“லைஃப்ல பெண் குழந்தை பெத்துக்கிறதும், பெண் குழந்தையோட பொறக்கிறதும் பெரிய வரம்னு எனக்குப் புரிய வெச்சவ என் தங்கச்சி ஜெயஸ்ரீதான்'' - நடிகர் விஜய் சேதுபதி அவர் தங்கை பற்றிப் பேசும்போது இப்படிதான் சொல்வார்.

விஜய் சேதுபதியின் வளர்ச்சியைப் படிப்படியாக அருகில் இருந்து பார்த்தவர் ஜெயஸ்ரீ.

“அண்ணாவின் முதல் குழந்தையே நான்தான்னு சொல்லலாம். அவரும் அப்படித்தான் சொல்வார். எங்க வீட்டுல அண்ணன் தங்கை சண்டை எல்லாம் பெரிசா இருந்ததே கிடையாது. நான் எது கேட்டாலும் எங்க அண்ணன் எனக்காகச் செஞ்சு கொடுத்துடுவார்.

எனக்கு மொத்தம் மூணு அண்ணங்கள். நான்தான் கடைக்குட்டி. எல்லாரும் என் மேலே ரொம்ப பாசமா இருப்பாங்க. முதல் அண்ணாவுக்கும் எனக்கும் எட்டு வயசு வித்தியாசம். விஜய் சேதுபதி அண்ணாவுக்கும் எனக்கும் அஞ்சு வயசு வித்தியாசம். அவர்தான் என்னை ஸ்கூலுக்குக் கூட்டிப்போறது, வர்றதுனு எல்லாத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்வார். எனக்கு எது வேணும்னாலும், எது கேட்டாலும் உடனே அதை வாங்கிக் கொடுத்திடுவார்.

`சரியா சாப்பிடு... சரியா தூங்கு' என அக்கறையா சொல்லிட்டேயிருப்பார். ஒருவேளை சாப்பாட்டை மிஸ் பண்ணினாலும் திட்டுவார். கதை சொல்வதில் என் அண்ணா ஸ்பெஷலிஸ்ட். சின்ன வயசுல இருந்தே அந்த திறமை என் அண்ணன்கிட்ட இருந்தது. எப்போ கதை கேட்டாலும், உடனே எந்தவிதத் தடங்கலும் இல்லாம அவரே ஒரு கதையை யோசித்துச் சொல்வார். இப்பவும் என்னுடைய பொண்ணுக்கும் அவருடைய மகளுக்கும் நிறைய கதைகள் சொல்லுவார்.

சமீபத்துல நாங்க எல்லாரும் குடும்பத்தோட பாரீஸ் டூர் போயிருந்தோம். அப்போ என் பொண்ணுக்கும் அண்ணன் பொண்ணுக்கும், `என் கையை விட்டுட்டுத் தனியா போயிடக் கூடாது'னு ஒரு கண்டிஷன் போட்டேன். இந்தப் பழக்கமே எனக்கு விஜய் சேதுபதி அண்ணன்கிட்ட இருந்து வந்ததுதான். நாங்க எங்க வெளியே போனாலும் என் கையை இறுகப் பிடிச்சிட்டுதான் நிற்பார். அவர் என் கையைப் பிடிச்சிட்டு இருக்கிறதுலேயே எனக்கு கைவலி வந்து டும். அந்தளவுக்கு இறுக்கமா பிடிப்பார்!

`விஜய் சேதுபதி ரொம்ப உண்மையான மனுஷன்'னு சினிமா வட்டார நண்பர்கள் நிறைய பேர் சொல்லுவாங்க, இதுக்குக்காரணம் எங்க குடும்பம்தான். அப்பா அம்மா ரெண்டு பேருமே எங்க நாலு பேரையும் உண்மையா, நேர்மையா வளர்த்தாங்க. கஷ் டத்தைச் சொல்லி வளர்த்தாங்க.

அண்ணன் மனைவி... அதாங்க எங்க அண்ணி எனக்கு ரொம்ப க்ளோஸ், அவங்களும் திருமணத்துக்கு முன்னாடி என்னைத்தான் முதலில் சந்திச்சாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போவோம். எனக்கு கரெக்டா செட் ஆகுற மாதிரி டிரஸ் எடுத்துட்டு வருவாங்க. எங்க குடும்பமே ரொம்பப் பாசக்கார குடும்பம்'' எனச் சிரிக்கிறவர், டிசைனிங் துறையில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் பற்றியும் பகிர்கிறார்.

“உயர்கல்வியில் ஃபேஷன் டிசைன்தான் படிக்கணும்னு பத்தாம் வகுப்பிலேயே முடிவு பண்ணினதுதான். கோயம்புத்தூர்ல ஃபேஷன் டிசைனிங் படிச்சு முடிச்சேன். பொருளாதாரப் பின்னணியெல்லாம் எங்க குடும்பத்துக்குப் பெரிசா கிடையாது. பட்டம் வாங்கின முதல் தலைமுறையே நாங்கதான். அதனாலேயே, காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குப் போக முடிவு பண்ணினேன். திருப்பூரில் கார்மென்ட்ஸ் கம்பெனியில வேலை பார்த்தேன். உடைகள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் தேடி தேடி கத்துக்கிட்டேன். கொஞ்சநாள்தான் அங்கே இருந்தேன். பிறகு, ஹோம் சிக் காரணமா சென்னைக்கு வந்துட்டேன்.

சென்னையில் அங்கே இங்கேனு கொஞ்ச வருஷம் வேலை பார்த்துட்டிருந்தேன். இந்தச் சூழலில்தான் என் காதல் திருமணம், பெற்றோர் சம்மதத்தோடு நடந்தது. கம்பெனியில் என் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கலை. கொஞ்சம் மனவருத்தமா இருந்தது. அந்த நேரத்துல என் கணவர் ராஜேஷ், `நாமே சொந்தமா ரீடெயில் ஷாப் ஆரம்பிக்கலாம்'னு ஒரு யோசனை சொன்னார். அதற்கான வேலைகளில் இறங்கினோம்.

ஸ்கூல் யூனிஃபார்ம் ஆர்டர் எடுத்து நிறைய பள்ளிகளுக்குத் தைச்சுக் கொடுத்தோம். அதிலும் சில சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பிச்சோம். பல இடங்களில் இருந்து சரியான நேரத்துக்குப் பணம் கிடைக்கலை. அதைச் சமாளிக்கிற அளவுக்கு எங்க கையிலும் பணம் இல்லை. அதற்குப் பிறகு நிறைய திருமண ஆர்டர்கள் வாங்கி பிரைடல் பிளவுஸ் தைச்சுக்கொடுத்தோம். பத்து பேருக்கு வேலை கொடுக்கிற நிலைமைக்கு வந்தோம். இப்படியே கொஞ்சமா கொஞ்சமா வளர்ந்துட்டு வரும்போதுதான் பொட்டீக் ஷாப் வைக்கலாம்னு எனக்கும் ராஜேஷூக்கும் தோணுச்சு. அப்படி ஆரம்பித்ததுதான் ‘இறைவி’.

என்கூடவே இருந்து இதற்காக உதவி பண்ணுனது மூத்த அண்ணா ப்ரியன்தான். தேவையான எல்லா டிரஸ்ஸையும் மும்பையில நானே நேரில் போய் செலெக்ட் பண்ணறேன்.

‘இறைவி’ பொட்டிக் ஷாப் இப்போ வெற்றிகரமாகச் செயல்படுத்துன்னா... அதுக்குக் காரணம் கணவர் ராஜேஷ்தான். நான் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியா தான் இருக்கும் என நம்புவார். இந்த நாள் வரைக்கும் அவருக்கெனத் தனியா விசிட்டிங் கார்டு கிடையாது. என் விசிட்டிங் கார்ட்டைதான் அவர் பாக்கெட்டில் வெச்சிட்டு சுத்தறார்!” என மகிழ்கிறார் ஜெயஸ்ரீ. கடையின் பெயருக்கு ஏற்றாற்போல, அவரது கணவரும் மனைவியை `இறைவி'யாகவே பாவிக்கிறார்!

“அண்ணன் விஜய் சேதுபதியும் நிறைய உதவிகள் பண்ணுவார். தங்கச்சி எடுக்கிற முடிவு சரியா இருக்கும்னு என் அண்ணனுக்கு அவ்வளவு நம்பிக்கை. எப்போதாவது ஷாப்புக்கு விசிட் பண்ணுவார். சில ஐடியாக்களையும் சொல்லுவார்.

எங்களுடைய ஷாப்பில் பெண்களுக்கு பிரத்யோகமா ஸ்டுடியோ அட்டாச் பண்ணியிருக்கோம். எல்லாம் நல்லபடியா நடந்தாலும், எனக்குள்ளே நிறைய பயமும் இருக்கு. என் வேலையை ரொம்ப சரியா பண்ணணும்னு நினைக்கிறேன். தலைக்கனம் வந்துட கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன்’’ - நிதானத்தோடு நிறைவு செய்கிறார் ஜெயஸ்ரீ.

வாழ்த்துகள் இறைவி!

- சனா, படங்கள் : ப.சரவணகுமார்