Published:Updated:

'வாவ்’ மூவி கொண்டாட்டம்

'வாவ்’ மூவி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
'வாவ்’ மூவி கொண்டாட்டம்

'வாவ்’ மூவி கொண்டாட்டம்

'வாவ்’ மூவி கொண்டாட்டம்

'வாவ்’ மூவி கொண்டாட்டம்

Published:Updated:
'வாவ்’ மூவி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
'வாவ்’ மூவி கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்க நெருங்க, உலகம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் களை கட்டும். அவற்றில் ஒன்று, குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள். இதோ... இந்த வருடம் கிறிஸ்துமஸ் சமயத்தில் சுட்டிகளை குஷிப்படுத்தும் சில படங்கள்...

'வாவ்’ மூவி கொண்டாட்டம்

பெருங்கடலுக்குள் ஓர் உலகம், அங்கே ஒரு நாடு, ஒரு ராஜா, சட்டதிட்டங்கள், ராணுவப் படை, வித்தியாசமான உயிரினங்கள்...

‘அக்வாமேன்’ கதை நடக்கும் அந்த உலகின் பெயர், அட்லான்டிஸ். பேட்மேன், சூப்பர்மேன், வொன்டர்வுமன் போன்ற சூப்பர் ஹீரோக்களை நமக்கு அறிமுகப்படுத்திய DC காமிக்ஸின் மற்றொரு படைப்பு. கடல் உலகத்தைச் சேர்ந்த ராணிக்கும், நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் பிறந்த மகன்தான் ஆர்தர் கரி என்னும் அக்வாமேன். இந்த சூப்பர் ஹீரோ இதற்குமுன் ‘ஜஸ்டிஸ் லீக்' படத்திலும் தோன்றியிருப்பார். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் கால்ட்ரோகோவாக நடித்த ஜேசன் மேமோதான், இந்த `அக்வாமேன்' வேடத்தில் கலக்கியுள்ளார்.

DC காமிக்ஸ் தொடங்கிவைத்த சினிமாத் தொடரின் ஆறாவது படம் இந்த அக்வாமேன். கடலில் மூழ்கிக் கிடக்கும் அட்லான்டிஸ் நாட்டை ஆளும் ஆர்தரின் சகோதரன் மொத்தம் இருக்கும் 7 ஆழ்கடல் நாடுகளையும் ஒன்றிணைத்து, பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களின் நாட்டைக் கைப்பற்ற திட்டம் தீட்டுகிறான். அதை அட்லான்டிஸ் நாட்டில் வாழும் மீரா எனும் போராளியின் உதவியுடன் நம் அக்வாமேன் எப்படி முறியடிக்கிறான் என்பதுதான் கதை.

அக்வாமேனுக்குக் கடலையே கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அவன்தான் கடலின் ராஜா. பிரமிப்பான சண்டைக் காட்சிகள், வியக்கவைக்கும் விலங்குகள், சூப்பர் ஸ்பெஷல் த்ரில் காட்சிகள் எனப் படத்தில் ரசிக்க நிறைய விஷயங்கள். 3D-யில் பார்ப்பது மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வாவ்’ மூவி கொண்டாட்டம்

2.0 படத்தில், குட்டி சிட்டியான 3.0, சுட்டியாக இருந்து சட்டென மொபைலாக மாறுவார். இதற்கெல்லாம் முன்னோடி, 2007-ல், மைக்கல் பே இயக்கத்தில் வெளியான ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ திரைப்படம்.
இந்த கிறிஸ்துமஸுக்கு வரும் ‘பம்பிள் பீ’ திரைப்படம், 1987-ம் ஆண்டு கலிபோர்னியாவைக் கதைக்களமாக கொண்டது. ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படங்களில் வரும் மஞ்சள் கார் (பம்பிள் பீ), இதன் ஹீரோ. ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படங்களில், செவ்ரலெட் காரிலிருந்து பம்பள் பீ உருமாறும். இந்தப் படத்திலோ, குட்டியாகவும் க்யூட்டாகவும் இருக்கும் பீட்டில் காரிலிருந்து உருமாறுகிறது.

சார்லி வாட்சன் என்னும் சிறுமி, வழக்கம்போல் கார் என நினைத்து பம்பிள் பீயை வாங்குகிறாள். வேற்று கிரகத்திலிருந்து மற்ற டிரான்ஸ்ஃபார்மர்ஸ் வருகிறார்கள். பூமியிலிருக்கும் மற்ற டிரான்ஸ்ஃபார்மர்கள் பம்பிள் பீ-க்கு உதவ முன்வருகிறார்கள். இதற்கிடையே, டிரான்ஸ்ஃபார்மர்களை ஒடுக்க நினைக்கிறது செக்டர் 7 என்னும் அரசு குழு. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

முழுக்க முழுக்க வேறு நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தில், WWE புகழ் ஜான் சீனா செக்டர் 7 அரசு அதிகாரியாக நடிக்கிறார்.  படத்தின் டிரெய்லர் மெகா ஹிட் அடித்திருக்கிறது. இந்த இரும்பு அரசனைப் பார்க்க, ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். படத்தின் இன்னொரு சர்ப்ரைஸ், ஆட்டோபோட்களின் அரசன் ஆப்டிமஸ் ப்ரைமும் இதில் இருக்கிறது.

'வாவ்’ மூவி கொண்டாட்டம்

ரு ஸ்பைடர்மேன் வந்தாலே நமக்கெல்லாம் தீபாவளியாக  இருக்கும். ஆறு ஸ்பைடர் மேன்கள் ஒரே படத்தில் வந்தால்..?

இந்தப் படத்தில் பீட்டர் பார்க்கர் ஸ்பைடர்மேனாக வந்தாலும், அவர் ஹீரோ கிடையாது. மைல்ஸ் மோரல்ஸ் எனும் சிறுவன்தான் ஹீரோ. அவனும் ஒரு ஸ்பைடர்மேன். அவனுக்கு உதவி செய்து, வித்தைகளைக் கற்றுக்கொடுத்து முழு ஸ்பைடர்மேனாக மாற்றுகிறார், பீட்டர் பார்க்கர்.

நாம் இருக்கும் உலகம் போலவே நிறைய உலகங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் உலகத்துக்கும் ஒவ்வொரு ஸ்பைடர்மேன் வேண்டும்தானே? இவர்கள் எல்லாரும் சேர்ந்து வில்லனிடமிருந்து உலகைக் காப்பாற்றுவதுதான் கதை.

அந்த வில்லன் அவ்வளவு பெரிய ஆளா? அப்படியென்ன செய்கிறான்?

மற்ற உலகுக்குச் செல்லும் வழிகளை எல்லாம் திறந்துவிட்டுக் குழப்பம் ஏற்படுத்துகிறான். அதைத் தடுக்கவே ஆறு ஸ்பைடர்மேன்களும் டீமாக இணைகிறார்கள். பீட்டர் பார்க்கர், சிறுவன் மைல்ஸ் மோரல்ஸ், ஸ்பைடர்வுமன், பன்றி வடிவ ஸ்பைடர்மேன், பென்னி பார்க்கர் எனும் ஜப்பான் ஸ்பைடர்வுமன், வாழ்வில் இருண்ட பக்கங்களையே சந்தித்த ஸ்பைடர்-நோயர் என ஆக்‌ஷனும் காமெடியுமா கலக்குகிறது.

3D- கார்ட்டூன் டைப் அனிமேஷன் படமாக புது அனுபவத்தை அளிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism