Published:Updated:

சர்வம் சவுண்டு மயம்!

சர்வம் சவுண்டு மயம்!
பிரீமியம் ஸ்டோரி
சர்வம் சவுண்டு மயம்!

சர்வம் சவுண்டு மயம்!

சர்வம் சவுண்டு மயம்!

சர்வம் சவுண்டு மயம்!

Published:Updated:
சர்வம் சவுண்டு மயம்!
பிரீமியம் ஸ்டோரி
சர்வம் சவுண்டு மயம்!

“ ‘எந்திரன்’ படத்தோட ‘2.0’ படத்தை ஒப்பிட்டா, இதுல எல்லாமே சவால்தான். பறக்கும் செல்போன்கள், பறவையோட அட்ராசிட்டி... இப்படி படத்தோட பெரும்பகுதி எனக்குப் பெரிய சவால். ஏன்னா, VFX காட்சிகளுக்கு சவுண்டுதான் முக்கியமான விஷயம். அதுதான் அந்தக் காட்சிக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கும்’’ பரபரவெனப் பேசுகிறார், ‘2.0’ மூலம் 4-டி ஒலித்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் ரசூல் பூக்குட்டி. 

சர்வம் சவுண்டு மயம்!

“ஆயிரக்கணக்கான செல்போன்கள் ஒரே நேரத்தில் வைப்ரேட் ஆகிற காட்சியைப் பதிவுசெய்த அனுபவம் எப்படி இருந்தது?”

“ஷங்கர் இந்தக் காட்சியைப் பற்றி விவரிச்சப்போ, ஆயிரம் செல்போன்களோட வைப்ரேஷன் ஆடியன்ஸுக்குப் ஃபீல் ஆகணும்னு சொன்னார். அதுக்கு 4-டி சவுண்டு தொழில்நுட்பம்தான் சரியா இருக்கும்னு தோணுச்சு. நூற்றுக்கணக்கான மொபைல் போன்களை வைப்ரேட் பண்ணி, சவுண்டு ரெக்கார்டு பண்ணினேன். தவிர, க்ளைமாக்ஸ்ல ஸ்டேடியத்தில் மொத்தம் 80,000 பேர் இருப்பாங்க. இந்தக் காட்சிக்காக, 200 பேரை என் ஸ்டுடியோவுக்கு வரவெச்சு அவங்க போன் ரிங்டோன்களைப் பதிவு செஞ்சோம். அதேமாதிரி, போன் பறக்கிற காட்சிகளுக்காக பல நூறு மொபைல்களைப் பெரிய வலையில கட்டி மேலும் கீழும் பறக்கவிட்டுப் பதிவு செஞ்சோம். இப்படிப் பல அனுபவங்களைச் சொல்லிக்கிட்டே போகலாம்.”

“புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துறது ஓகே... ஆனா, அதற்கான திரையரங்குகள் இங்கே குறைவா இருக்கே?” 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வம் சவுண்டு மயம்!

“ ‘2.0’ படத்துல பயன்படுத்திய 4-டி தொழில்நுட்பம் உலகளவுல இதுதான் முதல் முயற்சி. இது 3டி படம்ங்கிறதால, அதை எங்களால ஈஸியா பண்ண முடிஞ்சது. இந்தப் படத்துக்குப் பிறகு, இந்தத் தொழில்நுட்பத்துக்கு ரெஸ்பான்ஸ் அதிகமா இருக்கு. பல தியேட்டர்கள் மாறத் தயாரா இருக்கு. ஆனா, அதுக்கான நேரம் எங்ககிட்ட இல்லை. கவனிச்சிருந்தா தெரியும்... படத்துல மொபைல் வைப்ரேட் ஆகும்போதெல்லாம், உங்க காலுக்கு அடியில அதை உணர்ந்திருப்பீங்க. இப்படி, இதோட பயன்களை மீடியாக்கள்தான் மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும். இப்போ இருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சியில், தியேட்டர்களை 4-டி தரத்துக்கு மாத்த ஐந்து நாள் போதும். அதை தியேட்டர்கள்தான் முன்னின்று செய்யணும்.”
 
“இந்தப் படத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிற 4-டி தொழில்நுட்பத்துக்கு ‘SRL’னு பெயர் வெச்சிருக்கீங்க. என்ன காரணம்?”

“ஷங்கர், ரசூல் பூக்குட்டி, லைகா புரொடக்‌ஷன்ஸ்... இதோட சுருக்கம் இது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு நிறைய டைம் தேவைப்பட்டது. அதுக்குத் தேவையான நேரத்தை ஷங்கர் எனக்குக் கொடுத்தார். இந்தத் தொழில்நுட்பத்துக்காகப் பல ஆய்வுகள் பண்ணிதான், பயன்படுத்தினோம். முக்கியமா, ஏற்கெனவே தியேட்டரில் இருக்கிற டால்பி அட்மாஸ் ஆடியோவின் சாஃப்ட்வேர் மற்றும் அல்காரிதத்தை ரீரைட் பண்ணிதான், இந்தத் தொழில்நுட்பத்தை சாத்தியமாக்கினோம்.”

சர்வம் சவுண்டு மயம்!

“பெரிய பட்ஜெட் படங்களுக்கும், சிறு பட்ஜெட் படங்களுக்கும் வொர்க் பண்றப்போ, நீங்க உணருகிற வித்தியாசங்கள்?”
 
“ஒவ்வொரு படத்துக்கும் தேவைகள் மாறும். ‘2.0’ படத்துக்குப் பயன்படுத்திய தொழில்நுட்பம் வேறமாதிரி இருக்கும்; ‘ஹைவே’ படத்துக்குப் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் வேறமாதிரி இருக்கும். பெரிய படங்களுக்கு பட்ஜெட் அதிகம். அதனால, புதுமைகளைப் புகுத்தலாம். அதேசமயம், சிறு பட்ஜெட் படங்களுக்கு வொர்க் பண்றப்போ, முழுச் சுதந்திரம் கிடைக்கும். அவ்ளோதான்.”

“ஹீரோவா நடிக்கிற அனுபவம் எப்படியிருக்கு?”

“ ‘The sound story’ படத்தில் என்னை ஹீரோவா அறிமுகப்படுத்திக்கணும்னு நடிக்கல. எதார்த்தமா அமைஞ்ச படம் இது. இதுல, நான் நானாகவே வர்றேன். இந்தப் படத்துக்காக, 1,300 வருடங்களாக நடக்கும் கேரளாவின் விஷ்ணுபுரம் ஏரியா கோவில் கொண்டாட்டங்களைப் பதிவு பண்ணலாம்னு, அங்கே போனேன். அங்கேதான் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ராஜீவ் பனகலைப் பார்த்தேன். அவர், இந்த அனுபவத்தை எனக்குப் படமா எடுத்துத் தரமுடியுமான்னு கேட்டார். சரின்னு சொல்லிட்டேன். ஒரு ஆவணப்படம் மாதிரி ஆரம்பிச்சு, கலைப் படைப்பா எடுத்துட்டோம். இந்த மாசம் ரிலீஸுக்கு பிளான் பண்ணியிருக்கோம்.”  

சர்வம் சவுண்டு மயம்!

“சவுண்டு இன்ஜினீயர் ஆகணும்ங்கிறது, சின்ன வயசு ஆசையா?”

“நான் இயற்பியல் மாணவன். சூப்பர் கன்டெக்டிவிட்டிக்கு தியரி கண்டுபிடிச்சு, நோபல் பரிசு வாங்கணும்னு ஆசைப்பட்ட பையன். ஆனா, அப்பா ஆசைக்காக, சட்டம் படிச்சேன். அங்கே அறிமுகமான நண்பர் ஒருத்தர்தான் எனக்கு சவுண்டு இன்ஜினீயரிங்கை அறிமுகப்படுத்தினார். சவுண்டு இன்ஜினீயரிங்குக்கும் இயற்பியலுக்கும் ஒரு தொடர்பு இருக்குன்னு நினைச்சேன். அதனால, சட்டப்படிப்பைப் பாதியில விட்டுட்டு, புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சவுண்ட்ஸ் பற்றிப் படிச்சேன். அங்கே போனபிறகு, அப்படி எந்தச் சம்பந்தமும் இல்லைனு புரிஞ்சுக்கிட்டேன். முதல் வருடம் ரொம்பக் கஷ்டப்பட்டேன். அந்த வருடத் தேர்வுல நான் ஃபெயில். ஆனா, அதுக்குப் பிறகு பல படங்களைப் பார்த்து, அதுல பயன்படுத்திய சவுண்ட்ஸ் பற்றி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, சினிமா வாய்ப்புகள் கிடைச்சது, ஆஸ்கரும் வசமானது.”

“ஷங்கருடன் வேலை செய்த அனுபவம்?”

“ஷங்கருடன் இதுவரை மூணு படத்துல வேலை பார்த்திருக்கேன். எங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. நானும் அவரும் ஈருடல் ஓருயிர்னுகூட சொல்லலாம். அவர் நினைக்கிறது, அவருக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். அவர் ஒரு கதையைச் சொன்னா, அதைப் பத்து மடங்கு பிரமாண்டமா காட்ட என்ன பண்ணலாம்னு யோசிப்பேன். ‘2.0’ படத்துல ஒரு குருவிக்குஞ்சு மரத்துல இருந்து அக்‌ஷய் குமார் கையில விழும். இந்தக் காட்சிக்கு சவுண்டு டிசைன் பண்றதுதான் ரொம்ப சவாலா இருந்தது. ஏன்னா, அந்தக் காட்சியில குருவியோட கடைசி மூச்சு வேணும்னு ஷங்கர் சொன்னார். சவுண்டு மிக்ஸிங்ல அந்தக் காட்சியைப் பார்த்து, கலங்கிட்டார் ஷங்கர். படத்துல இடம்பெற்ற நெகிழ்ச்சியான காட்சி இது.” 

“ரஜினி, அக்‌ஷய் குமார் பற்றிச் சொல்லுங்க?”


“ ‘2.0’ பட சமயத்துல ரஜினி சார் என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘சீக்கிரமே அடுத்த ஆஸ்கர் கிடைக்கும்’னு சொல்வார். இது உண்மையா நடக்கும்னு எனக்குத் தோணுது. அவர் ஒரு மாமனிதர். அவரைச் சந்திச்சுப் பேசினா, நாமதான் பெரிய மனுஷங்கன்னு ஃபீல் பண்ண வெச்சிடுவார்.

அக்‌ஷய் குமார் எனக்கு நல்ல நண்பர். ‘2.0’ படத்தை நீங்கதானே முதல்ல பார்த்திருப்பீங்க. படம் எப்படி வந்திருக்குன்னு கேட்பார். ‘படத்துல நீங்க வில்லன் இல்ல; ஹீரோ’ன்னு சொல்லிட்டேன்.”

சனா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism