சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

இயக்குநர் முத்துக்குமரன் ‘தர்மபிரபு’ படத்தில் எமன் கேரக்டருக்கு யோகி பாபு என்று கேள்விப்பட்டோமே?

“ஆமாம், நானும் யோகி பாபுவும் 12 வருஷங்களுக்கு முன்னாடி ஒரே ரூம்லதான் தங்கியிருந்தோம். அப்பவே இந்தக் கதை பத்திப் பேசியிருக்கோம். அந்த கேரக்டருக்கு இவரைத் தவிர யாரும் பொருத்தமாக இருப்பாங்கன்னு எனக்குத் தோணலை. சொர்க்கம், நரகம்னு தனித்தனியே செட் போட்டிருக்கோம். பூலோகக் காட்சிகளை, பொள்ளாச்சியில எடுக்கப்போறோம். அப்பா எமனா ராதாரவி சாரும், பையன் எமனா யோகி பாபுவும் நடிக்கிறாங்க.”

மிஸ்டர் மியாவ்

‘மாரி 2’, ‘வெல்வெட் நகரம்’, ‘நீயா 2’ எனப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ள நடிகை வரலட்சுமி, இப்போது நடிகர் கிருஷ்ணாவுடன் வெப் சீரிஸிலும் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிறது இது.

மிஸ்டர் மியாவ்

யக்குநர் கெளதம் கிருஷ்ணா இயக்கத்தில் தன்ஷிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘யோகிடா’. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி இஸ்ரத் காத்ரி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்கிறார். ரித்விகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

போட்டோ ஷாப்

அபிராமி  

மிஸ்டர் மியாவ்

“இது எங்க வீட்டு நாய்குட்டி. என் மனசுக்குக் கஷ்டமா இருந்தால், இவளைத் தூக்கிக் கொஞ்சுவேன். எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறதுனால, இவளுக்கு ‘ஜாய்’னு பேர் வெச்சிருக்கேன். இந்த போட்டோதான் என் ஆல் டைம் ஃபேவரைட்.”

சைலன்ஸ்

தெலுங்கில் உச்ச நடிகர் இன்னும் இளமையான தோற்றத்திலேயே நடிப்பதால், அவர் எந்த சிறு வயது நடிகையுடன் நடித்தாலும் சரியாக இல்லை என்ற ‘டாக்’ இருந்தது. அதனால், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘சீதா’ நடிகை இருந்தால் சரியாக இருக்கும் என்று அந்த நடிகையிடம் பேசி வருகிறார்களாம்.

‘சதுரங்க’ இயக்குநர் இயக்கும் அடுத்த படத்தில் தலையாய நடிகரையும், தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகையையும் நடிக்க வைக்கத் திட்டம் இருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

யாஷிகா ஆனந்த்

‘மோ’ பட இயக்குநர் புவன் நல்லான் இயக்கத்தில் காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகும் புதிய படத்தின் பெயர் ‘ஜாம்பி’. இதில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடிக்கின்றனர். 

தெலுங்கில் உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பு ஜியார்ஜியா, ஹைதராபாத் ஆகிய இடங்களைத் தொடர்ந்து, மைசூரில் நடக்கவுள்ளது. மைசூர் அரண்மனையில் முக்கியக் காட்சி ஒன்றை பிரமாண்டமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனராம்.