Published:Updated:

விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi

விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi
விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi

தென்மேற்குப் பருவக்காற்றில் அறிமுகமான `முருகனாக'  இருந்தாலும் சரி, கெட்ட பையன் காளிக்கே கெட்டவனாக வந்து நின்ற பேட்ட `ஜித்துவாக' இருந்தாலும் சரி எந்த கேரக்டர் கொடுத்தாலும் கண்களாலேயே நடித்துவிடுகிற நடிகன். இவரை ஸ்கிரீனில் பார்க்கும்போது நமக்கும் தொற்றிக்கொள்கிறது உற்சாகம். தமிழ் சினிமா கதாநாயகர்களிடையே ஆஃப் த ஸ்க்ரீன் டிரெண்ட் செட்டராக இருப்பவர். ஆம், வேறு யார் `கிளாஸிக்' விஜய் சேதுபதிதான். இன்று 41-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் செல்வோம்.

விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi

`ப்பா... யாருப்பா இந்தாளு. இப்படி வெரைட்டி வெரைட்டியா கேரக்டர் பிடிக்கிறார்? அட்டகாசமா நடிக்கிறார். எங்கிருந்துதான் மனுசனுக்கு இப்படி ஒரு கெத்து வருதோ?' என நீங்கள் நினைத்தால், சேது கை காட்டும் நபர் அவரது அப்பா காளிமுத்துதான். பையனாக இருந்து ஆம்பளையாக மாறும் ஒரு பால்யப் பருவத்தில் கிருதா மீசை வைத்துக்கொண்டு, `எப்படி இருக்கேன்... பார்த்தியா?’னு அப்பா முன்பு விஜய் சேதுபதி நிற்க, `டேய்... சூப்பர்டா’னு பாராட்டியது முதல் பின்னர், ஒருநாள் 'இப்படியும் இருக்கலாம்’னு ஒரு கதை எழுதி சேதுபதி நீட்ட, படித்துப் பார்த்துவிட்டு `நல்லா எழுதியிருக்கேடா’னு தட்டிக்கொடுத்தது வரை விஜய் சேதுபதியின் எந்தக் கனவுக்கும் அவரது அப்பா எந்தத் தடையும் போட்டது கிடையாது. அதேசமயம், அவருடைய எந்த முயற்சிகளுக்கும் வஞ்சமே இல்லாமப் பாராட்டவும் தவறியது கிடையாது. தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் அப்பாவைப் பற்றியும், அவரைப் பற்றிய கதைகளையும் அடிக்கடி சிலாகித்து சொல்வார் விஜய் சேதுபதி. இன்று ஆயிரக்கணக்கான பேர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், விஜய் சேதுபதியை ரசித்த, எப்பவுமே அவரை ஹீரோவாகப் பார்த்த முதல் ரசிகர் அவரது அப்பாதானாம்.

விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, ஃபாஸ்ட் புட் சப்ளையரிலிருந்து கார் கம்பெனியில் சர்வே எடுக்கும் வேலை வரை நான்கு வேலைகள் பார்த்திருக்கிறார் விஜய் சேதுபதி. பின்பு, ரெடிமேட் கிச்சன் கம்பெனியில் சில நாள்கள் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவாகவும்  வேலை செய்து விட்டு 2000-ல் துபாய்க்கு சென்றார். அப்படி, குடும்பத்தைப் பிரிந்திருந்த காலத்தில், சம்பளப் பணத்தை டிடி எடுத்து அனுப்பும் கவரில், `துபாய் எப்படி இருக்கு, நம்ம ஊருக்கும் துபாய்க்கும் என்ன வித்தியாசம் என்பதில் ஆரம்பித்து, உங்களைப் பிரிஞ்சிருக்கிறது வேதனையா இருக்கு' என்பது வரை செம ஃபீலிங்காக ஏழு பக்கத்திற்கு லெட்டர் எழுதி  வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. 

நான்காம் வகுப்பிலிருந்தே வரிசையாகப் பலரைக் காதலித்த விஜய் சேதுபதி, பத்தாவது படிக்கும்போது காலேஜ் படிச்ச ஒரு அக்காவைக் காதலித்ததுதான் ஹைலைட். ஆனால், அந்தக் காதல்களையெல்லாம் பயங்கர காமெடி பாஸ் என்பவர், மனைவி ஜெஸ்ஸியைத்தான் தீவிரமாகக் காதலித்ததாகச் சொல்வார். 

ஒரு இயக்குநர், 'இவர்தான் ஹீரோ’ என சேதுவை ஒரு கேமராமேனிடம் அறிமுகப்படுத்த, அவரோ `கறுப்பா இருந்தாலே போதும்... ஹீரோ ஆகிடலாம்னு நினைச்சு வந்துட்டியா? நீயெல்லாம் ஒருநாளும் ஹீரோ ஆக முடியாது’னு முகத்தில் அடித்த மாதிரி பேசியிருக்கிறார். உடனே, 'உன் கண் முன்னாடி நான் ஹீரோவாகிக் காட்டுறேன்’னு க்ளேஷியாக விஜய் சேதுபதி சபதமெல்லாம் போடவில்லை. தனது வேலையை மட்டும் தொடர்ந்து நேர்மையாகப் பார்த்துக்கொண்டே இருந்தார். விஜய் சேதுபதி ஹீரோவானார். ரஜினிக்கு வில்லனானார். ஆனால்,அந்த கேமராமேன் சார் இப்போ எங்கே என்ன செய்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
`புதுப்பேட்டை' படத்தில் கூட்டத்தில் ஒருவனாக நின்றது முதல் இன்று ஒரு பெருங்கூட்டத்தையே சேர்த்தது வரை அவருடைய இந்த சினிமா ஆட்டமே ஒரு ரியல் சினிமாவாகும். 

விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi

'நான் யாரோடவும் போட்டிபோட விரும்பலை. என்னை யாராவது போட்டிக்குக் கூப்பிட்டா, நான் போகவும் மாட்டேன். 'உங்க சவாலுக்கு நான் வரலைஜி’னு சொல்லிடுவேன். சினிமா, நடிப்பு... ரெண்டையும் நான் நேசிச்சுச் சுவாசிக்கிறேன். இதுல போட்டிபோட என்ன இருக்கு? ஆனா, நீங்க போட்டிபோட்டுத்தான் ஆகணும்னு, விளையாட்டில் என்னைச் சேர்த்தா, ரெண்டு கையையும் தூக்கிட்டு, 'நான் தோத்துப்போயிட்டேன்’னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருவேன்' - மற்ற நடிகர்களுடன் தன்னை ஒப்பிடுவது குறித்த கேள்விகளுக்கு இப்படி 'நச்' பதில் சொன்னவர், சொன்னதோடு நில்லாமல் தமிழ்த் திரையுலகில், தன்னுடைய போட்டியாளராகத் தொடர்ந்து உருவகப்படுத்தும், சிவகார்த்திகேயனின் ரெபரன்ஸ்களை `றெக்க' படத்தில் வைத்து
ஆச்சர்யப்படவும் வைத்தார் விஜய் சேதுபதி. 

குடும்பஸ்தன் விஜய் சேதுபதி இன்னும் கொஞ்சம் குறும்புக்காரர். தனது மகன் சூர்யா, மகள் ஸ்ரீஜாவிடம் இரவுகளில் தூங்கும் பொழுது தவறாமல் கதைகள் சொல்வாராம். அப்படி அவர் சொல்லும் கதைகளில் ஒரு தத்துவம், மரணம், என எல்லாம் கலந்த கலவையாகத்தான் கதையை நகர்த்துவாராம். மேலும், `அவர்கள் குழந்தையாக இருந்தபோது எப்படிக் குட்டியா இருந்தாங்க, கண்ணு எப்படி இருந்துச்சு, எப்படிப் பார்ப்பாங்க, என்னல்லாம் சேட்டை பண்ணுவாங்க'னு அடிக்கடி இதையும் ஒரு கதைபோலச் சொல்லுவாராம். இதுவரை இந்தக் கதையை மட்டும் ஒரு நூறு தடவையாவது சொல்லியிருப்பாராம். திரும்பத் திரும்பச் சொன்னதே சொன்னாலும் கூட ஒவ்வொரு தடவையும் சலிக்காமல் கேட்பார்களாம் விஜய் சேதுபதியின் மக்கள். பின்ன, விஜய் சேதுபதி கதை சொன்னா யாருக்குத்தான் பிடிக்காது? (ஒரு கதை சொல்லட்டுமா பசங்களா?)

விஜய் சேதுபதியின் பர்சனல் பக்கங்களைத் திருப்பினால், பல இடங்களில் அவரது நண்பர்களே நிறைந்திருக்கிறார்கள். தன்னுடைய உயிர்த்தோழனான சூர்யா ப்ளஸ் ஒன் படிக்கும்போதே இறந்துவிட, அவரின் ஞாபகமாக தனது மகனுக்கு `சூர்யா' எனப் பெயரிட்டு அழகு பார்த்திருக்கிறார் விஜய் சேதுபதி. 

விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathiநட்பதிகாரத்துக்குத் திருக்குறளை மனனம் செய்யாமலேயே எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார் விஜய் சேதுபதி.

தான் ஆசைப்பட்ட, தன்னுடைய பலநாள் கனவுகளை உழைப்பின் மூலம் உடனடியாக நிகழ்த்தி காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய் அவார்ட்ஸில் `நயன்தாராவைக் கடத்த ஆசை’னு சொன்னவர், நானும் ரவுடிதான் படம் மூலமாக நயன்தாராவுடன் இணைந்தார். இயக்குநர் மகேந்திரனின் `முள்ளும் மலரும்' திரைப்படத்தைதான் அடிக்கடி பார்த்து ரசிப்பாராம் விஜய் சேதுபதி.  தன்னுடைய 25-வது படத்தில், `நீங்கள் இருக்கணும்னு ஆசைப்படுறேன் சார்' என நேரில் சென்று மகேந்திரனிடம் வேண்டுகோள் விடுக்க, அவரும் சீதக்காதியில் நடித்துக் கொடுத்தார். `எல்லோருக்குமே மணி சார் படத்துல நடிக்கணும்னு கனவு இருக்கும். எனக்கும் அந்த ஆசை, கனவெல்லாம் இருக்கு' என பேட்டிகளில் சொல்லி வந்தவர், அந்தக் கனவையும், `செக்க சிவந்த வானத்தில்' நிறைவேற்றிக் கொண்டார். ரஜினியை காளியாக ரசித்து ரசித்துப் பார்த்துவிட்டு 'பேட்ட'யில் ரஜினிக்கு வில்லனாக நடித்தது முதல்' அக்கட' தேசத்து `சை ரா - நரசிம்ஹா ரெட்டி' படத்தில் சிரஞ்சீவியுடன் கை கோத்திருப்பது வரை.... கெட்ட பய சார் இந்த விஜய் சேதுபதி.

நடிப்பு, எழுத்தாளர் இதையெல்லாம் தாண்டி, விஜய் சேதுபதியிடம் மிகச்சிறந்த க்ரியேட்டிவிட்டி ஒன்று இருக்கிறது. அதனால்தான்,வாழ்க்கை குறித்து நிறைய தத்துவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அவருடைய நேர்காணல்களும் அவ்வளவு இயல்பாக இருக்கின்றன. இது மட்டுமல்லாது, விஜய் சேதுபதிக்குள் ஒரு திறமையான இயக்குநரும் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர் பல ஸ்க்ரிப்ட்கள் கூட வைத்திருக்கிறார். 
ஆனால், அதை தூசு தட்ட விஜய் சேதுபதி தயாராக இல்லை.
ஏனென்று கேட்டால், `படம் பண்ண ஆசை இருக்கு; தைரியம் இல்லை. 
தயாரிப்பாளர் ஆனதே பெரிய விஷயம் பாஸ்' எனக் கடந்து போய் விடுவார்.

விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi

விஜய் சேதுபதியின் நடிப்பைப் பொறுத்தவரை `அந்த கேரக்டராகவே மாறுறது, வாழ்றது' மாதிரியான நடிப்பெல்லாம் அவரிடம் எடுபடாது.  ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை,'விஜய் சேதுபதி போலீசா இருந்தா என்ன பண்ணுவான்' போன்ற ரீதியில்தான் அணுகுவார் விஜய் சேதுபதி. `எல்லாப் படத்துலயும் விஜய் சேதுபதியாதான் அவர் தெரியுறாரு' போன்ற சில விமர்சனங்கள் இருந்தாலும் இந்த பார்முலா ரசிகர்களிடம் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். 

ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் தனது நடிப்பு இயக்குநருக்குத் திருப்தி தரவில்லை என்றால், இயக்குநரின் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவார் விஜய் சேதுபதி. இயக்குநர் ரீடேக் சொல்வதற்கு முன்பே அவரிடம் வந்து `உங்க மூஞ்சே சரியில்லையே.. இந்த தோசை பிடிக்கலையா, நான் வேற தோசை ஊத்துறேன்' என விளையாட்டாகச் சொல்லிவிட்டு, மீண்டும் அந்தக் காட்சியில் நடிக்கத் தயாராவார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியை ரசித்த அந்த முதல் ரசிகர்..! #HBDVijaySethupathi


அதிக ஆண்கள் முத்தமிட்ட நபர்ன்னு கின்னஸில் ஒரு பிரிவு இருந்தால், அதற்குத் தாராளமாக விஜய் சேதுபதியின் பெயரை அனுப்பி வைக்கலாம். இன்னும், இருபது வருடங்கள் கழித்துப் பார்த்தால் கூட அந்த சாதனை விஜய் சேதுபதியிடம் மட்டும்தான் இருக்கும். அந்தளவுக்கு, முத்தமும் முத்தம் நிமித்தமுமாகவே ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் இணக்கமாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.

சமீபகாலமாக, விஜய் சேதுபதி மிகத் தெளிவாக ஸ்கிரிப்ட் பிடிக்கிறார்;  எந்த ஹீரோவும் தொடாத ஏரியாவில் டிராவல் பண்ணிட்டு இருக்கார்!''. இருந்தாலும், ரஜினிக்கு `பாட்ஷா' போல, விஜய்க்கு 'கில்லி' போல நீங்கள் ஒரு பக்கா மாஸ் படம் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அந்த `ஜிகிர்தண்டா'ல சில நிமிடங்கள் வருவீங்களே.. அந்த மாதிரி விஜய் சேதுபதி படம் முழுக்க வரணும். 'எனக்காகப் பேச இங்கே யாரும் இல்லை, என் நண்பர்களையும் ரசிகர்களையும் தவிர!'' என ஒருமுறை நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அப்படி உங்களை நேசிக்கும் அன்பர்களை தங்களது திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து மகிழ்விக்க வாழ்த்துகள். மற்றபடி, கடைசியாக ஒண்ணே ஒண்ணு...

"நீ கலக்கு பாஸு! "