Published:Updated:

வீரமான... விவேகமான... நயன்தாரா...

வீரமான... விவேகமான... நயன்தாரா...
பிரீமியம் ஸ்டோரி
வீரமான... விவேகமான... நயன்தாரா...

வீரமான... விவேகமான... நயன்தாரா...

வீரமான... விவேகமான... நயன்தாரா...

வீரமான... விவேகமான... நயன்தாரா...

Published:Updated:
வீரமான... விவேகமான... நயன்தாரா...
பிரீமியம் ஸ்டோரி
வீரமான... விவேகமான... நயன்தாரா...

மலுடன்  `உன்னைப்போல் ஒருவன்’, அஜித்துடன் `பில்லா -2’ என அடுத்தடுத்து படங்கள் இயக்கியவர் சக்ரி டோலட்டி. நடுவில் சில ஆண்டுகள் பாலிவுட் சென்றவர், இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

நயன்தாராவோடு `கொலையுதிர் காலம்’ எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை சந்தித்தேன். 

வீரமான... விவேகமான... நயன்தாரா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழில் `பில்லா -2’ இயக்கி  ஆறு ஆண்டுகள் ஆகின்றன... ஏன் இவ்வளவு பெரிய கேப்?

தமிழ்சினிமாவில் நிறைய படங்களை இயக்கிய இயக்குநர்கள் பட்டியலில் என்  பெயரும் இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கில்லை. எனக்குப் பிடித்த ஆர்ட்டிஸ்டுகள், நல்ல டெக்னீஷியன்களோடு வேலை பார்ப்பது மட்டுமே எனக்குப் பிடிக்கும். ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக, தெளிவில்லாத சிலரோடு ஒப்பந்தம் போட்டு மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். 

‘கொலையுதிர் காலம்’ எப்படிப்பட்ட படம்?

ஒருநாள் இரவில் நடக்கும் த்ரில்லர்தான் ‘கொலையுதிர் காலம்.’ லண்டனில் ஓர் இரவில் மொழி தெரியாமல் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்ணுக்கு நடக்கும் அதிரவைக்கும் சம்ப வங்கள்தான் ‘கொலையுதிர் காலம்.’ இந்தப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தோடு இருக்கும். மிஷன் இம்பாஸிபிள், டார்க்நைட் ரைஸஸ் மாதிரி பெரிய ஹாலிவுட் படங்களில்  வேலை செய்த `கோரி கெர்யாக்’ என்கிற ஒளிப்பதிவாளரை இந்தப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்.   முழுப்படத்தையும் லண்டனி லேயே 30 நாள்கள் படமாக்கி னோம். எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான ச்சில்லிங் த்ரில்லராக இந்தப்படம் நிச்சயம் இருக்கும். 

வீரமான... விவேகமான... நயன்தாரா...

நயன்தாராவுக்கு என்ன மாதிரியான கேரக்டர்?

வீரமாகவும் விவேகமாகவும் எதிரிகளோடு போராடுகிற பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிற  கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். நயன்தாராவுக்கு நிறைய மாஸ் காட்சிகள் வைத்திருக்கிறோம்.

இதே படத்தை இந்தியிலும் இயக்குகிறீர்கள். தமிழில் நயன்தாரா, இந்தியில் தமன்னா ஏன்?

இந்தப் படத்தின் கதைக்களம்தான் காரணம். தமிழில் திரைக்கதை, வசனம் வேறு, இந்தியில் அந்த மக்களுக்கு ஏற்றமாதிரி உருவாக்கியிருக்கிறேன். இரண்டு படங்களும் வெளியாகும்போதுதான் ஏன் இப்படி என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இந்தியில் தமன்னாவுடன் பிரபுதேவாவும் நடித்திருக்கிறார். 

வீரமான... விவேகமான... நயன்தாரா...

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உங்களுக்கு எப்படிப் பழக்கமானார்?

‘பில்லா -2’ படத்திலிருந்தே எனக்கும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் நட்பு இருந்துவருகிறது. பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னானி ஒரு  பட விஷயம் சம்பந்தமாக என்னிடம் பேசுவதற்காக அமெரிக்காவுக்கு வந்தார். அப்போது இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது  ‘கொலையுதிர் காலம்’  பட  புராஜெக்ட்  உருவானது. வாசுவும் யுவனும் ஏற்கெனவே பழக்கமானவர்கள் என்பதால், யுவனே படத்தைத் தயாரிக்க முடிவுசெய்தார். 

வீரமான... விவேகமான... நயன்தாரா...

கமல், அஜித்...?

என்னை ஏழுவயசிலேயே நடிகனாக்கி அழகுபார்த்தவர் கமல்சார். அவரே என்னை இயக்குநராகவும் உருவாக்கினார். சினிமா உலகில் உள்ள எல்லா விஷயங்களிலும் எனக்கு குருவாக இருப்பவர் கமல்சார் ஒருவரே. பொதுவாக சினிமாவில் முதல்படத்தை, புதுமுகங்களை வைத்து இயக்கும்போதே பதற்றம் பயங்கரமாகத் தொற்றிக்கொள்ளும். எனது முதல்பட ஹீரோவே  கமல்சார் நான் எப்படிப் பதறிப்போயிருப்பேன் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் படப்பிடிப்பில் நான் நெர்வஸ் ஆகாத அளவுக்கு எனக்குக் கமல்சார்தான் உற்சாகம், ஊக்கம் கொடுத்தார். நான் என்ன நினைக்கிறேனோ அதையே படம்பிடிக்கும் சுதந்திரத்தை எனக்கு அளித்தார். முதல்பட இயக்குநருக்கு ஏற்படும் இயல்பான பதற்றங்களைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தமாதிரி `உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கமல்சார் நடித்துக்கொடுத்ததை என்னால் இப்போதும் மறக்க முடியாது. அஜித்சாருக்குத் தொழில்பக்தி அதிகம். ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப ரொம்ப நேசித்து, கவனத்தோடு காதலித்துச் செய்வார். `பில்லா -2’ படத்துக்கான டான் கேரக்டருக்கு எப்படிப்பட்ட பாடிலாங்வேஜைக் கொண்டுவர வேண்டும் என்று நிறைய ஹோம் ஒர்க் செய்து நடித்தார். உலகத்தில் அவர் நேசிக்கும் விஷயங்கள் இரண்டு. ஒன்று சினிமா, இன்னொன்று குடும்பம். மிகவும் டெடிகேட்டட் ஆக்டர். 

வீரமான... விவேகமான... நயன்தாரா...

அஜித் மீண்டும் இயக்க அழைத்தால் என்ன மாதிரி  படமெடுப்பீர்கள்?

அஜித்சார் மறுபடியும் கூப்பிட்டால் என்ன மாதிரி படம் இயக்குவது என்கிற ஐடியா எதுவும் இப்போதைக்கு இல்லை. பொதுவாக நான் நடிகர்களுக்காகக் கதை சொல்பவனல்ல. நான் உருவாக்கிய கதைக்கான நடிகர், நடிகைகளைத்தான் செலக்ட் செய்வேன். நான் அமெரிக்காவில் செட்டிலாகி 25 வருஷங்கள் ஆகிவிட்டன. எனது அடுத்தகட்டத் திட்டம் ஹாலிவுட் படத்தை இயக்குவதுதான். சீக்கிரமே இயக்குவேன். 

எம்.குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism