
வலைபாயுதே

twitter.com/kumarfaculty
இரண்டு பேரில் ஒருவர் மட்டும் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கும் சூழ்நிலை உலகின் கடைசி இரு மனிதர்களுக்குள்ளும்கூட நடக்கக் கூடாது...!
twitter.com/udaya_jisnu
கல்யாணப் பத்திரிக்கைய முதல்ல குலதெய்வத்துக்குப் படைக்கிற மாதிரி, புதுப் பாட்டு எது வந்தாலும் முதல்ல வடிவேலுக்குத்தான் `படைக்கிறாங்க’ மீம் கி்ரியேட்டர்ஸ்...
twitter.com/smhrkalifa
கடற்கரைகள், பூங்காக்கள், திரையரங்கின் கார்னர் சீட்டுகள் வரிசையில், காதலர்களுக்கு பிடித்த இடமாக பாஜக பொதுக் கூட்டங்களும் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.
twitter.com/ HAJAMYDEENKS
இப்பல்லாம் வடிவேலு காமெடி பார்க்கும் போது அதை வைத்து ஹிட்டடித்த மீம்ஸ்களும் கண் முன்னே வந்து சிரித்து விட்டுப் போகிறது!
twitter.com/ itsjoker
காதலி மனைவியான பின் கண்டுபிடிக்கும் முதல் கண்டுபிடிப்பு.
“உங்களுக்குக் கொஞ்சம்கூட அறிவே இல்லைங்க” என்பதுதான்.
#மனைவியதிகாரம்
twitter.com/annainpillai
சிம்பு தனக்குப் பெண் பார்க்கச் சொல்கிறார் - டி.ராஜேந்தர் #இனி வந்தா மாப்பிள்ளையாதான் வருவார் மொமென்ட்!
twitter.com/motheen_farook
`மைல்டு அட்டாக்’ ன்றதுஇறைவனுடைய மிஸ்டு கால்..!
twitter.com/ manipmp
ஆழமான பேச்சு நீளமாய் இருப்பதில்லை
நீளமான பேச்சு ஆழமாய் இருப்பதில்லை!

twitter.com/Thaadikaran
வீடு எல்லாம் ஒதுக்குபுறமா போனதும் டாஸ்மாக் எல்லாம் சிட்டிக்குள்ள வந்ததும்தான் ஊரோட வளர்ச்சின்னு ஆயிருச்சுபோல..!
twitter.com/gips_twitz
டேய் மச்சா, ரஜினி சிக்கியிருக்காரு, கூட நடிக்க ஆசப்பட்டவங்கலாம் வாங்கன்னு ஷேர் ஆட்டோவுல அமுத்தி அமுத்தி ஆள் ஏத்துற மாதிரி பெருங்கூட்டத்தையே ஏத்திக் கொண்டு வந்துருக்காரு கார்த்திக் சுப்புராஜ்...! #பேட்ட
twitter.com/LogaTweets
பண்ணைக்கோழியின் வாழ்வில் மரணத்தைவிட என்ன பெரிய மகிழ்ச்சி இருந்துவிடப்போகிறது?
twitter.com/arattaigirl
மகளைவிட சாதி பெருசான்னு கேள்வியைக் கேட்டுப் பழகுங்க. காதல் பெருசுன்னு நினைச்ச கவுசல்யா வாழத் தான் நினைச்சாங்க. சாதி பெருசுன்னு நினைச்ச அவங்கப்பா மகளையே சாகடிக்க நினைச்சார். எதுக்கு முக்கியத்துவம் தரணும்னு புரிஞ்சுக்கோங்க. டாட்
twitter.com/MydeenTenkasi
அபத்தம்னே உணரவிடாத ஈகோதான் ரொம்பக் கொடூரம்
twitter.com/idharunraja
ஆனா எப்பவுமே நாம அதிகபட்ச நேர்மையையும், தூய்மையையும் பாதிக்கப்படுறவங்ககிட்டயும், பெரும் பான்மையை எதிர்த்துப் போராடுறவங்க கிட்டயும்தான் எதிர்பார்க்குறோம்...

twitter.com/Numinous_2
மனச டைவர்ட் பண்ண யார் ஜடையவாவது புடிச்சு இழுக்கணும்னு தோணும்போதுலாம் அதுக்குன்னே Take it easy டைப், ரொம்ப க்ளோஸா சில ஃபிரண்ட்ஸ் இருந்தா வாழ்க்கைல பிரச்னைலாம் ஈஸியா சமாளிச்சிடலாம்.
twitter.com/SolitaryReaper_
சற்றும் மனம் சலிக்காமல் காலமெல்லாம் அவர்கள் புகட்டிவந்த புளிப்பு காடியை ஒரேயொருதரம் அவர்களை சுவைக்க வைத்துப் பாருங்கள். எழும் ஓலம் செவிப்பறைகள் தாங்காது.
- சைபர் ஸ்பைடர்