Published:Updated:

மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse
பிரீமியம் ஸ்டோரி
மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

Published:Updated:
மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse
பிரீமியம் ஸ்டோரி
மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

மார்வெல் காமிக்ஸின் பிதாமகன் ஸ்டேன்லீயின் மறைவுக்குப் பிறகு வெளியாகும் மார்வெல் காமிக்ஸ் படம். நவீன அனிமேஷன் டெக்னாலஜிகள் கலக்காத அக்மார்க் ஓல்டுஸ்டைல் கம்ப்யூட்டர் அனிமேஷன் 3D படம். இதில் Performance Capturing டெக்னாலஜிகூடக் கிடையாது. வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து டப்பிங் மட்டுமே செய்திருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், கதையை மட்டுமே நம்பி தைரியமாகக் களமிறங்கியிருக்கிறது சோனி. 

மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

ப்ரூக்ளினைச் சேர்ந்த மைல்ஸ் மோரல்ஸ் எனும் சிறுவனை வழக்கம்போல ஒரு சிலந்தி கடித்துவிட, அவனும் ஸ்பைடர்மேன் ஆகிறான்.   அவனும் சீனியர் ஸ்பைடர்மேனான பீட்டர் பார்க்கரும் டீம் சேர நினைக்கிறார்கள். அதற்குள் வில்லன் கிங்க்பின் சீனியர் ஸ்பைடர்மேனைக் கொன்றுவிட, தனியாகத் தவிக்கிறான் மைல்ஸ்.  அப்போது பூமியைப் போன்ற வெவ்வேறு உலகங்களில் (Parallel universe) இருந்து இங்கு வந்து இறங்குகிறார்கள் ஐந்து ஸ்பைடர்மேன்கள்.

பீட்டர் B.பார்க்கர், ஸ்பைடர்வுமன், பன்றி வடிவ ஸ்பைடர்ஹேம், ஜப்பான் ஹீரோ பென்னி பார்க்கர், பிளாக் அண்டு வொயிட் ஸ்பைடர்மேனான ‘ஸ்பைடர்-நோயர்’ (Spider-Noir), மைல்ஸ் மோரல்ஸ் இவர்கள் அனைவரும் சேர்ந்து, நகரத்தை அழிக்க நினைக்கும் வில்லனை எப்படித் தடுக்கிறார்கள் என்பதுதான் கதை. ஆறு கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை.

கார்ட்டூன் படம்தானே என அலட்சியமாகச் சென்றால் “ `ஸ்பைடர்மேன்’ படங்களில் இதுதான் சிறந்த படமோ?” என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு விருந்து வைத்து அனுப்புகிறார்கள். காமிக்ஸை தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தும் மேக்கிங், குறும்பான வார்த்தை விளையாட்டு வசனங்கள், நொடிக்கு நொடி மார்வெலுக்கே உரித்தான காமெடி கலாட்டாவென இரண்டு மணி நேரம் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவிடுகிறார்கள். இடையிடையே, சில சூப்பர்ஹீரோக்களைக் கலாய்ப்பது, வார்னர்பிரதர்ஸின் ட்ரேடுமார்க் ‘That’s all folks!’ வசனத்தைச் சொல்லி “இதுக்கும் கேஸ் போடுவாங்களோ?” என அவர்களையும் வம்புக்கு இழுப்பது, புகழ்பெற்ற ஸ்பைடர்மேன் வில்லன்களைக் கதையோட்டத்தில் சேர்த்துக்கொள்வது என அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். முக்கியமாக ஸ்டேன்லீக்கு இறுதியில் வைத்திருக்கும் அந்த டிரிப்யூட் கார்டு! அவர் வரும் கேமியோ காட்சிக்கு விசில் சத்தம் தூள் கிளப்புகிறது. ஸ்டேன்லீ என்றைக்குமே சூப்பர்ஸ்டார்தான். படம் கோல்டன்குளோப் விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. விடுமுறை சீஸனில் குழந்தைகளுடன் சென்று 3D-யில் நிச்சயம் ரசிக்க வேண்டிய படம் இந்த ‘ஸ்பைடர்மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட்ச்சு தூக்கும் அக்வாமேன்... Aquaman

மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

நிலத்தின் சாமான்யனுக்கும், நீரின் அரசி அட்லானாவுக்கும் பிறக்கிறான் ஆர்தர் கர்ரி (எ) அக்வாமேன். துறுதுறு இளைஞனாக வளர்ந்து நிற்கும் அவனை நம்பி ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அட்லாண்டிஸை ஆளும் கொடுங்கோல் அரசன் ஆர்மிடமிருந்து அந்நாட்டை மீட்பதே அந்த அசைன்மென்ட். இதன்பின், வழக்கமாக ஒரு சூப்பர்ஹீரோ படத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அதெல்லாம் அக்வாமேனிலும் நடக்க, சுபம்.
 
`கேம் ஆஃப் த்ரோன்ஸி’ல் கல் த்ரோகோவாக நடித்த ஜேஸன் மொமொதான் அக்வாமேன். முதன்முறையாக மெயின் ரோல். தன் நெடுநெடு உயரத்துக்கும், ஆஜானுபாகுவான உடலுக்கும் உண்மையிலேயே அக்வாமேன் என்கிற பெயரில் ஓர் அரசன் இப்படித்தான் இருப்பார் என நம்பவைக்கிறார்... மரண மாஸ். பிளாக் மேன்டா, ஆர்ம் என இரு வில்லன்கள். இருவரையும் `அட்ச்சு தூக்கியிருக்கிறார்’ அக்வாமேன். இரண்டாம் பாகத்துக்கு லீடு கொடுக்கும் இறுதிக்காட்சிகள் மட்டுமே மைனஸ். 

DC காமிக்ஸில் இருக்கும் கதையை அப்படியே  திரைப்படமாக்கியிருக்கிறார் (காஞ்சூரிங், சா பட சீரிஸ் புகழ்) இயக்குநர் ஜேம்ஸ் வான். ஆழ்கடல் அதிசயங்கள், வித்தியாசமான உயிரினங்கள் எனக் கடலுக்கு அடியில் நிகழும்  ஒவ்வொரு  ஃப்ரேமையும் அழகாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டான் பர்கெஸ். வொண்டர்வுமன், தி லெஜெண்டு ஆஃப் டார்ஜான் படங்களுக்கு இசையமைத்த ரூபர்ட் வில்லியம்ஸனின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்.

நிலப்பரப்பில் சிறிது நேரம், ஆழ்கடல் ஆழத்தில் அதிக  நேரம் என விரிகிறது கதை. 3டி, ஐமேக்ஸில் பார்ப்பதற்காகவே படைக்கப்பட்ட காட்சிகள், சாகசங்கள் என, படம் கலர்ஃபுல்லாக இருந்தாலும், சுமாரான வசனங்களும் காட்சியமைப்புகளும் ஒருகட்டத்துக்கு மேல் சுவாரஸ்யத்தை இழக்க வைக்கின்றன. அதிலும் காமெடிக் காட்சிகள் எல்லாம்... ப்ச்! ஹியூமர் தங்கள் ஏரியா இல்லை என DC உணர்தல் நலம்.

நோலனின் டார்க் நைட் சீரிஸுக்குப் பிறகு, DC-க்கு நடந்த ஒரே நல்ல விஷயம் கல் கடோட் நடிப்பில் வெளியான வொண்டர் வுமன்தான். அந்த அளவுக்கு  இல்லையென்றாலும் DC-யின் மானத்தை அக்வாமேன் தூக்குதுரையாகத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

கார்த்தி, ர.சீனிவாசன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism