Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

று வருடங்களுக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவுக்குத் திரும்பிய இலியானா... ‘அமர் அக்பர் ஆன்டணி’ என்கிற தெலுங்குப்படத்தில் நடித்தார். படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியைச் சந்தித்தது. இப்போது மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பிவிட்டார் இலியானா. அடுத்து ஜான் ஆபிரகாமுடன் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். விரட்டிட்டீங்களேய்யா!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரியங்கா சோப்ரா - அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமணம்தான் இந்த வார வைரல்.  கிறிஸ்துவ-இந்து முறைகளின்படி ஜோத்புரில் கோலாகலமாக நடைபெற்றது . பிரபல ஹாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த மணப்பெண் உடை, 18 அடி பிரமாண்ட கேக் என ‘ஃபேன்டஸி’ திருமணக் காட்சிகள் ‘வாவ்’ போடவைத்தன. இந்துமுறைத் திருமணத்தன்று, ‘சிவப்பு தவிர வேறு எந்த நிறமும் என் திருமண ஆடையில் இருக்கக் கூடாது’ என்று ப்ரியங்கா ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட, சிவப்பு நிறத்தில் லெஹெங்கா சோலியைத் தயார் செய்துகொடுத்திருக்கிறார் சபியாசச்சி முகர்ஜி. இவர்தான் ‘விருஷ்கா’, ‘தீப்வீர்’ திருமணங்களுக்கும் ஆடைகளை வடிவமைத்தவர். சூப்பர் முகர்ஜி!

இன்பாக்ஸ்

யன்தாரா நடிப்பில் மட்டுமன்றி கேமரா, எடிட்டிங் ஆகியவற்றிலும் ஆர்வம் செலுத்திவருகிறார். அவருக்கு விரைவில் இயக்குநர் ஆகும் எண்ணமும் இருக்கிறது என்கிறது அவரின் நட்புவட்டம். அனேகமாக 2019-ல் நயன்தாரா ஒரு படத்தை இயக்க வாய்ப்பிருக்கிறதாம். சூப்பர் பேபி!

இன்பாக்ஸ்

மல் தயாரிப்பில் உருவாகும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசனுடன் நாசர் மகன் அபிஹசன் நடித்து வருகிறார். ‘கடாரம் கொண்டான்’ படம் முழுக்க வரும் முக்கியமான கதாபாத்திரத்தில்  நடிக்கும் அபிஹசனுக்கு ஜோடிதான், அக்‌ஷரா ஹாசன். மலேசியாவில் நடந்துவந்த இப்படத்தின் ஷூட்டிங்கில், நாசர் மகனின் நடிப்பைப்  பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார், கமல்ஹாசன். வாரிசு ரெடி!

இன்பாக்ஸ்

‘ஆன்லைன் ஸ்ட்ரீமிங்’கில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. விஜய்சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ வெளியாகியிருக்கும் நிலையில், அப்படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கிய இரண்டாவது படமான ‘ஒரு பக்கக் கதை’ மூன்று ஆண்டுகள் கழித்து நேரடியாக ‘ஜீ5’ (Zee5) ஆன்லைன் போர்ட்டலில் தற்போது வெளியாகவுள்ளது.  சிறப்பு சிறப்பு

இன்பாக்ஸ்

நாடாளுமன்றத் தேர்தல், உலகக் கோப்பை இரண்டும் அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு வில்லனாக அமைந்துவிட்டன. வழக்கம்போல் இந்த முறையும் தேர்தலால், வேறு நாடுகளில் தொடரை நடத்தவேண்டிய சூழ்நிலை. உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களைக் காரணம் காட்டி, ஆரோன் ஃபின்ச், கிளென் மேக்ஸ்வெல் ஏலத்திலிருந்து விலகிவிட்டனர். நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தவிர்த்து, மற்ற அணி வீரர்களும் முழுமையாக விளையாடுவது சந்தேகமே. போதாக்குறைக்கு, முன்னணி பௌலர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று பி.சி.சி.ஐ-யிடம் கொடிபிடித்துக் கொண்டிருக்கிறார் கேப்டன் கோலி. ஸ்டார்ட்டிங் ட்ரபிள்!

இன்பாக்ஸ்

ஹாலிவுட்டின் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்று, ஆஸ்கர் விருதுகள். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஹாலிவுட்டில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், இந்த வருட ஆஸ்கர் விருதுகளுக்குத் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், நடிகர் கெவின் ஹார்ட். பல மேடை நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளராகக் கலக்கியிருந்தாலும், ஒருபால் ஈர்ப்பாளர்கள் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இவர் அவதூறாகப் பேசிய பழைய கதை ஒன்று இருக்கிறது. அதனால், இவர் ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் சரியாக இருக்காது என விமர்சனங்கள் எழ, ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பைத் தானாகவே முன்வந்து தவிர்த்திருக்கிறார், கெவின். நல்ல முடிவு!

இன்பாக்ஸ்

ந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் வி.ஐ.பி-கள் லிஸ்டில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் நிற்கிறார் சல்மான்கான். ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிடுகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்தையும், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த ஷாருக்கான் தற்போது 13வது இடத்தில் உள்ளார். டாப் 100 இடங்களில், தமிழ்நாட்டில் இருந்து ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ், நயன்தாரா, கமல்ஹாசன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தியா வல்லரசாகிடும் போல! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism