கார்ந்து அந்தக் காட்சியை முடிச்சேன். இந்த சீன் படத்துல ஐந்து நொடிதான் வரும். ஆனா, எடுத்து முடிக்க மூணு நாள் ஆகிடுச்சு” என்று சிரிக்கிறார்.

“இது எல்லாத்தையும் தனி ஆளா பண்ணிக்கிட்டு இருக்கும்போது, உங்களைச் சுத்தி இருந்தவங்களோட ரியாக்ஷன் என்னவா இருந்தது?”

“சினிமாவை ஒரு மாஸ் என்டர்டெயினிங் விஷயமாதான் மக்கள் பார்க்குறாங்க. சினிமா ஷூட்டிங்னாலே கிரேன், டிராலி இருக்கும், மைக்ல டைரக்டர் ஆக்ஷன், கட்னு சொல்வார், இருநூறு முன்னூறு பேர் பரபரப்பா இருப்பாங்க. இதையெல்லாம் வேடிக்கை பார்க்குறதுக்கே சுவாரஸ்யமா இருக்கும். ஆனா, அதுக்கு நேரதிரா என்னைப் பார்த்தாங்க. ‘யார்ரா இவன், வர்றான், கேமராவை வைக்கிறான்... இவன் பாட்டுக்கு பைத்தியம் மாதிரி ஏதோ பண்ணிக்கிட்டு இருக்கான்’னுதான் எல்லோரும் நினைச்சாங்க. 300 பேர் பண்ற விஷயத்தை ஒரு ஆள் பண்ணும்போது, ரொம்ப மன அழுத்தமா இருந்தது. ஒரு கட்டத்துல அவசரப்பட்டுடோமோ, செய்ய முடியாத வேலைக்குள்ள இறங்கிட்டோமோனுகூட பயந்தேன். நாம இந்தப் படத்தை முடிக்கலைனா, இந்தப் படம் நம்மளை முடிச்சிடும்னு தெரிஞ்சது. அதை சவாலா எடுத்துக்கிட்டு, ஒரு வழியா படத்தை முடிச்சுட்டேன்.”

சவால் சாதனையாக மாறட்டும் ராச்குமார்!

உ.சுதர்சன் காந்தி