Published:Updated:

‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

Published:Updated:
‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

“எங்க அப்பா ஆர்மியில இருந்தாரு. எனக்கும் ஆர்மிக்குப் போகணும்னு ஆசை. ஸ்போர்ட்ஸ் கோட்டா கிடைச்சு, பெங்களூர்ல டிரெய்னிங்கூட போனேன். அங்கெல்லாம் அடி வெளுத்துதான் பயிற்சியே கொடுப்பாங்க. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியும். என்ன நினைச்சாரோ ‘இந்தப் பொழப்பு உனக்கு வேண்டாம்பா’ன்னு சொல்லிட்டார். சும்மா சுத்திக்கிட்டு இருந்தப்போ ஒருநாள், நண்பர் ஒருத்தர், ``சின்ன வேலை இருக்கு, ‘லொள்ளு சபா’ செட் வரைக்கும் போயிட்டு வரலாம் வா”ன்னு கூட்டிக்கிட்டுப் போனார். மொட்டை அடிச்சிருந்த சமயம் அது. கெட்அப் வித்தியாசமா இருந்ததாலயோ என்னவோ, என்னைப் பார்த்து ‘நடிக்கிறீங்களா தம்பி?’ன்னு கேட்டார், ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலா. ‘அதெல்லாம் நமக்கு செட் ஆகாது சார்’னு மறுத்தேன். ‘சும்மா ட்ரை பண்ணிப் பாருங்க’ன்னு பர்ஃபார்ம் பண்ண வெச்சார். அன்னைக்கு இப்படி ‘லொள்ளு சபா’வுல என்ட்ரி ஆன நான்தான், இன்னைக்குத் தல - தளபதியோடு சேர்ந்து லொள்ளு பண்ணிக்கிட்டிருக்கேன்’’ - கலகலப்பான ரீவைண்ட் கொடுக்கிறார், யோகி பாபு. 

‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

“ ஹீரோவா புரமோட் ஆகிட்டீங்க... வாழ்த்துகள்!”

“ ‘தர்மபிரபு’  படத்துக்கு நான் ஹீரோ இல்லை. ‘வத்திக்குச்சி’, ‘காலா’ படங்கள்ல நடிச்ச திலீபன்தான் ஹீரோ. என்னை மெயினா வெச்சு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தது, படத்தோட புரமோஷனுக்காகத்தான். அதேசமயம், அந்த போஸ்டரைப் பார்த்து நான்தான் படத்துல ஹீரோன்னு நினைச்சு, பல ஹீரோக்கள் எனக்கு போன் பண்ணிப் பாராட்டுனாங்க. சந்தோஷமா இருந்தது. ‘கன்னிராசி’ பட இயக்குநர் முத்துக்குமரன் சாரோட அடுத்த படம் இது.  முதல் முறையா இந்தப் படத்துக்காக நான் வசனம் எழுதியிருக்கேன். கார்த்தி, கவுண்டமணி, செந்தில் சார் சேர்ந்து கலக்கின ‘லக்கிமேன்’ படத்தோட கதை மாதிரிதான், இந்தப் படத்தோட கதையும் ஜாலியா இருக்கும். எமதர்மராஜா கேரக்டர்ல நான் நடிக்கிறேன். சித்திர குப்தர் கேரக்டர்ல ரமேஷ் திலக் நடிக்கிறார்.”
 
“ ‘கூர்கா’ பட போஸ்டரிலும் நீங்கதானே மெயினா இருக்கீங்க...?”

“அதிலும் நான் ஹீரோ கிடையாது. ஒண்ணு சொல்லிக்கிறேன், எனக்கு ஹீரோவா நடிக்கணும்னு ஆசையே இல்லை, இனியும் வராது. ‘கூர்கா’ படத்துல ஒரு ஆங்கிலோ-இந்தியன் லேடியும், ஒரு நாயும்தான் முக்கியமான கேரக்டர். நான் நேபாள்ல இருந்து வந்த, கூர்காவா நடிக்கிறேன். ‘கோலமாவு கோகிலா’ படத்துல வர்றமாதிரி படம் முழுக்க வர பக்கா காமெடி கேரக்டர்.”

“ஹீரோவா நடிக்க பயமா, இல்ல வேற ஏதாவது காரணம் இருக்கா?”

 
“எனக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியும். நான் என்ன பண்ணுனா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னும் புரியும். இயக்குநர்களும், ‘நீ இப்படிப் பண்ணுனா நல்லா இருக்கும்’னு சொல்றாங்க. அதை மீறி, ‘நான் ஒண்ணு பண்றேன், அது ஓகேவா பாருங்க’ன்னு அவங்ககிட்ட சொன்னா, அது தப்பு. என் சாப்பாட்டுல நானே மண் அள்ளிப் போட்டுக்கிற மாதிரி ஆகிடும். ஹீரோவா நடிக்கச் சொல்லி, ரெண்டு மூணு கதைகள் என்கிட்ட வந்தது. அதுல ஒரு கதை நல்லாவும் இருந்துச்சு. அந்த இயக்குநர்கிட்ட, ‘நான் ஹீரோவா தெரியாத மாதிரி கதையைக் கொஞ்சம் மாத்துங்க’ன்னு சொல்லியிருக்கேன். அந்தப் படத்தோட அறிவிப்பு சீக்கிரமே வரும். ஏன் சொல்றேன்னா... எனக்குக் காமெடி நடிகர் என்ற அடையாளம் போதும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

“ `வந்தா ராஜாவா வருவேன்’ல சிம்புவோட நடிச்ச அனுபவங்கள் எப்படி இருந்தது?”

“சிம்பு செம ஜாலியான ஆள். அன்பா இருப்பார். அறிவா பேசுவார், எதுவா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா சொல்லிடுவார். அவரோட திறமை வேற லெவல்ல இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப கேஷுவலா பேசினார். எங்கேயும் தான் பெரிய ஸ்டார்னு ஆணவமா நடந்துகிட்டதே இல்லை. ‘அண்ணே வாங்கண்ணே... உட்காருங்கண்ணே... சாப்பிடுங்கண்ணே’ன்னு பார்த்துப் பார்த்து கவனிச்சிப்பார். அவர்தான் என்னை அண்ணன்னு சொல்றாரே தவிர, நான் அவரை என் நல்ல நண்பனா பார்க்கிறேன்.”

“விஜய், அஜித்... ரெண்டுபேர்கிட்டேயும் உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன?”

“இவங்க ரெண்டுபேருமே எனக்கு ஒண்ணுதான். பிரிச்சுப்பார்க்கப் பிடிக்கலை. ரெண்டுபேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன ஆர்ட்டிஸ்ட். ஆனா, ரெண்டுபேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வெச்சு அழகு பார்த்தாங்க. அது எனக்கு பெரிய ஆச்சர்யம். விஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்ச்சு ஏதாச்சும் வசனம் பேசுனா, அதை மனசார ஏத்துக்கிட்டு சிரிக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்ச்சு ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே... பேசட்டுமா?’ன்னு தயங்கிக்கேட்டேன். அதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க... இது உங்க வேலை. பேசுங்க’ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்குத் தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு. இவங்க ரெண்டுபேரும் அவங்க படத்துல எனக்கும் ஸ்பேஸ் கொடுத்திருக்காங்க. எல்லா ஹீரோக்களும் இப்படி இருப்பாங்களான்னு தெரியலை.”

“காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குறது யோகி பாபுதான்னு பேசிக்கிறாங்களே...?”


“ஆமாமா...  நானும் அந்த  வதந்திகளையெல்லாம் படிச்சேன். 3 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குறேன்னு எல்லாம் பேசிக்கிட்டிருக்காங்க. இதையெல்லாம் நம்பிடாதீங்க மக்களே...”  

‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்!’

“கவுண்டமணியோட நக்கல் நையாண்டி சாயல் உங்க காமெடியிலும் இருக்கே?”

“நான் நடிச்ச ‘மான் கராத்தே’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘பரியேறும் பெருமாள்’ படங்களையெல்லாம் எடுத்துப் பாருங்க. எங்கேயும் அவர் சாயல் இருக்காது. எனக்கு ரொம்பப் பிடிச்ச காமெடி நடிகர் கவுண்டமணி சார். நானும் அவரும் வாரத்துல ஒரு முறையாவது போனில் பேசுவோம். ‘சார், இந்தப் படத்துல உங்களுடைய பன்ச் வெச்சுத்தான் பேசி முடிச்சேன்’னு சொல்வேன். அவரும் சிரிச்சுக்கிட்டே, ‘அப்படியா ராஜா’னு கேட்டுக்குவார். ஹீரோவா நடிக்கிற பலரும்
எம்.ஜி.ஆர்., ரஜினி சார் மாதிரி ஆகணும்னு நினைச்சுத்தானே வர்றாங்க. அதுமாதிரிதான் இதுவும். காமெடி நடிகர்களுக்குக் கவுண்டமணி சார்தானே ஸ்டார்.”

“ ‘லொள்ளு சபா’ டு ‘சர்கார்’ பயணம்?”


“நல்ல உள்ளம் கொண்ட இயக்குநர்களும், நல்ல நண்பர்களும்தான் என் வளர்ச்சிக்குக் காரணம். பத்து வருடமா சினிமாவுல சுந்தர்.சி சார் எனக்கு நல்ல நண்பர். அவரை என் குருநாதர்னுகூட சொல்வேன். நடிக்க வைக்கிறதோட, பர்சனலாவும் நிறைய விஷயங்களைச் சொல்வார். அவர் சொல்றதை நான் ஃபாலோ பண்ணுவேன். அடுத்து, ராம்பாலா சார். சினிமாவுல நான் இயக்குநர் ஆகணும்னுதான் நினைச்சேன். ராம்பாலா சார்தான் என்னைத் திட்டி திட்டி, நடிகர் ஆக்கினார். அவர் இப்படித் துரத்தலைனா, நான் நடிகர் ஆகியிருக்கமாட்டேன்.” 

``உங்களுக்குப் பொண்ணு பார்க்கிறாங்களாமே... லவ்மேரேஜ்னு சொல்றாங்களே?”

“இதுவும் வதந்திதாங்க! நான் எதையும் எதிர்பார்த்துப் போற ஆள் கிடையாது. நமக்கு எது அமையுதோ, அதை முழு மனசோட ஏத்துக்குவேன். வீட்டுல மட்டுமில்ல, சினிமா நண்பர்களும் எனக்குத் தீவிரமா பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரமா எனக்குக் கல்யாணம் ஆகணும்னு ரொம்பவே ஆசைப்படுற நபர், அஜித் சார். ‘எப்போ டும் டும்?’னு கேட்டுக்கிட்டே இருப்பார். இந்தப் பேட்டி மூலமா சொல்றேன்... வரதட்சணை வேணாம்; சாதி மதம் தேவையில்லை. நல்ல பொண்ணு கிடைச்சா, உடனே கல்யாணம்தான்!”

கேட்டுக்கோங்க கேர்ள்ஸ்!

சனா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism