சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திலிருந்து முதல் சிங்கிள் டிராக் 'ரெட்கார்டு' ரிலிஸானது.
சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இதில், சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க, மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துவருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ரெட்சர்டு எனத் தொடங்கும் இப்பாடலை அறிவு எழுத, சிம்பு பாடியுள்ளார். 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில், சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட விவகாரத்தில், எஸ்.டி.ஆருக்கு நடிக்க 'ரெட் கார்டு' (தடை) போடப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, இப்பாடலின் வரிகள் எழுதப்பட்டிருப்பது, சிம்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முதலில், ‘அத்தை மகனே அத்தானே’னு இருந்த தலைப்பை, 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் சிம்பு தான் பேசிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற வசனத்தையே தலைப்பாக வைக்கக் கேட்டு, சுந்தர்.சி மாற்றினார். பவன் கல்யாண், சமந்தா நடப்பில் வெளியான 'அத்தாரிண்டிக்கி தாரெட்டி' என்ற தெலுங்கு ஆக்ஷன் காமெடி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.