2019... சுந்தர்.சிக்கு சினிமாவில் 25வது ஆண்டு. ரஜினி, கமல், அஜித் தொடங்கி விஷால், சித்தார்த் வரை இயக்கி ஏராளமாக ஹிட்ஸ் கொடுத்த கலகலப்பான கமர்ஷியல் இயக்குநர் சுந்தர்.சி. இப்போது சிம்புவுடன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன் ’ என வந்திருக்கிறார்!

‘‘ `கலகலப்பு பார்ட்-2’ போல `உள்ளத்தை அள்ளித்தா’ ரீமேக் அல்லது பார்ட் 2 ஐடியா வச்சிருக்கீங்களா?’’

``இதே கேள்வியை என்னிடம் பல தயாரிப்பாளர்கள் கேட்டாங்க, சிலபேர் தயாரிக்கிறதுக்குக்கூட முன்வந்தாங்க. ஆனால், நான் மறுத்துட்டேன். ஏன்னா, கார்த்திக் சார், கவுண்டமணி சார் கேரக்டர் பண்ண யார் இருக்கா? என் கரியர்ல ‘உள்ளத்தை அள்ளித்தா’ ஒரு மாஸ்டர் பீஸ். சினிமாவுல பன்முகத் திறமைகள் கொண்டவர் என் குருநாதர் மணிவண்ணன். குணசித்திரம், காமெடி, வில்லன்னு பலதரப்பட்ட வேடங்கள்ல அபாரமா நடிச்ச நடிகர். சினிமாவுல இப்போகூட அவரோட இடம் காலியாவே இருக்கு. மணிவண்ணன் சார் ‘அமைதிப்படை’ படத்துல நடிச்சு பெரிய அளவுல ரீச் ஆகியிருந்தார். இடையில அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி கேப் விழுந்துடுச்சு. மறுபடியும் அவரை ஒரு ரவுண்ட் கொண்டுவரணும்னு பிளான் பண்ணி ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துல அவரை இரண்டு வேஷத்துல நடிக்க வெச்சேன். அந்தப்படமே ஒரு குருநாதருக்கு சிஷ்யனா நான் செய்த நன்றிக்கடன்தான். அது அப்படியே இருக்கட்டுமே.

ரஜினியுடன் ‘அருணாச்சலம்’ கமலுடன் ‘அன்பே சிவம்’ கொடுத்த அனுபவங்கள்?

சினிமாவுல எல்லாருக்கும் தெரிஞ்ச என் குரு மணிவண்ணன் சார்னா, வெளியே தெரியாத இரண்டு குருமார்கள் ரஜினிசாரும், கமல்சாரும்தான். வாழ்க்கையில பெரிய லெவல்ல ஜெயிச்சவங்களோட வேலை பார்க்கும்போது அவங்களோட பண்புகளை, பழகும் தன்மையைக் கூர்ந்து கவனிச்சாலே அவர்கள் வெற்றி பெற்றதற்கான ரகசியத்தைத் தெரிஞ்சுக்கலாம். இரண்டு பேருமே முதல்படத்துல நடிக்கிற புதுமுக நடிகர்கள் மாதிரி சினிமாவை சின்சியராக மதிக்கக்கூடியவர்கள். ஒரு இயக்குநரா அவங்களோட நான் வேலை பார்க்கலை. ஒரு மாணவனா அவங்ககிட்டேருந்து நிறைய கத்துக்கிட்டேன்.

நீங்க மிஸ் பண்ணின ஹீரோன்னு யாராவது இருக்காங்களா?

விஜய். விஜய்க்காக எழுதி, கடைசி நேரத்துல பண்ணமுடியாம தவறிப்போய், பிறகு வேற ஹீரோக்களை வச்சு இயக்கி ஹிட்டான படங்கள் மட்டும் ஏழு இருக்கும். சொல்லப்போனா, விஜய்யை ஹீரோவாக நடிக்க வெச்சு சம்பாதிச்ச தயாரிப்பாளர்களைவிட, விஜய்க்காகக் கதை எழுதி, டைரக்ஷன் பண்ணியே அதிகமா ப்ராஃபிட் பார்த்த டைரக்டர் நானாதான் இருப்பேன்.

கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம்... காமெடி இப்போ யார் கைல இருக்கு?

இந்த சீஸன் நிச்சயமா யோகிபாபுவோடதுதான். இப்போ சூரி, ரோபோசங்கர், முனீஸ்காந்த்னு பெரிய போட்டியே இருக்கு. ஆனா லீடிங்ல இருக்கிறது யோகிபாபுதான். ‘கலகலப்பு’ படத்துல ஒரே ஒரு காட்சியில நடிக்கிறதுக்காக அவரை ஒப்பந்தம் செய்தேன். ஷூட்டிங்ல யோகிபாபு செய்த டைமிங்சென்ஸ் நடிப்பில் தனித்துவம் தெரிஞ்சது. அதைப்பார்த்து இம்ப்ரஸ் ஆகி யோகிபாபுவை நிறைய சீன்கள் நடிக்கவெச்சேன். ‘நீங்க வேணா பாருங்க, இன்னும் ரெண்டு வருஷத்துல தமிழ்சினிமாவே இவரோட கால்ஷீட்டுக்காக அலையும்’னு சொல்லிக்கிட்டிருப்பேன். இப்போ 24 மணி நேரமும் பிஸியா நடிச்சுட்டிருக்கார். ஜெயிக்கிறதுக்குத் திறமை மட்டும் போதாது, நல்ல மனசும் வேணும். நான் சினிமாவுல பார்த்த நல்ல மனுஷன்கள்ல யோகிபாபு மிகமிக ரொம்ப ரொம்ப நல்ல மனசுள்ள மனுஷன்.

25 வருஷத்துல தமிழ்சினிமா என்ன கத்துக் கொடுத்திருக்கு?

என் சினிமா வாழ்க்கைல எத்தனையோ கமர்ஷியல் ஹிட் படங்கள் கொடுத்திருக்கேன் ஆனால், வெளிநாட்டுக்குப் போகும்போது என்னோட ஒரே விசிட்டிங் கார்டு ‘அன்பே சிவம்’ தான். சினிமாவுல இயக்கி, நடிச்சி முடிச்சு ரிட்டயர்டு ஆகி வீட்டுல இருக்கும்போது என்னோட பேரன் பேத்திகள்கிட்ட ‘அன்பே சிவம்’ படத்தைத்தான் போட்டுக் காட்டிப் பெருமைப்படுவேன். இனிமே சினிமாவுல நம்ம கரியர் டிசைனே மாறிடப்போகுதுன்னு நம்பிக்கையோடு, எதிர்பார்ப்போடு ‘அன்பே சிவம்’ படத்தை இயக்கினேன். ஆனால், என்னோட கனவுப்படம் கமர்ஷியல் ரீதியா தோல்வி அடைஞ்சப்போ அப்படியே நொறுங்கிப் போயிட்டேன். உண்மையைச் சொல்லணும்னா, எல்லோராலயும் பாராட்டப்பட்ட அந்தப் படத்தை இயக்கியதுக்கு எனக்கு சம்பளமே கொடுக்கலை. அதுமட்டுமல்ல, ஐடி பிரச்னை என்னைச் சுத்தி வளைச்சு என் கழுத்தை நெரிச்சுச்சு. ‘சென்னையில் ஒரு வீடு சொந்தமா வாங்கிட்டுதான் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்’னு குஷ்புவைக் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி சத்தியம் பண்ணியிருந்தேன். சொன்ன மாதிரியே வீடு வாங்கிய பிறகுதான் கல்யாணம் நடந்தது. அப்படி, நான் ஆசை ஆசையாய் வாங்கிய அந்த ஃப்ளாட்டை இன்னொருத்தருக்கு விற்று, கடனை அடைக்கும் சூழ்நிலை உண்டாச்சு. அதுக்காக என் வீட்டுப் பத்திரத்துல கையெழுத்து போடும்போது குஷ் கண்கலங்கி அழுதாங்க, வழக்கமா எப்பவுமே தைரியமா சிரிச்சுக்கிட்டே இருக்கிற குஷ் கண்ணுல அன்னிக்குத்தான் முதன்முதலா கண்ணீரைப் பார்த்தேன்.

ஆனா, எனக்கு ஏற்பட்ட சோதனையைப் பார்த்து உடைஞ்சுபோயிடலை. அப்போ என்னை கமிட்செய்து வைத்திருந்த ஆறு படங்களும் என்னை விட்டுப் போயிடுச்சு. சினிமாவில் நல்ல படம்-கெட்ட படம்னு யாரும் தரம்பிரிச்சுப் பார்க்கிறது இல்லை, ஓடுற படம், ஓடாத படம்னு கமர்ஷியல் கண்ணோட்டத்துலதான் பார்க்கிறாங்கன்ற உண்மையைத் தெரிஞ்சுகிட்டேன். எல்லாக் கதவையும் மூடிவிட்டால் வீடே இருட்டாயிடும்னு கலங்கும்போது ஏதோவொரு ஜன்னல் வழியா வெளிச்சம் வரும்னு நம்புற மனுஷன் நான். அதுதான் வாழ்க்கை. நானும் நம்பினேன், என் வாழ்க்கையிலேயும் வெளிச்சம் பாய்ந்தது. ஒருவகையில ‘அன்பே சிவம்’ படத்துக்கு நான் நன்றி சொல்லணும். ஏன்னா, சொந்தமா சினிமா கம்பெனி ஆரம்பிக்கிறதுக்கு அதுதான் எனக்குத் தூண்டுதலா இருந்துச்சு. முதல்ல சொந்தமா ஆரம்பிச்ச ‘கிரி’ படம் முதல் இப்போவரைக்கும் வாழ்க்கையும் சினிமாவும் அருமையா போயிட்டிருக்கு.

குஷ்புவுக்கு அரசியல் நெருக்கடிகள் வரும்போது ஆலோசனைகள் தருவீங்களா?

அரசியல் சம்பந்தமா எல்லாமுடிவையும் அவங்களே சுயமா எடுக்கிறதைத்தான் நான் எப்போதும் விரும்புவேன். அதுல தலையிட மாட்டேன். 2005-ம் வருஷம் குஷ் சொல்லாத விஷயத்தைச் சொன்னதா தப்பான விஷயத்தைப் பரப்புனாங்க. அவங்க மேல வழக்குகள் போட்டாங்க. ஆனால் எங்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். குஷ் அதையெல்லாம் தனியாவே தைரியமாவே எதிர்கொண்டாங்க. அரசியல்னு வந்துட்டா அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கான பர்சனாலிட்டி!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ யார் வைத்த டைட்டில், படம் எப்படி வந்திருக்கு?

நான் எம்.ஜி.ஆரோட பரமரசிகன். அவரோட `சக்கரக்கட்டி ராஜாத்தி’ பாடல்ல வர்ற ‘அத்தை மகனே அத்தானே’னுதான் முதலில் தலைப்பு வெச்சிருந்தேன். ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல சிம்பு பேசின ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ வசனம் கேச்சிங்கா இருக்குன்னு சிம்புதான் இந்த டைட்டில் சொன்னார். எனக்கும் அது பிடிச்சிருந்தது. இந்தப் படம் எப்படிப்பட்ட படம்னு கேட்டீங்கன்னா, இதுல ஆறு சண்டைக்காட்சிகள் இருக்கு, அதனால் ஆக்ஷன் படம்னு சொல்லலாம்; ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க, அதனால் ஃபேமிலி சென்டிமென்ட் படம்னு சொல்லலாம்; நிறைய இடத்தில் காதல் காட்சிகள் இருக்கு, அதனால் ரொமான்ஸ் படம்னும் சொல்லலாம். ஆனால், எல்லாத் தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்துகிற படமா இருக்கும்.

‘அண்ணே, ரெண்டு மணிநேரம் எப்படி வேணாலும் எடுங்க, க்ளைமாக்ஸ்ல எனக்குப் பத்து நிமிஷம் கொடுங்க போதும்’னு சொன்னார் சிம்பு. எடிட்டிங்ல இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் பார்த்தப்பதான் சிம்பு ஏன் அப்படிக் கேட்டார்னு புரிஞ்சது. அவருடைய நடிப்பைப் பார்த்தவுடனே கண் கலங்கிடுச்சு. சிம்பு கிரேட் டேலன்ட்!

சிம்புவின் பங்சுவாலிட்டி பற்றிய நிறைய விமர்சனங்கள் சொல்வாங்களே, உங்க படத்தில் எப்படி?

தினசரி படப்பிடிப்புக்கு 11 மணிக்கு வருவது கார்த்திக் சார் பாணி, அதிகாலை 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6.30 மணிக்கே மேக்கப்புடன் இருப்பது சத்யராஜ் சார் ஸ்டைல். நீங்கள் கார்த்திக் சார் மாதிரி சிம்புவை ஹேண்டில் பண்ணணும், சத்யராஜ் சார் மாதிரி எதிர்பார்த்தால் என்ன செய்வது?

ரஜினியின் `பேட்ட’, அஜித்தின் `விஸ்வாசம்’ வெளியாகிற பொங்கல் ரேஸுல `வந்தா ராஜாவாதான் வருவேனு’ம் வருதா?

ஒருமுறை பொங்கலின்போது விஜயகாந்த்தின் ‘தாயகம்’, பிரபுவின் ‘பரம்பரை’, ‘ பிரபுதேவாவின் ‘லவ்பேர்ட்ஸ்’, அஜித்தின் ‘வான்மதி’, விஜய்யின் ‘கோயமுத்தூர் மாப்ளே’, கார்த்திக்கின் ‘கிழக்கு முகம்’, ‘ உள்ளத்தை அள்ளித்தா’ன்னு ஒரேநாளில் எட்டுப் படங்கள் ரிலீஸாச்சு. இப்போ பொங்கலுக்கு மூன்று படங்கள் ரிலீஸ், எங்களோட தரப்புல படம் ரெடி. எப்போ ரிலீஸ் என்பது தயாரிப்பாளர் கையில் இருக்கிறது. வந்தா நிச்சயம் எல்லோருக்கும் பிடிச்ச கமர்ஷியல் ராஜாவாதான் வருவோம்!

எம்.குணா