Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• ‘கீதா கோவிந்தம்’ படத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்துவருகிறது. ‘இன்கேம் காவாலே’ பாடலுக்குப் பிறகு, இந்தப் படத்திலும் ஒரு நச் பாடல் இருக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ்

• ஆரவ் - ஆஷிமா நார்வால் நடிக்கும் ‘ராஜபீமா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் நடிகை ஓவியா. குத்துப் பாடல் ஒன்றுக்கு ஓவியாவும் ஆரவ்வும் ஆட்டம்போடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

• சதா நடித்த ‘டார்ச் லைட்’ படத்தைத் தொடர்ந்து விமலை இயக்கவிருக்கிறார், இயக்குநர் அப்துல் மஜித். ‘தி புரோக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், விமலுக்கு ஜோடியாக டயானா சாம்பிகா நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில், நஸ்ரியாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

மிஸ்டர் மியாவ்

• சாய் தரம் தேஜ், நிவேதா பெத்துராஜ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் ‘சித்ரலஹாரி’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் தனக்கு தெலுங்கில் நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

• ‘96’ படத்தின் கன்னட ரீமேக்கில், பாவனா ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். படத்துக்குப் பெயர் ‘99’.

மிஸ்டர் மியாவ்

போட்டோ ஷாப்

நடிகை ரவீணா ரவி:
“எங்க அப்பா எடுத்த இந்த போட்டோ என்னோட ஆல் டைம் ஃபேவரைட். ஏன்னா, இந்த போட்டோவுல என் முகத்துலயும் என் அம்மா முகத்துலயும் அவ்வளவு சந்தோஷம் இருக்கும். அது மட்டுமல்லாமல், எங்க முகத்துல இருக்கிற இன்னோசென்ஸ் சோ ஸ்வீட்!”

மிஸ்டர் மியாவ்

கேள்வி கார்னர்

இயக்குநர் ஜமீல்

ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ படத்தை இயக்குவது எப்படி இருக்கிறது?


“ ‘போகன்’ படம் முடிஞ்ச பிறகு, அவங்ககிட்ட கதை சொன்னேன். அவங்களுக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இது ஹன்சிகா மேடத்தின் 50-வது படம்னு, பட வேலைகள் ஆரம்பிச்ச பிறகுதான் தெரியும். இதுல அவங்களுக்கு ரொம்பத் துணிச்சலான கேரக்டர். சென்னையில முதல் ஷெட்யூல் ஆரம்பிச்சிடுச்சு. இதுக்குப் பிறகு மலேசியாவிலும் துபாயிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம். இதுல இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா, இது ஜிப்ரானுக்கு 25-வது படம்.”

சைலன்ஸ்

• இயக்குநர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடிகை வித்யா பாலன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் இருட்டிலேயே வாழும் நடிகரை நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.

• நம்பர் நடிகைக்குத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம். அதற்கு, தான் நடித்து ஹிட்டான மூன்று வார்த்தை படத்தின் பெயரில் இரண்டாம் வார்த்தையைத் தன் கம்பெனிக்கு பெயராக வைக்க உள்ளாராம்.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism