Published:Updated:

ரஜினி, கமல், விஜய் படங்களுக்கு இலங்கையில் தடை விதிக்க புத்த மத அமைப்பினர் கோரிக்கை!

கொழும்பு: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் சரத்குமார் ஆகிய நால்வரின் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்க வேண்டும் என்று புத்த மத அமைப்பினர் கோரிக்கை விடுத்த்துள்ளனர்.

அதேவேளையில், இந்தக் கோரிக்கை தொடர்பாக இலங்கையின் தேசிய திரைப்படக் கழகம் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழ்த் திரைப்படத் துறையினர் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டதை அடுத்து, கடந்த ஏப்ரலில் இலங்கை தேசிய திரைப்படக் கழகத் தலைவர் ராவண பாலையாவிடம் புத்த மத அமைப்பினர் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த நான்கு நடிகர்களின் படங்களுக்கும் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

அதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காத நிலையில், நேற்று மீண்டும் ராவண பாலையாவைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை புத்த அமைப்பினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், புத்த மத அமைப்பினரின் கோரிக்கை மனு, ஊடக மற்றும் தகவல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தமிழ்த் திரைப்படத் துறையின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கைத் திரைப்படத் துறையினர், இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை விதிப்பதைத் தாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.