Published:Updated:

’’ஷூட்டிங் ஸ்பாட்டில் துல்கரை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்..!’’ - தேசிங் பெரியசாமி

’’ஷூட்டிங் ஸ்பாட்டில் துல்கரை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்..!’’ - தேசிங் பெரியசாமி
News
’’ஷூட்டிங் ஸ்பாட்டில் துல்கரை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்..!’’ - தேசிங் பெரியசாமி

’’ஷூட்டிங் ஸ்பாட்டில் துல்கரை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்..!’’ - தேசிங் பெரியசாமி

```கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் பக்கா லவ் சப்ஜெக்ட்தான். கூடவே, சின்னச் சின்ன ஆச்சர்யங்கள் படம் முழுக்க இருக்கும். இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி ப்ரேம் வரைக்கும் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட்டை அடிப்படையா வச்சு எடுத்திருக்கோம். இது காதலர்களுக்கான படம் மட்டுமல்ல; இது இளைஞர்களுக்கான படமும்...’’ என ஜாலியாகப் பேச ஆரம்பித்தார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ரீது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் எனப் பலர் நடித்துள்ளார்கள்.

``இந்தப் படத்தோட கதையைத் துல்கர்கிட்ட சொல்றதே ஒரு பெரிய ப்ராஸஸா இருந்துச்சு. அதையெல்லாம் தாண்டி அவரை சந்திச்சு கதையைச் சொன்னதும் ஓகே சொல்லிட்டார். ‘துல்கருக்கு கதை சொல்லியிருக்கேன்’னு வெளியே சொல்லும்போதே நிறைய பேர் நல்ல விதமா சொன்னாங்க. துல்கர் பழகுறதுக்கும் பயங்கர கம்பர்டபளான ஆள். அவருடைய ஸ்கிரீன் ப்ரெசன்ஸ் தாறுமாறா இருக்கும். தன்னை சுத்தி யார் நடிச்சாலும் நம்ம சம்பந்தப்பட்ட சீன் வரும்போது ஸ்கோர் பண்ணிக்கலாம்ங்கிற மாதிரி துல்கர் இருப்பார். அதே மாதிரி தன்னோட நடிக்கிற மற்ற நடிகர்களுக்கு ஸ்பேஸ் கொடுப்பார். இந்தப் படத்தில் துல்கருக்கு சமமா பல காட்சிகளில் விஜய் டிவி ரக்‌ஷனும் கெத்தா இருப்பார்.’’

பெரிய நடிகரா இல்லாமல் சின்னத்திரை தொகுப்பாளரை நடிக்க வெச்சதுக்கு துல்கர் ஒண்ணும் சொல்லலையா..?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``துல்கர் அப்படிப்பட்ட ஆளே இல்லை. யாராக இருந்தாலும் இறங்கிப்போய் பழகக்கூடியவர். ’எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கோ அதே அளவுதான் ரக்‌ஷனுக்கும் இருக்கணும்’னு சொல்லிட்டார். துல்கருக்கு எந்தக் கடையில் டிரெஸ் எடுத்தோமோ அதே கடையில்தான் ரக்‌ஷனுக்கும் டிரெஸ் எடுத்தோம். சில சீன்களில் துல்கர் கூலர்ஸ் இல்லாமல் நார்மலா இருப்பார்; ரக்‌ஷன் கூலர்ஸ் போட்டு கெத்தா நிப்பார். அதுக்கும் அவர் எதுவுமே சொன்னது இல்லை. இந்தப் படத்தில் துல்கருக்கு ஒரு ஹீரோயிச சீன் இருக்கு. அந்த சீனில் நடிக்கும்போது அவர் ரக்‌ஷன்கிட்ட, ‘மச்சி நீ இந்த சீன்ல இல்லையா’னு கேட்டார். ’இல்ல மச்சி இது உனக்கான சீன்’னு ரக்‌ஷன் சொன்னதும், ’இல்லை இல்லை எல்லா சீன்லேயும் நீ என்கூடதான இருக்க… ஸோ, இந்த சீன்லேயும் நீ இருக்கணும்’னு சொல்லி அவரையும் அந்த சீன்ல சேர்த்துக்கிட்டார். உண்மையாகவே துல்கர் செம கேரக்டர்.’’

ஹீரோயின்ஸ் பற்றி சொல்லுங்க..?

’’ ‘பெல்லி சுப்புலு’ங்கிற தெலுங்கு படத்தில் நடிச்ச ரீது வர்மாதான் துல்கருக்கு ஜோடி. இது அவங்களுக்கு முதல் தமிழ் படம். அவங்களுக்கு நான் ஸ்கிரிப்ட்டை மெயில்தான் பண்ணுனேன். ஸ்கிரிப்ட் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. உடனே, கால்ஷீட் கொடுத்தாங்க. வழக்கமான ஹீரோயின் ரோல் கிடையாது. படம் முழுக்க வருவாங்க. ஆனால், துல்கரும் அவங்களும் சேர்ந்து ஆடுற மாதிரி பாடல்கள்கூட கிடையாது.

ரீது ரொம்ப ஷார்ப்பான பொண்ணு; அதுக்கு ஓர் உதாரணமும் சொல்றேன். அவங்களுக்கு ஸ்கிரிப்ட்டை மெயில் பண்ணுனதுக்கு அப்புறம் வசனங்களில் சில மாற்றங்கள் பண்ணினேன். ஷூட்டிங் ஸ்பாட்ல நான் அப்பேட் பண்ணுன வசனங்களைச் சொல்லி அவங்களை நடிக்கச் சொன்னதும், ’இல்லையே நீங்க அனுப்புன மெயில்ல இந்த மாதிரி வசனம் வரலையே’னு சொன்னாங்க. அந்தளவுக்கு கவனமா இருப்பாங்க; நல்லா நடிச்சிருக்காங்க. துல்கருக்கும் இவங்களுக்கும் கெமிஸ்ட்ரியைப் பார்க்கும்போதே ஃப்ரெஷ்ஷா இருக்கு.

காஸ்ட்டியூம் டிசைனர் நிரஞ்சனிதான் ரக்‌ஷனுக்கு ஜோடி. இந்த ரோலுக்கு ஒரு டஸ்கி லுக் பொண்ணு தேவைப்பட்டது. ஒரு நாள் எதேச்சையா இவங்களோட போட்டோவைப் பார்த்தேன். இவங்க சரியா இருப்பாங்கனு பேசிப்பார்த்தோம்; நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் நேர்ல மீட் பண்ணி பேசினேன். நான் அவங்ககிட்ட ஒரு ஃப்ரெண்ட் மாதிரி ஜாலியா பேசினதும் நடிக்க ஒப்புக்கிட்டாங்க.’’

இந்த இளைஞர்கள் பட்டாளத்தில் கௌதம் மேனனும் இருக்காரே..?

``ஆமா... ஆனால், இந்த ரோலை நான் அவருக்காக எழுதலை. பெரிய ஹீரோவா இருந்து இப்போ படங்கள் நடிக்காம இருக்கிற சில நடிகர்களைத்தான் இந்த ரோலில் நடிக்க வைக்கணும்னு நான் முடிவு பண்ணினேன். ஆனால், நான் அப்படிப் பிளான் பண்ணி வெச்ச நடிகர்கள் எல்லாரும் அடுத்தடுத்து நடிக்க வந்துட்டாங்க. அதுக்கப்புறம்தான் கெளதம் சார் என் மைண்டுக்கு வந்தார். அவரை பல நாள்களாக ஃபாலோ பண்ணினேன். ஆனால் அவர் ’துருவ நட்சத்திரம்’, ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’னு பிஸியா இருந்தனால எந்தப் பதிலும் சொல்லலை. ரொம்ப நாளுக்கு அப்பறம் கெளதம் சார்கிட்ட இருந்து ஒரு மெசேஜ், ‘மீட் பண்ணலாம் வாங்க’னு. உடனே போய் அவரை சந்திச்சு நடிக்கிறதுக்கு ஓகே வாங்கிட்டேன். அவரோட ரோல் படத்துக்கு ரொம்ப முக்கியமானது. அவர் படத்துக்குள்ள வந்ததுக்குப் பிறகு, படத்தோட போக்கே மாறும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதையே.’’

இந்தப் பட்டாளத்தை வெச்சு எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் சமாளிச்சீங்க..?

``அய்யோ அத ஏன் கேட்குறீங்க; செம ரகளையா இருக்கும். ஒரு நாள் ஷாட்டுக்குத் தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இவங்களைத் தேடுனா யாரையும் காணோம். போன் பண்ணுனா ஒருத்தரும் எடுக்கலை. கொஞ்ச நேரம் கழிச்சு வந்தவங்க; ’வர வழியில ஒரு ஹோட்டல் பார்த்தோம். அதான் சாப்பிட போயிட்டோம். இவன்தான் போகலாம்னு சொன்னான்’னு ஒருத்தரும், ’நான் வேணாம்னுதான் சொன்னேன். அவங்கதான் போகலாம்னு சொன்னாங்க’னு இன்னொருத்தரும்னு ஒருத்தர் மேல ஒருத்தர் ஸ்கூல் பசங்க மாதிரி கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க. இப்படி நிறைய சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். அதுவும் துல்கரை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம். செம ஜாலியா ஃபன்னா ஷூட்டிங்கை கொண்டுபோனார்.’’