Published:Updated:

விஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ!

விஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ!
விஜய் சேதுபதி பிறந்தநாளில் இன்னொரு ட்ரீட் - சிந்துபாத் ஃப்ரஸ்ட் லுக் இதோ!

விஜய் சேதுபதியின் பிறந்தாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படமான சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்லுக் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி ஃபேன்ஸுக்கு இன்று தொடர்ச்சியாக இன்ப அதிர்ச்சியாகக் கொட்டுகிறது. அவரின் பிறந்த நாளுக்கு கிஃப்ட்டாக சைரா நரசிம்மரெட்டி போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டது. சைரா நரசிம்மரெட்டி படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ராஜபாண்டி. இன்று வெளியான போஸ்டரில் கையில் வாளுடன் கம்பீரமாக இருந்தார். இதையடுத்து இரண்டாவது படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

`பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார், நடிகர் விஜய் சேதுபதியுடன் கைகோத்துள்ளார். இந்தப் படத்துக்கு `சிந்துபாத்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வாசன் மூவிஸ் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படத்துக்கு விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்யும் படத்தின் ஃபர்ஸ்லுக் வெளியாகியுள்ளது. ஆயுதங்களுடன் பலர் துரத்த, விஜய் சேதுபதி கெத்தா நிற்கும்படியாக ஃபர்ஸ்லுக் அமைந்துள்ளது.