Published:Updated:

என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு! - ஈஸ்வரி ராவ்

என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு! - ஈஸ்வரி ராவ்
பிரீமியம் ஸ்டோரி
என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு! - ஈஸ்வரி ராவ்

அழியாத கோலங்கள்

என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு! - ஈஸ்வரி ராவ்

அழியாத கோலங்கள்

Published:Updated:
என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு! - ஈஸ்வரி ராவ்
பிரீமியம் ஸ்டோரி
என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு! - ஈஸ்வரி ராவ்

“இப்போகூட கனவு மாதிரிதான் இருக்கு. என் சினிமா கரியர் முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சு, ஒரு  குடும்ப நிர்வாகியா என் குழந்தைகளைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனா, இயக்குநர் இரஞ்சித் சார் எனக்கு
ரீ- என்ட்ரி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்; ரஜினி சார் என்னைப் பிரகாசப்படுத்திட்டார். நீ, நான்னு ரஜினி சார்கூட ஜோடியா நடிக்க போட்டியிருக்கிற சூழல்ல, அவருக்கு நான் ஜோடியா நடிக்க சம்மதிச்சது பெரிய விஷயம். என் வாழ்நாள் முழுக்க இவங்க ரெண்டு பேருக் கும் நன்றிகடன்பட்டிருப்பேன்” - நெகிழ்ச்சி யும் மகிழ்ச்சியுமாகத் தொடங்குகிறார், நடிகை ஈஸ்வரி ராவ். ‘காலா’ செல்வியாக அசத்திய வரின் கோலிவுட் கிராஃப் இப்போது இன்னும் வேகமெடுத்துள்ளது.

12 வருட இடைவேளைக்குப் பிறகான கேமரா அனுபவம் எப்படி இருந்தது?

நம்பமுடியாத பயணம். ‘காலா’ படம் தொடர்பா இரஞ்சித் சார் ரெண்டு மாசமா என்கிட்ட பேசிட்டு இருந்தார். மூணாவது மாசம்தான், படத்தில் ரஜினி சாருக்கு ஜோடியா நான் நடிப்பது உறுதியாச்சு. அதை என் குடும்பத்தினரிடம் சொன்னேன். யாரும் முழுசா நம்பலை. முதல்நாள் ஷூட்டிங் போன பிறகுதான் எனக்கே நம்பிக்கை வந்தது.

வாழ்க்கை எனக்கு நிறைய அனுபவங் களைக் கொடுத்திருக்கு. அதனால, 12 வருட இடை வெளிக்குப் பிறகு நடிச்சாலும், இந்தப் படத்துக்குன்னு எந்தத் தயாரிப்பும் தேவைப் படலை. மொத்த டீமும் எனக்கு உதவியா இருந்ததாலதான், நெல்லைத் தமிழ் பேசும் ‘செல்வி’யா உயிர்ப்போடு நடிக்க முடிஞ்சது.

என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு! - ஈஸ்வரி ராவ்

‘காலா’ படத்துக்காகக் கிடைத்த மறக்க முடியாத ஒரு பாராட்டு..?

ரஜினி சாரை ஒருசில நிகழ்ச்சிகள்ல பார்த்திருக்கிறேனே தவிர, அவர்கூட ஒருமுறைகூட பேசியதில்லை. ஆனா, ‘காலா’ படம் முழுக்க அவருடன் பயணிக்கிற கேரக்டர். முதல் நாள் ஷூட்டிங்ல அவரைச் சந்திச்சப்போ, ‘நீங்க பாலு மகேந்திரா சார் பட நடிகைதானே! உங்களுக்கு இந்தப் படம் ரொம்ப சிறப்பா இருக்கும். நல்லா பண்ணுங்க’னு தெலுங்கில் வாழ்த்தினார். டப்பிங் வேலைகள் முடிஞ்சதும், ‘படத்துலேயே ஈஸ்வரி ராவ்தான் பெரிசா ஸ்கோர் பண்ணியிருக்காங்க’ன்னு சொன்னார். தெலுங்கு பிரஸ் மீட்டிலும், ‘உங்க ஊர் பொண்ணு தூள் கிளப்பிட்டாங்க’னு அவர் சொன்னது மறக்க முடியாத பாராட்டு. என் லைஃப்ல ‘காலா’ பெரிய மைல்ஸ்டோன்!

உங்க முதல் சினிமா இன்னிங்ஸை திரும்பிப் பார்க்கிறபோது...

தமிழ்மொழி, டான்ஸ், நடிப்புனு எதுவும் தெரியாம, 17 வயசுல ‘கவிதைபாடும் அலைகள்’ படத்தில் அறிமுகமானேன். வெயிட்டான ரோல்களில் ஹீரோயினா நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். என் நிறமும் மிக ஒல்லியான உடலமைப்பும் அதுக்குப் பெரிய தடையா இருந்துச்சு. நிறப்பாகுப்பாட்டால ரொம்ப வருத்தப்பட்டேன். கவர்ச்சியான வேடங்கள்ல நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஆசைப்பட்டபடி என் சினிமா கரியர் அமையலையேனு ரொம்ப தோணுச்சு. பிறகு சீரியலுக்கு வந்ததுடன், ‘சரவணா’ உள்பட சில படங்கள்ல நடிச்சேன். முதல் இன்னிங்ஸ்ல, 30 படங்களுக்குள்தான் நடிச்சிருப்பேன். இப்படிச் சந்தோஷம் மற்றும் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட நிலையில், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கலை. 

அடுத்து..?

‘காலாவுல சூப்பரா நடிச்சிருக்கீங்க! இத்தனை வருஷமா எங்க போனீங்க?’னு பலரும் கேட்டாங்க. ‘எப்போதும் நான் நடிக்கத் தயார்தான். ஆனா, எனக்குப் பிடிச்ச கதைகள் வரலை. சினிமா உலகம்தான் என்னை மறந்துடுச்சு’னு சொல்வேன். நடந்து முடிஞ்சதைப் பத்தி எப்போதும் ஃபீல் பண்ண மாட்டேன். இப்போ நல்ல ரோல்கள் வருது. பாசிட்டிவ் கேரக்டரோ, நெகட்டிவ் கேரக்டரோ... என் நடிப்பு நல்லா இருக்குன்னு பேசப்படணும். மக்கள்கிட்ட நான் சென்று சேரணும். அப்படியான படங்கள்ல தொடர்ந்து நடிப்பேன். நடிக்க வந்த புதுசுல, ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார் இருவருடனும் ஜோடியா நடிக்க ஆசைப்பட்டேன். ‘விருமாண்டி’ படத்துல கமல் சாருக்கு ஜோடியா நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து, பிறகு நடக்காமல் போயிடுச்சு. இப்போ ரஜினி சார்கூட நடிச்சுட்டேன். கமல் சாருக்கு ஜோடியா நடிக்கும் வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்.

‘அழியாத கோலங்கள்’ படத்தில் நீங்க தயாரிப்பாளர் என்பதுடன், கூடுதல் சர்ப்ரைஸ் ஏதாவது உண்டா?

என் சினிமா கரியரில், வாய்ப்புக் காக யாரையும் அணுகினதில்லை. ஆனா, பாலு மகேந்திரா சார் படைப்புகள் மீது எனக்குப் பெரிய மதிப்பு உண்டு. அதைவிட, ‘டஸ்கி ஸ்கின் நடிகைகளைக்கூட அழகா போட்டோ எடுக்கிறாரே! நம்மையும் போட்டோ எடுக்கச் சொல்வோம்’னு ஆசைப்பட்டு, குடும்ப நண்பர் ஒருவர் உதவியுடன் அவரைச் சந்திச்சுக் கேட்டேன். தன் பட வேலைகளுக்கு நடுவே, அவர் என்னை போட்டோஷூட் பண்ணி முடிக்க, கிட்டத்தட்ட ரெண்டு வருஷங்களாகிடுச்சு. அவர் என்ன நினைச்சாரோ தெரியலை... அவர் இயக்கின ‘ராமன் அப்துல்லா’ படத்தில் என்னை ஹீரோயினாக்கினார். மன நிறைவுடன் அந்தப் படத்தில் நடிச்சேன். அவருக்கு டெடிகேட் பண்ற மாதிரியும், பெண்களை உயர்வா சித்திரிக்கும் வகையிலும் உருவாகிவரும் படம்தான் ‘அழியாத கோலங்கள்’. தயாரிப்புடன், படத்தில் சில சீன்கள்ல நடிச்சிருக்கேன்.”

என் நிறம் பெரிய தடையா இருந்துச்சு! - ஈஸ்வரி ராவ்

‘வர்மா’ எப்படி வந்திருக்கிறது?

ஷூட்டிங், டப்பிங் வேலைகள் முடிஞ்சுடுச்சு. பாலு மகேந்திரா சாரின் அடுத்த வெர்ஷன், இயக்குநர் பாலா சார். படத்தில் என் நடிப்பு எனக்கு நிறைவா இருந்துச்சு. ட்ரெய்லர் பார்த்திருப்பீங்க. அதைவிட நிறைய சர்ப்ரைஸ் படத்தில் இருக்கு. பிரபுதேவாவுடன் ‘தேள்’ படத்திலும் நடிச்சுட்டு இருக்கேன்.

உங்க ப்ளஸ் மற்றும் மைனஸ்...

என் உயரம், சிரிப்பு... ப்ளஸ்! ‘புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மாதிரி உங்க சிரிப்பும் அழகா இருக்கு’னு பலரும் சொல்லுவாங்க.

கே.ஆர்.விஜயா அம்மா வீட்டுக்கு நேரெதிரில்தான் என் வீடும் இருக்கு!

ரொம்ப லோ புரொஃபைல் மெயின்டெயின் பண்ணுவேன். சரியான வாய்ப்பு வரலைன்னாலும் என்னை செல்ஃப் புரமோட் பண்ணிக்க மாட்டேன். இது மைனஸாக இருக்கலாம்.

குழந்தைகள் மற்றும் குடும்பம் பற்றி...

என் உலகமே குடும்பமும், என் குழந்தைகள் நிவேதிதா, ரிஷப் ராஜாவும்தான். என் கணவர் எல்.ராஜா, இயக்குநர் மற்றும் நடிகர் என்பதால், என் நடிப்புப் பயணத்துக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்கார்.

அவள் விகடன் விருதும் ரஜினி சாரின் வாழ்த்தும்!

“ ‘காலா’வில் நடிச்சு முடிச்ச தருணத்திலிருந்து இப்போ வரை, ‘காலா’ படம் சம்பந்தமான குட் நியூஸ் எதுவா இருந்தாலும் உடனே ரஜினி சார்கிட்ட போன்ல சொல்லிச் சந்தோஷப்படுவேன். சமீபத்துல எனக்கு ‘அவள் விகடன் விருது’ கிடைச்ச செய்தியை, என் குடும்பத்தினருக்குச் சொன்ன பிறகு உடனே ரஜினி சாருக்கு போன்ல சொன்னேன். ‘ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள்! இன்னும் நிறைய விருதுகள் வாங்கணும்!’னு வாழ்த்தினார். என் செகண்டு இன்னிங்ஸ்ஸில் எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம், ‘அவள் விகடன் விருது’. இனி இன்னும் பொறுப்புடன் செயல்படுவேன்” என்று புன்னகைக்கிறார், ஈஸ்வரி ராவ்

- கு.ஆனந்தராஜ்,  படங்கள் : க.பாலாஜி