Published:Updated:

“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”

“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”
பிரீமியம் ஸ்டோரி
“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”

“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”

“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”

“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”

Published:Updated:
“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”
பிரீமியம் ஸ்டோரி
“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”

``இதுவரை பார்த்த ஹன்சிகாவை இனி பார்க்க முடியாது. ஒரு சாதாரண கமர்ஷியல் ஹீரோயினா நடிச்சிட்டிருந்த என்னை இனி கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிற படங்கள்ல நிறைய பார்ப்பீங்க” அழுத்தமாகப் பேசுகிறார் ஹன்சிகா. `துப்பாக்கி முனை’ படத்தைத்தொடர்ந்து, `மஹா’வில் சோலோவாகக் கலக்கவிருக்கிறார்.  

“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”

“ ‘துப்பாக்கி முனை’ படத்துல வித்தியாசமான கேரக்டர் பண்ணியிருந்தீங்களே... எப்படி இருக்கு ரியாக்ஷன்ஸ்?”

“நிறைய பாராட்டுகள் வந்துகிட்டிருக்கு. பிரதமர் அலுவலகத்துல வேலை பார்க்கிற பெண் பாத்திரம்னு சொன்னதும், அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏதாவது இருக்குமோன்னு பயந்தேன். ஆனா, அந்த மாதிரி எதுவும் இல்லை. இந்தப் படத்துல தாணு சார் மூலமாகத்தான் கமிட்டானேன். ‘இயக்குநர் செல்வராஜ் சாரோட மகன் பண்ற படம்’ நீங்க யோசிக்காம கமிட்டாகலாம்னு அவர் சொன்னார். படம் பார்த்த பின்னர் மணிரத்னம் சார், பாலாஜி சக்திவேல் சார் எங்களோட டீமைப் பாராட்டினாங்க. இந்த மாதிரியான த்ரில்லர் கதையில இதுவரை நான் நடிச்சதில்லை. ஒரு கதையை தேர்வு செய்றதுக்கு முன்னாடி அந்தப் படக்குழு எப்படிப்பட்டதுன்னு முதல்ல யோசிப்பேன். அந்த வகையில ‘துப்பாக்கி முனை’ டீம்ல புதுசா சினிமாவுக்கு அறிமுகமாகுறவங்க இருந்தாங்க. ஆனா, அவங்ககூட வேலை பார்க்கும்போதுதான் தெரிய வந்துச்சு, அவங்க சினிமாவுக்குப் புதுசா இருந்தாலும் அனுபவத்துல கைதேர்ந்தவங்க. இயக்குநர் தினேஷ், இசையமைப்பாளர் முத்து கணேஷன்னு இந்தக் குழுதான் தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை திறமைசாலிகள்!”
 
“முதல் முறையா விக்ரம் பிரபுவோட சேர்ந்து நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?”


“விக்ரம் பிரபுவை ரொம்ப நாளா எனக்குத் தெரியும். பிரபு சாரோட ‘புலி’ படத்துல நடிக்கும்போது எனக்கு விக்ரம் பிரபு சார் பழக்கமானார். பிரபு சார் மாதிரியே விக்ரம் பிரபு அடிக்கடி மிமிக்ரி பண்ணி நடிச்சுக் காட்டுவார். இப்போ என்னோட நல்ல நண்பர். எனக்கு ஏதாவது உதவி அல்லது சந்தேகம்னா இப்பல்லாம் நான் முதல்ல தேடுறது விக்ரம் பிரபுவைத்தான். அவர் எனக்கு மட்டுமில்ல உதவின்னு யார் போய் நின்னாலும் செய்யக் கூடியவர்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”

“ `மஹா’வில் என்ன சொல்லப்போறீங்க...”

“ `துப்பாக்கி முனை’க்கு அப்புறம் என்னோட கதைத் தேர்வுகள் வித்தியாசமானதா இருக்கும். என்னால தனியா ஒரு படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும்னு இப்போ இருக்குற இயக்குநர்கள் நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. அதற்கான முதல் படிதான் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுற படம் மஹா.”

“ `இப்போ ரொம்ப மெச்சூராயிட்டேன்னு’ சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புல சொல்லியிருந்தீங்களே...”

“அடிப்படையில் புத்தர் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன். அமைதி, அன்பு, காதல் மட்டுமே உலகத்துல இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். நிறைய டிராவல் பண்ண ஆரம்பிச்சிட்டேன். வாழ்க்கைப் பாடங்களை அதுதான் அதிகமா கத்துக்கொடுக்குது. புதுசா இப்போ மும்பையில் முதியோர் இல்லம் கட்டுறதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட விஷயங்கள் என்னை நிறையவே நல்லவிதமா மாத்தியிருக்கு... என்னுடைய சிந்தனைகள் மாறியிருக்கு.”
 
“தமிழ்ப்படங்கள்ல நடிக்கிறதை குறைச்சிட்டீங்களே?”

“இப்போ ஹன்சிகாவை ஒரு நல்ல நிலைமையில பார்க்கறீங்கன்னா அதுக்கு தமிழ் சினிமாதான் காரணம். தமிழ் சினிமா எப்போதுமே புதுசா வர்றவங்களை வரவேற்கும். வாய்ப்புகளை அள்ளித் தரும். குறைவான படங்கள்ல நடிக்கிறதுக்குக் காரணம், நடுவுல நான் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டதுதான். மற்ற மொழிகள்ல நடிக்கிறதைவிட தமிழ்ல அதிகம் நடிக்க விரும்புகிறவள் நான். ‘தமிழ் நடிகை’ன்னு சொல்லிக்கிறதுல அவ்வளவு பெருமைப்படுறேன்.”

சுஜிதா சென்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism