‘ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2 என ஏறுமுகத்தில் இருக்கும்போதே பாலிவுட்டுக்கு ஃப்ளைட் பிடித்தவர் டாப்ஸி. `பேபி’, `பிங்க்’, `காஸி’ என இந்திப்படவுலகிலும் ஹிட்டுகள் கொடுத்து டாப்பில் இருந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு ‘கேம் ஓவர்’ மூலமாக என்ட்ரி கொடுக்கவிருக்கிறவரைச் சந்தித்தேன்.

“ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழ்ப்படத்தில் நடிக்கிறீங்கபோல...?”

``நிறைய படங்களில் நடிக்கிறதைவிட, தரமான சில படங்கள்ல நடிச்சாலே போதும், தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிச்சிடலாம்னு நினைக்கிறேன். `கேம் ஓவர்’ அப்படிப்பட்ட படம்தான். தமிழ், தெலுங்குல ரிலீஸ் ஆகுற இந்தப் படத்துக்கு நானும் ஒரு தயாரிப்பாளர். வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கேரக்டர். எனக்கு சின்ன வயசுல இருந்தே வீடியோ கேம்ஸ் விளையாடுற பழக்கம் இருக்கு. பிளே ஸ்டேஷன்-3 வரைக்கும் நிறைய விளையாடியிருக்கேன். அதனால இந்தப் படத்துல நடிக்கிறதும், கதையைப் புரிஞ்சிக்கிறதும் ஈஸியா இருந்துச்சு. கேம் தொழில்நுட்பப் பின்னணில எல்லாரையும் பதறவைக்கிற மாதிரி ஒரு த்ரில்லர் பண்ணியிருக்கோம்.”

“மதுரை மேல உங்களுக்குத் தனிப்பாசம் உண்டுன்னு சொல்றாங்களே?”

“ஆமா. மதுரை எனக்கு ஏன் ஸ்பெஷல் தெரியுமா... எல்லோரும் ‘ஜும்மந்தி நாடம்’ங்கிற தெலுங்குப் படம்தான் என்னோட முதல்படம்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா, நான் முதல்ல கமிட்டானது ‘ஆடுகளம்’தான். படம் கொஞ்சம் லேட் ரிலீஸ். வெற்றிமாறன் சார் மூலமா அறிமுகமாகலைனா, நான் சினிமாவிலயே இருந்திருக்க மாட்டேன். அவர் கத்துக்கொடுத்த விஷயங்கள்தான் இப்போவரைக்கும் எனக்குக் கைகொடுக்குது.

‘ஆடுகளம்’ ஷூட்டிங் டைம்ல மதுரை ரயில்வே காலனியில ஈவ்னிங் 7 மணிக்குமேல யாருமே இருக்கமாட்டாங்க. ஏரியா ரொம்பத் தனிமையா இருக்கும். அதனால, இந்த ஊரே 7 மணிக்குமேல தூங்கிடும்னு நினைச்சுட்டேன். அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, மதுரையே விடிய விடிய முழிச்சிருக்கும்னு. தமிழ்நாட்டுல ‘சாம்பார்’ ரொம்ப ஃபேமஸ்னு தெரியும். ஆனா, பரோட்டாவுக்கு சாம்பார் ஊத்தி சாப்பிடலாம்னு மதுரையிலதான் தெரிஞ்சுக்கிட்டேன். அசைவம் சாப்பிடுறவங்களுக்கு மதுரை சொர்க்கம். சைவம் சாப்பிடுறவங்க அங்கே போனா, சாம்பார் - பரோட்டாதான் கிடைக்கும். சாப்பாடு இந்த அளவுக்கு சுவையாகவும், விலை குறைவாகவும் இருக்கிறது மதுரையிலதான்.

அந்த ஊரையும் மக்களையும் எப்போதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப அன்பா நடந்துக்குவாங்க. பாசமா பார்த்துக்குவாங்க. இன்னொரு தடவை மதுரைக்குப் போகணும்னு விரும்புறேன். டைம் கிடைச்சா நிச்சயமா போவேன்.”

“பெண்களை மையப்படுத்திய படங்கள்ல நடிக்கிறதுனால, பெண்ணியம் பேசுறதுல நீங்க அதிக ஆர்வம் காட்டுறதா சொல்றாங்களே?”

“படத்துல நடிக்கிறதுனால மட்டும்தான் நான் இந்த மாதிரியான கருத்துகளைப் பேசுறேன்னு நினைக்க வேண்டாம். ‘பெண்களுக்கு சம உரிமை கொடுக்கணும், அவங்க முன்னேறணும்’னு நான் முன்பிருந்தே பேசிக்கிட்டுதான் இருக்கேன். பெண்ணாக இருந்தா அவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு சொல்றதைவிட, சம உரிமை கொடுக்கிறதே சிறந்தது. தவிர, இதெல்லாம் பெண்ணியவாதிகள்தான் பேசணுமா என்ன, எந்தப் பெண்ணும் பேசலாம் இல்லையா... எனக்கு வுமன் சென்ட்ரிக் கதைகள் அதிகமா வருது. எனக்குக் கதைகள்தான் முக்கியமே தவிர, அது எந்த வகைப் படம்ங்கிறது முக்கியமில்லை. தவிர, பெண்களை மையப்படுத்திய கதையை ‘வுமன் சென்ட்ரிக்’னு சொல்றமாதிரி, ஆண்களை முன்னிலைப்படுத்தும் படங்களை ஏன், ‘மேல் சென்ட்ரிக்’னு சொல்லமாட்டேங்கிறீங்க?”

“உங்களோட கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?”

“ஒரு கதையை நான் ஏற்கெனவே படமா பார்த்திருந்தாலோ அல்லது நான் ஏற்கெனவே நடித்த படங்களின் சாயல் இருந்தாலோ, அதுல நடிக்க விரும்பமாட்டேன். ஒரு படத்தைத் தனியாளாகத் தாங்கிப் பிடிக்கிற நம்பிக்கையை பாலிவுட் படங்கள்தான் எனக்குக் கொடுத்திருக்கு. எப்படியான கதையிலும் நடிச்சிடலாம்னு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு.”

“ ‘சூர்மா’, ‘மன்மர்ஸியான்’ படங்கள்ல ஹாக்கி பிளேயர் ரோல். இப்போ ‘புனே ஏசஸ் 7 பேட்மின்டன்’ டீமின் உரிமையாளரா இருக்கீங்க. ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப ஆர்வமோ?”

``ஸ்கூல் படிக்கும்போது அதிகமா விளையாடுவேன். டிவியிலகூட ஸ்போர்ட்ஸ் சேனல்கள்தான் என் சாய்ஸ். நான் ஒரு ஸ்குவாஷ் பிளேயர். ஏதாவது ஒரு வகையில விளையாட்டு வீரர்களுக்கு உதவியா இருக்க நினைச்சேன். பேட்மின்டன் விளையாட்டுக்கு ஸ்பான்சர்ஷிப் கம்மியா இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதனால, புனே அணியின் உரிமையாளர் ஆனேன். ‘சூர்மா’ படத்துல நடிக்கும்போது ஹாக்கி விளையாட்டின் சில ட்ரிக்ஸைக் கத்துக்கிட்டேன். ஜிம்ல மணிக்கணக்குல உடற்பயிற்சி செய்றதைவிட, விளையாடுறது உடம்புக்கும் மனசுக்கும் நல்லது.”

“சினிமாவில் உங்க நண்பர்கள்?”

“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை. அதுக்கு நானும் முயற்சி பண்ணல. என் முதல் தெலுங்குப் படத்தோட தயாரிப்பாளர் நடிகை லக்ஷ்மி மஞ்சு மட்டும்தான் எனக்கு இருக்குற ஒரே தோழி. நண்பர்களோட எமோஷனலா கனெக்ட் ஆயிட்டா, சினிமாவை விட்டு வெளியேறுறது கஷ்டமா இருக்கும். அதனால, நானும் அதிகமா அதுக்கு மெனக்கெடுறதில்லை. ஏன்னா, சினிமா நிரந்தரம் கிடையாது.”

“சோசியல் மீடியா ட்ரோல்களை எப்படி எடுத்துக்குவீங்க?”

“சிலருக்கு நானும் காமெடியா ரிப்ளை பண்ணுவேன். அவங்க என் ஹியூமர் சென்ஸுக்குத் தீனி போடுறாங்கனுதான் சொல்லணும். நான் யாருனு அவங்களுக்குத் தெரியும். அவங்க யாருனு எனக்குத் தெரியாது. தெரியாத ஒருத்தருக்காக வருத்தப்படத் தேவையில்லை. நல்ல கமென்ட்ஸுக்கு ரியாக்ட் பண்ணலாம், அவங்க அறிவுரைகளை ஏத்துக்கலாம். கலாய்க்கிறவங்களுக்குப் பதிலடி கொடுத்துக்கிட்டே இருந்தா, எனக்கு வேலை இல்லைனு நினைச்சுப்பாங்க.”

“காதல், கல்யாணம்?”

“என் லைஃப்ல நிறைய ரிலேஷன்ஷிப் வந்திருக்கு. அதுல பல ஹார்ட் பிரேக்ஸ். கல்யாணத்தை வாழ்க்கையில அவசியமான ஒண்ணா நினைக்கிறேன். எப்போ என்னால குழந்தைகளைப் பெத்து வளர்க்கவும், ஒரு குடும்பத்தைப் பார்த்துக்க முடியும்னும் நம்பிக்கை வருதோ, அப்போ கல்யாணம் பண்ணிக்குவேன். அதுக்கு முன்னாடி ஆசைப்பட்ட எம்.பி.ஏ படிப்பை முடிச்சிடணும்!”

சுஜிதா சென்