பிரீமியம் ஸ்டோரி

• அமலாபால் நடித்துவரும் ‘ஆடை’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இம்மாதம் சென்னையில் தொடங்கும் ஷூட்டிங், வரும் ஜனவரியில் நிறைவடைகிறதாம்.

• தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘கவச்சம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’-வில் நடிக்கத் தயாராகி வருகிறார். இதன் ஷூட்டிங் இம்மாதம் 14-ம் தேதி தொடங்குகிறது.

மிஸ்டர் மியாவ்

• ‘முல்க்’, ‘மன்மர்ஸியான்’ என பாலிவுட்டில் இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த டாப்ஸி, தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் ‘கேம் ஓவர்’ என்ற த்ரில்லர் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ளார் டாப்ஸி.

• ‘96’ படத்தில் சிறு வயது த்ரிஷாவாக பார்வையாளர்களைக் கவர்ந்த கெளரி கிஷன், ஒரு மலையாளப் படத்தில் நடிக்கவிருக்கிறார். பிரின்ஸ் ஜாய் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு ‘அனுக்ரஹீதன் ஆண்டனி’
எனப் பெயரிட்டுள்ளனர்.

மிஸ்டர் மியாவ்

• திருமணத்திற்குப் பிறகு சினிமாவுக்கு குட் பை சொன்ன நடிகை ஜெனிலியா, ‘மெளலி’ என்ற மராத்திப் படத்தில் தன் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

மிஸ்டர் மியாவ்

• ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் லட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

நடிகை வெண்பா :
“எனக்கு டான்ஸ் ஆடுறது ரொம்பப் பிடிக்கும். எனக்கு டான்ஸ் கத்துக்கொடுத்தவர் ஜெயந்தி மாஸ்டர். அவர், கலா மாஸ்டர்கிட்ட சொல்லி கலைஞர் டி.வி-யில் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீஸன், ஆங்கர் பண்ணிணேன். ரெண்டாவது சீஸனுக்கு ரகுராம் மாஸ்டர்தான் நடுவர். என்னை அவர் மிகவும் என்கரேஜ் செய்தார். அவருடன் எடுத்துக்கொண்ட இந்த போட்டோ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.”

கேள்வி கார்னர்

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்

‘கொம்பு வெச்ச சிங்கம்’ படத்தின் ஷூட்டிங் எந்தளவில் இருக்கிறது?

“காரைக்குடியில் ஆரம்பிச்ச இந்தப் படத்தின் ஷூட்டிங், இப்போ பொள்ளாச்சியில் நடந்துவருது. அடுத்து தென்காசிக்குப் போறோம். இடைவெளியே இல்லாமல் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க ப்ளான் பண்ணியிருக்கோம். நம்ம மக்கள் சந்திக்கிற ஒரு முக்கியமான பிரச்னையை இந்தப் படம் பேசும்.”

சைலன்ஸ்

• இன்று பெரிய ஹீரோக்களின் லிஸ்ட்டில் இணைந்த ‘சங்கம்’ நடிகர், மணி நேரத் தயாரிப்பு நிறுவனத்தைத் தாண்டி, இப்போது வெளியில் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஆனால், இவரின் ஆரம்பக் கால தயாரிப்பாளருக்கு இவரது கமிட்மென்ட் ஒன்று நிலுவையில் உள்ளதாம். அதனால், அந்த நடிகரின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்றளவில் இருக்கிறாராம் அந்தத் தயாரிப்பாளர்.

• ‘நட்சத்திரம்’ படத்தில் வில்லனாக நடிக்க ஆறடி பாலிவுட் நடிகரிடம் படக்குழு கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர் ‘நோ’ சொன்னதால் வேறு ஒரு பவர்ஃபுல்லான நடிகரைத் தேடிவருகிறார்களாம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு