தியாகராஜன் - பிரசாந்த்... சினிமா பிரபலங்களாக இவர்களிடம் பேசுவதைவிட, அப்பா - மகனாக அணுகினால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உரையாடலில், அப்பாமீதான அன்பைக் கொட்டுகிறார், பிரசாந்த். மகன்மீதான தந்தையின் பிரியத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார், தியாகராஜன்.

“பிரசாந்த்தை டாக்டராக்க ஆசைப்பட்டோம்; நடிகர் ஆயிட்டார். பிறகு நான் சினிமாவுல நடிக்கிறதை நிறுத்திட்டு, பையனோட வளர்ச்சிக்கு என்னால முடிஞ்சதைச் செஞ்சேன். அவரும் எனக்கு ஒரு மகனா நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கார். யாரும் இவரை ‘தியாகராஜனோட பையன்’னு சொல்றதில்லை, ‘நடிகர் பிரசாந்த்’ அவருக்கான அடையாளத்தோடதான் கூப்பிடுறாங்க. ஒரு அப்பாவுக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்...” - அப்பா தியாகராஜன் நெகிழ்ந்தால்,

“நீ என்ன வேணா பண்ணு; நாங்க எப்போவும் கூட இருப்போம்னு, 17 வயசுல நான் நடிக்க வந்தப்போ சொன்னார். இப்படி ஒரு அப்பா பெஸ்ட் ஃபிரெண்டா அமையும்போது, வாழ்க்கையில எதுவும் சாதிக்கலாம். ஒரு நடிகனா இன்னும் நிறைய கத்துக்கணும். அதுக்கு, வீட்டுலேயே ஒரு சினிமா யுனிவர்சிட்டியா இவரே இருக்கார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர்... இப்படி சினிமாவுல இவர் பண்ணது அதிகம்” என மகன் பிரசாந்த், அப்பா குறித்து அடுக்கிக்கொண்டே போகிறார்.

“பல கெட்டப், ஜானர், மணிரத்னம், ஷங்கர்னு பெரிய பெரிய இயக்குநர்களோட வொர்க் பண்ணதுனு... இப்படிப் பல விஷயங்களைப் பண்ணியிருக்கீங்க. ஆனாலும், நீங்க அடைய நினைச்ச உயரத்தை அடைஞ்சுட்டீங்களா?” - பிரசாந்திடம் இருந்து கேள்வியைத் தொடங்கினேன்.

“நடிகரா இரண்டு தலைமுறைக்கு என்னைத் தெரியும். ரசிகர்கள் என்மேல வெச்சிருக்கிற பாசம் புரியும். இப்போவும், ஷூட்டிங் முடிஞ்சா ஏதோ ஒருவகையில ரசிகர்கள்கிட்ட கனெக்டா இருக்கேன்” என பிரசாந்த் முடிக்க, தியாகராஜனிடம் திரும்பினேன்.

“50 படங்களைத் தொடப்போறார், பிரசாந்த். முதல் படத்துல இவரை ஹீரோவா பார்த்தப்போவும், இப்போ பார்க்கிறப்போவும் என்ன வித்தியாசத்தை உணர்றீங்க?”

“சினிமானா என்னன்னு தெரியாத வயசுல ஹீரோ ஆயிட்டார், இவர். அது, சத்யராஜ் பண்ணுன வேலை. தங்கச்சி கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுக்க வந்தவர், வொர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்த பிரசாந்த்தைப் பார்த்து, ‘உங்களுக்கு இவ்ளோ பெரிய பையன் இருக்கானா?’ன்னு ஆச்சர்யப்பட்டு, வெளியே சொல்லிட்டார். இன்டஸ்ட்ரியில இருக்கிறவங்க, இவரை ஹீரோவா வெச்சுப் படம் பண்ணணும்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. வாய்ப்புகள் வந்தப்போகூட, ‘மெடிக்கல் எக்ஸாம் எழுதியிருக்கார். சின்னதா ஒரு படம் பண்றோம்... ரெண்டுல எது பிக்கப் ஆகுதோ, அதைத் தொடர்வார்’னு சொல்லி பல வாய்ப்புகளைத் தவிர்த்தேன். இப்போ சினிமா இவருக்கு முழுமையா தெரிஞ்சிருக்கு. ‘பொன்னர் சங்கர்’ படத்தை எடுக்கும்போது, அந்தப் படத்துக்கு முழுக்க கிராஃபிக்ஸ் வொர்க் பண்ணுனது, பிரசாந்த்தான். ஃபிலிம் டு டிஜிட்டலுக்கு சினிமா மாறியிருக்கு... இந்த ரெண்டு மாற்றத்திலும் பிரசாந்த் இருந்திருக்கார்...” என்கிறார் பெருமிதமாக.

“அதுசரி, முதல் படம் தொடங்கி, இப்போவரைக்கும் மகனோட கையைப் பிடிச்சே கூட்டிக்கிட்டுப் போறீங்களே... ஏன்?” - என தியாகராஜனிடம் கேட்டதுதான் தாமதம். “கையைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போகல; கூட இருக்கேன். நான் நினைச்சிருந்தா, முதல் படமான ‘வைகாசி பொறந்தாச்சு’க்குப் பிறகு, தொடர்ந்து பெரிய இயக்குநர்கள், நடிகைகள்னு கமிட் பண்ணியிருக்க முடியும். ஆனா, டாப் லெவலுக்குப் போன பிறகும் ஹரி, சுசி கணேசன் மாதிரி பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். ‘ஜீன்ஸ்’னு ஒரு பெரிய ஹிட் கொடுத்த பிறகு, சடார்னு ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்துல கமிட் ஆனார், பிரசாந்த். இதெல்லாமே இவரோட முயற்சிதான்.

“எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா... பல அரசியல் தலைவர்களோட பழகியிருக்கீங்க. அரசியல் ஆசை வந்ததில்லையா?” - இது தியாகராஜனுக்கான கேள்வி.

“எனக்கு அரசியல் ஆசை இல்லை. எனக்கு மட்டுமல்ல, பிரசாந்த்துக்குக்கூட அரசியல் அழைப்பு வந்திருக்கு. ஆனா, நாங்க போகலை. அரசியல் எதுக்கு, மக்களுக்கு நல்லது பண்ணத்தானே... அதை வீட்டுல இருந்தேகூட பண்ணலாம். அதனால, வீட்டுக்குள்ளகூட அரசியல் பேசி, நேரத்தை வீணடிக்க மாட்டோம். தவிர, அரசியல்வாதியா ஒரு நாற்காலியில உட்கார்ந்துகிட்டு நல்லது பண்றதும் சாதாரண விஷயமில்லை. அவங்களுக்கும் கஷ்ட நஷ்டங்கள் இருக்கும்” என்றவரிடம், மகனின் சினிமாப் பயணத்தில் இருந்த சரிவுகள் குறித்துக் கேட்டேன்.

“என்னைப் பொறுத்தவரை பிரசாந்த்துக்கு சரிவுன்னு எதுவும் இல்லை. ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ படங்களுக்கு பிரசாந்த் போட்ட உழைப்பு அதிகம். அந்தச் சமயத்துல வேற படங்கள்ல கமிட் ஆக முடியலை. அதனால, இப்படி ஒரு மாயை உருவாகிடுச்சு” என்கிறார்.

கே.ஜி.மணிகண்டன் - படங்கள்: பா.காளிமுத்து

மகனிடம் தியாகராஜன் கேட்க விரும்பிய சில கேள்விகள் :

“எதிர்காலத்துல எந்தமாதிரி படங்களைப் பண்ண ஆசைப்படுறீங்க?”

“டெக்னாலஜி வளர்ந்த பிறகு உலகம் சின்னதாகிடுச்சு. மொழிப் பாகுபாடு இல்லாம படம் பார்க்கிற ரசிகர்கள் அதிகமாகிட்டாங்க. இனி, அவங்கதான் என் டார்கெட்.”

“ ‘ஜானி’ படத்துல பாட்டே இல்லை. அடுத்த படமும் இப்படியே இருக்குமா?”

“அதைக் கதைதான் தீர்மானிக்கும். தேவைனா வெச்சுக்கலாம்; வேணாம்னா வேணாம்தான்.”

“ஓர் அப்பாவா, என்கிட்ட பிடிச்ச விஷயம்?”

“திருக்குறளிலிருந்து பிடிச்ச ஒரு வார்த்தையை மட்டும் சொல்றது எவ்வளவு கஷ்டமோ, அப்படி இருக்கு உங்க கேள்வி. உங்ககிட்ட பிடிக்காததுன்னு எதுவுமே இல்ல டாடி!”

“வாழ்க்கையில என்னவா ஆகணும்னு ஆசைப்படுறீங்க?”

“நடிகன் ஆயிட்டேனே!”

அப்பாவிடம் பிரசாந்த் கேட்க விரும்பிய கேள்விகள் :

“ஓர் இயக்குநரா அடுத்து எந்த மாதிரியான படம் பண்ண ஆசை?”

“ஆடியன்ஸ் எதிர்பார்க்காத, இதுவரை யாரும் பண்ணாத ஒரு ஜானரைப் பண்ண ஆசை, பண்ணுவேன்.”

“ஓல்டு சினிமா டெக்னாலஜி, மாடர்ன் சினிமா டெக்னாலஜி... எது பிடிச்சிருக்கு?”

“ஓல்டு டெக்னாலஜிக்கு நேரம் அதிகம் வேணும், கருவிகள் கம்மியா இருந்தா போதும். மாடர்ன் டெக்னாலஜில நிறைய விஷயங்களை வேகமா பண்ணலாம். கருவிகள் அதிகமா வேணும். எனக்கு ரெண்டுமே பிடிக்கும்.”

“உங்களுக்கு நடிகர் பிரசாந்த்தைப் பிடிக்குமா, மகன் பிரசாந்த்தைப் பிடிக்குமா?”

“சினிமாவுல நடிக்கிற, என்கிட்ட நடிக்காத, மகன் பிரசாந்த்தைப் பிடிக்கும்.”

ஆனந்த விகடன் சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் வாசகர்கள் பிரசாந்திடம் கேட்ட கேள்விகள் இவை:

twitter.com/Parthiban50:

“நீங்க ஏன் எஸ்.ஜே.சூர்யா, அரவிந்த் சாமி, அர்ஜுன் மாதிரி டெரிஃபிக் வில்லனா நடிக்க்ககூடாது?!”

“நல்ல கேள்வி. நான் எப்பவுமே கேரக்டரை நம்புபவன். ஒரு பக்காவான கதை அமைஞ்சு, அதுல எனக்கு வில்லன் கேரக்டர் கிடைச்சா, நிச்சயம் பண்ணுவேன்.”

twitter.com/parimal05283138:

‘வின்னர் 2’ எதிர்பார்க்கலாமா?”

“நானும் அதை எதிர்பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். லேட்டஸ்ட்டாகூட ‘வின்னர்’ மாதிரி ஒரு கதை என்கிட்ட வந்தது. கண்டிப்பா, அதுக்கான முயற்சிகளைப் பண்றேன். எனக்குப் பிடிச்ச படம் அது. ‘வின்னர் 2’ மட்டுமல்ல, ‘வின்னர் 3’, ‘வின்னர் 4’னு நிறைய பண்ணலாம்.”

twitter.com/sanraj2416

“விஜய், அஜித்... இருவருடனான மறக்க முடியாத அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?”

“அஜித்தை எனக்கு ‘அமராவதி’ படத்துல இருந்தே தெரியும். நானும் அவரும் ‘கல்லூரி வாசல்’ படத்துல நடிச்சிருக்கோம். ஸ்பாட்ல வாலிபால் விளையாடியிருக்கோம், நிறைய பேசியிருக்கோம். விஜய் எப்பவுமே ஃபிரெண்ட். அவரை அமைதியான நபர்னு சொல்வாங்க. ஆனா, நல்லா ஜோக் அடிச்சுக்கிட்டு, கலாய்ச்சுக்கிட்டு ஜாலியா இருக்கிற அவருடைய இன்னொரு முகத்தை நான் பார்த்திருக்கேன்.”