Published:Updated:

`செம ஸ்பீடு நயன்; டஸ்கி ஐஸ்வர்யா; அக்கறை விஜய் சேதுபதி..!' - வி.எஸ்.அனந்த கிருஷ்ணா ஷேரிங்ஸ்

`செம ஸ்பீடு நயன்; டஸ்கி ஐஸ்வர்யா; அக்கறை விஜய் சேதுபதி..!' - வி.எஸ்.அனந்த கிருஷ்ணா ஷேரிங்ஸ்

"இந்த ஷூட்ல நான் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே நயன்தாரா மேடம் வந்துட்டாங்க. `ஏன் மேடம் வந்ததைச் சொல்லல’னு நான் கேட்டதும், `அவங்க எப்போதும் அப்படித்தான். நீங்க பதற்றம் இல்லாம செட் பண்ணுங்க’னு சொன்னாங்க."

`செம ஸ்பீடு நயன்; டஸ்கி ஐஸ்வர்யா; அக்கறை விஜய் சேதுபதி..!' - வி.எஸ்.அனந்த கிருஷ்ணா ஷேரிங்ஸ்

"இந்த ஷூட்ல நான் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே நயன்தாரா மேடம் வந்துட்டாங்க. `ஏன் மேடம் வந்ததைச் சொல்லல’னு நான் கேட்டதும், `அவங்க எப்போதும் அப்படித்தான். நீங்க பதற்றம் இல்லாம செட் பண்ணுங்க’னு சொன்னாங்க."

Published:Updated:
`செம ஸ்பீடு நயன்; டஸ்கி ஐஸ்வர்யா; அக்கறை விஜய் சேதுபதி..!' - வி.எஸ்.அனந்த கிருஷ்ணா ஷேரிங்ஸ்

12 வருடங்களாக போட்டோகிராபி செய்து வரும் வி.எஸ்.அனந்த கிருஷ்ணா, கடந்த 7 வருடங்களாக செலிபிரிட்டி போட்டோ ஷூட்களையும் எடுத்து வருகிறார்.

நடிகர் - நடிகைகளின் போர்ட்ஃபோலியோ, படங்களுக்கான போஸ்டர் ஷூட் என `க்ளிக்’ வருபவர், அவரது கெரியரில் மறக்கமுடியாத 10 போட்டோக்களையும் அதைப் பற்றிய தகவல்களையும் இங்கே பகிர்கிறார்.

அருண் விஜய்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`என்னை அறிந்தால்’ படத்திலிருந்து அருண் விஜய் அவரோட உடம்பை செம ஃபிட்டா மெயின்டெயின் பண்ணிட்டு வரார். அந்த டைம்ல இருந்தே ஒரு ஷூட் பண்ணலாம்னு நாங்க பிளான் பண்ணிட்டு இருந்தோம். ஆனால், அது எதுவுமே செட்டாகாம தள்ளிப்போயிட்டு இருந்தது. `செக்கச்சிவந்த வானம்’ ரிலீஸுக்கு முன்னாடி ஷூட் பண்றதுக்கு நேரம் கிடைச்சது. அப்போ எடுத்த போட்டோதான் இது. செம வைரலாப் போச்சு; நிறைய பேர் ஷேர் பண்ணியிருந்தாங்க. 

அனுராக் காஷ்யப்:

அனுராக் காஷ்யப் சாரோட வொர்க் பண்ணப்போறோம்னு நினைச்சப்போவே செம பதற்றமா இருந்தது. சீனியர் டைரக்டர், `இமைக்கா நொடிகள்’ படம் மூலமா முதல்முறையா நடிக்க வந்திருக்கார்; அவரை எப்படி ஹேண்டில் பண்றதுனு சின்ன தயக்கம் இருந்தது. ஆனால், இந்த ஷூட் முழுக்கவே செம ஜாலியாப் போச்சு. என்னை ஒரு ஃப்ரெண்ட் மாதிரி ட்ரீட் பண்ணினார். எந்த போஸ் பண்ணச் சொன்னாலும் பண்ணிட்டே இருந்தார். ஒரு கட்டத்தில், `ஏய் போதும்பா... என் படத்துக்கே நான் இவ்வளவு போட்டோ எடுக்க மாட்டேன்’னு சொன்னார். அந்தளவுக்குப் பல கெட்டப்களில் நிறைய போட்டோ எடுத்தோம்.

அதர்வா - ராஷி கண்ணா:

தமிழ் சினிமாவில் செம ஸ்மார்ட்டான ஹீரோனா அது அதர்வாதான். போட்டோஸ்ல அவ்வளவு அழகா தெரிவார். `இமைக்கா நொடிகள்’ ஷூட்டில்தான் முதல்முறையா அவரோட நான் வொர்க் பண்ணினேன். காஸ்ட்டியூம், மேக்கப்னு அவருக்கான எல்லா விஷயங்களையும் அவரே பார்த்துப்பார். `இதைக் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க’, `அதைக் கொஞ்சம் மாத்திக்கோங்க’னு நாம சொல்றதுக்கே அங்க வேலை இருக்காது. ஒரு மாடல் மாதிரி அவரே எல்லாத்தையும் பக்கா செட் பண்ணிப்பார். அதர்வாவையும் ராஷி கண்ணாவையும் சேர்த்து வெச்சு எடுத்த இந்த ஷூட்டோட போட்டோஸை அதிகமாகப் பயன்படுத்தலை; இருந்தாலும் இது எனக்கு ஃபேவரைட் ஷூட்.

நயன்தாரா:

`இமைக்கா நொடிகள்’ படம் மூலமாகத்தான் நயன்தாரா மேடம்கூட ஃபர்ஸ்ட் டைம் வொர்க் பண்ணினேன். நான் எப்போதுமே படத்துக்கான ஷூட்னா சொன்ன டைம்ல இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே போயிடுவேன். ஏன்னா, அங்க போய் லைட் எல்லாம் செட் பண்ணி வைக்க கொஞ்சம் லேட்டாகும்; செலிபிரிட்டி வரவும் கொஞ்சம் லேட்டாகும். ஆனால், இந்த ஷூட்ல நான் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே நயன்தாரா மேடம் வந்துட்டாங்க. `ஏன் மேடம் வந்ததைச் சொல்லல’னு நான் கேட்டதும், `அவங்க எப்போதும் அப்படித்தான். நீங்க பதற்றம் இல்லாம செட் பண்ணுங்க’னு சொன்னாங்க. அதே மாதிரி இந்த ஷூட்டில் நிறைய காஸ்ட்டியூம்ஸ் மாத்தி எடுத்தோம். ஒவ்வொரு காஸ்ட்டியூம் மாத்தும் போதும், ஒரு ஆண் எந்தளவுக்கு வேகமா ட்ரெஸ் மாத்திட்டு வருவாங்களோ அந்த வேகத்தில் வந்தாங்க. எனக்கு செம ஷாக்கா இருந்தது. லேடி சூப்பர்ஸ்டார்னா லேடி சூப்பர்ஸ்டார்தான்.

விஜய் சேதுபதி:

ஒரு நடிகரா விஜய் சேதுபதியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். `காதலும் கடந்து போகும்’ படத்துக்காகத்தான் முதல்முறை அவரோட வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. ஷூட் ஆரம்பிக்கும் போதே, `எனக்கு நீங்க சொல்ற மாதிரி போஸ் பண்ணத் தெரியாது. நானே போஸ் பண்றேன். நீங்க எடுத்துக்கோங்க’னு சொல்லிட்டார். உண்மையாச் சொல்லணும்னா நாங்க சொல்லி அவர் போஸ் பண்ணியிருந்தாக்கூட அந்தளவுக்குப் பண்ணியிருப்பாரானு தெரியலை. அவரே அவ்வளவு அருமையா போஸ் பண்ணினார். ஷூட் முடிஞ்சு நாங்க கிளம்பும் போது, `எங்க போறீங்க... வீட்டுல இருந்து சாப்பாடு வந்திருக்கு. சாப்பிட்டுப் போங்க’னு எல்லாருக்கும் அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வர வெச்சிருந்தார். இந்தப் படத்துக்கு அப்பறம் அவரோட வொர்க் பண்றதுக்கான வாய்ப்பு ரெண்டு, மூணு முறை பக்கத்தில் வந்து மிஸ்ஸாகிடுச்சு. சீக்கிரம் அவரோட திரும்ப வொர்க் பண்ணணும்.

சந்தானம்:

சந்தானம் சாரோட படங்களுக்கு போட்டோ எடுக்கும் போது பயங்கர கமர்ஷியலாகத்தான் எடுப்போம். ஆனால், எனக்கு அவரை செம க்ளாஸா சில போட்டோஸ் எடுக்கணும்னு ஆசை இருந்தது. `சக்கப்போடு போடு ராஜா’ படத்துக்கான ஷூட்டப்போ, எடுத்த போட்டோதான் இது. இது படத்துக்காக எடுக்கலை; என் ஆசைக்காக எடுத்தது. சந்தானம் சாரை இந்த லுக்கில் பார்க்கும்போது செமையா இருக்கும்.

ஆரவ்:

ஆரவ், ஒரு மாடலா, ஒரு நடிகரா ஆகுறதுக்கு முன்னாடி என்கிட்ட அசிஸ்டென்ட் போட்டோகிராபா இருந்தான். நான்தான் அவனோட போட்டோஸைப் பார்த்துட்டு, `நீ ஏன் நடிக்கக் கூடாது’னு சொல்லி சில இயக்குநர்களுக்கு அறிமுகப்படுத்தி வெச்சேன். அதுக்கப்புறம் அவன் `சைத்தான்’ படத்துல நடிச்சு, `பிக் பாஸ்’ போய் ஜெயிச்சுட்டு வந்ததுக்கு அப்புறம் `ராஜபீமா’ படத்தில் ஹீரோவா கமிட்டானான். அந்தப் படத்தோட ஷூட்டுக்காக தந்தம் இருக்கிற யானையைத் தேடி அலைஞ்சோம். தமிழ்நாட்டுல எங்கேயும் கிடைக்கலை. கேரளாவில் வெள்ளம் போயிட்டு இருந்த சமயத்தில், அங்க ஒரு யானை இருக்குனு சொன்னாங்க. மழை இல்லாத ஒரு ஊருக்கு அந்த யானையைக் கொண்டு வரச்சொல்லி, அங்க வெச்சு எடுத்த போட்டோதான் இது. 

ஜிகர்தண்டா:

`ஜிகர்தண்டா’ படத்தோட போட்டோஸ்தான் என்னை வெளியில தெரிய வெச்சுச்சு. கார்த்திக் சுப்புராஜ் படத்தோட போஸ்டர்ஸ் எப்போதும் வித்தியாசமா இருக்கும். இந்தப் படத்துக்காகவும் நாங்க நிறைய வித்தியாசமா முயற்சிகள் பண்ணினோம். இந்த காரை வெச்சு எடுத்த போட்டோஸ் எல்லாம் எனக்கு ரொம்ப ஃபேவரைட். இந்தப் படத்துக்கு அப்புறம் கார்த்திக் சுப்புராஜோட `இறைவி’ படத்திலேயும் வொர்க் பண்ணினேன். 

ஐஸ்வர்யா ராஜேஷ்:

`காக்கா முட்டை’ படத்துக்கு அப்புறம் ஐஸ்வர்யா ராஜேஷை செம மாடர்னா ஒரு ஷூட் பண்ணியிருந்தேன். `காக்கா முட்டை’ படத்தில் நடிச்ச பொண்ணா இதுனு நிறைய பேர் அந்தப் போட்டோஸை ஷேர் பண்ணினாங்க. சமீபத்தில் ஐஸ்வர்யா நடிச்ச `கனா’ படத்துக்கு ஷூட் பண்ணும் போது, `மறுபடியும் நாம ஒரு ஷூட் பண்ணலாம்’னு சொன்னாங்க. அதுக்கப்புறம் எடுத்த போட்டோஸ்தான் இது. எனக்கு டஸ்கி கலர்ல இருக்கிறவங்களை போட்டோ எடுக்குறது பிடிக்கும். ஐஸ்வர்யா ஏற்கெனவே டஸ்கி கலர்தான்; இந்த ஷூட்டுக்காக அவங்களை கொஞ்சம் எக்ஸ்ட்ரா டஸ்கி லுக்காக்கி எடுத்தோம்.

ஜீவா:

ஜீவாவை `கவலை வேண்டாம்’, `சங்கிலி புக்கிலி கதவத் தொற’னு சில படங்களுக்கு ஷூட் பண்ணியிருக்கேன். ஆனால், `கொரில்லா’ படத்துக்காக அவரை ஷூட் பண்ணினது மறக்க முடியாத அனுபவம். சிம்பன்ஸி குரங்கையும் அவரையும் சேர்த்து வைத்து ஒரு ஷூட் எடுத்தோம். அந்தக் குரங்கு யார் சொல்றதையும் கேட்காது; அதுவா எதையாச்சும் பண்ணிட்டே இருக்கும். அந்தக் குரங்கு பண்றதுக்கு ஏற்ற மாதிரிதான் ஜீவாவும் போஸ் பண்ணணும். ஜீவாவுக்கு இது ரொம்ப கஷ்டமான வேலைதான். இருந்தாலும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காம பண்ணினார். ஜீவாவை அந்தக் குரங்கு படுத்தி எடுத்திருச்சு. உதட்டோடு உதடு வெச்சு முத்தமெல்லாம் கொடுத்துச்சு. 3 மணி நேர போட்டோ ஷூட்டிலேயே இந்தக் குரங்கை கன்ட்ரோல் பண்ண முடியலை. எப்படித்தான் முழுப் படத்தையும் எடுத்தாங்கனு தெரியலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism