Published:Updated:

`என்னை உசுப்பேற்றி நடிக்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ்!' - ரஜினி நெகிழ்ச்சி

`என்னை உசுப்பேற்றி நடிக்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ்!' - ரஜினி நெகிழ்ச்சி
`என்னை உசுப்பேற்றி நடிக்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ்!' - ரஜினி நெகிழ்ச்சி

`பேட்ட' திரைப்படம் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர். 

மிகப்பெரிய இரண்டு மாஸ் ஹூரோக்களின் படங்கள் வெளியாகியுள்ளதால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் `பேட்ட' திரைப்படம் ஒருபுறமும் இயக்குநர் சிவா இயக்கி அஜித் நடித்த விஸ்வாசம் படம் ஒருபுறமும் வெளியாகி இருக்கின்றன. ஆடல், பாடல், பேனர்களுக்கு பாலபிஷேகம் என்பதைத்தாண்டி, ஒருபடி மேலே சென்று திரையரங்கில் தம்பதிக்கு ரசிகர்கள் திருமணம் செய்துவைத்துள்ளனர். அஜித்- ரஜினி திரைப்படம் ஒன்று சேர்ந்தால்போல வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது. இதை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே `பேட்ட' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த சில தினங்களில் அமெரிக்கா சென்றார் நடிகர் ரஜினி. சில நாள்கள் அங்கு தங்கிருந்தவர் இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய ரஜினி, போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள். படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த பெருமையெல்லாம் கார்த்திக் சுப்புராஜ், சன்பிக்சர்ஸூக்கே சேரும். பேட்ட படம் பிடித்திருந்தால் மகிழ்ச்சி. மக்களை சந்தோஷப்படுத்துவதுதான் நம் வேலை. மற்றபடி எல்லா புகழும் கார்த்திக் சுப்புராஜூக்குதான். ஒவ்வொரு ஷாட்டும் சீனும், உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ண வைத்துவிட்டார்’’ என்றார். அதைத் தொடர்ந்து திரையில் நாயகனாக வலம் வரும் ரஜினி எப்போது தலைவனாக வருவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, `அதைப் பிறகு பார்க்கலாம்' என்றார்.