ஆனந்த விகடன் விருதுகள்
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

METOO நல்லதுதான்!

METOO நல்லதுதான்!
பிரீமியம் ஸ்டோரி
News
METOO நல்லதுதான்!

ஜல்லிக்கட்டு... கெத்து காட்டுபடங்கள்: பிரணவ் ராஜ்

METOO நல்லதுதான்!

`ட்டு தோட்டாக்கள்’ வழி தமிழ்த் திரையுலகில் கால்பதித்தவர் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. அடுத்து `சர்வம் தாள மயம்’ ரிலீஸுக்கு ரெடி. மலையாளத்தில் சில படங்களிலும்  நடித்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சந்தித்தேன்.

METOO நல்லதுதான்!

`` ‘எட்டு தோட்டாக்கள்’ல என் ரோல் ரொம்பச் சின்னதுதான். ஆனால், அந்த மாதிரி ஒரு படத்துல நானும் ஒரு அங்கமா இருந்ததே பெரிய விஷயம்’’ அடக்கமாகப் பேச ஆரம்பித்தார் அபர்ணா.

ராஜீவ் மேனன் படங்களில்  எப்போதும் கதா நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்; `சர்வம் தாளம் மயம்’ல உங்க கேரக்டர் எப்படி?

`` ‘சர்வம் தாள மயம்’ படத்துல ‘சாரா’ங்கற மலையாளி நர்ஸ்ஸா வர்றேன். ஹீரோவை மோட்டிவேட் பண்ற மாதிரி ஒரு நல்ல கேரக்டர் அது. எனக்கு தமிழ் சரியா தெரியாது. ஆரம்பத்துல ரொம்ப சிரமங்கள் இருந்தது. ராஜீவ் மேனன் சாரோட சப்போர்ட்டில் நல்லபடியா நடிச்சி முடிச்சிட்டேன். சீனியர் மலையாள நடிகர் நெடுமுடி வேணு சாரும் இந்தப் படத்தில் நடிச்சிருந்தார். இந்தப் படத்தோட ஷூட்டிங் முழுக்கவே நானும், ஜீ.வி-யும் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி சீனியர்ஸ்கிட்டேருந்து நிறைய கத்துக்கிட்டோம்.’’

METOO நல்லதுதான்!
METOO நல்லதுதான்!

தமிழில் யாருடைய  இயக்கத்தில் நடிக்க ஆசை?

``மணிரத்னம் சார் டைரக்‌ஷனில்  நடிக்கணும்னு ஆசையா இருக்கு. நடிகர்களில் ரஜினி சாரிலிருந்து விஜய் சார் வரைக்கும் எல்லாரையும் பிடிக்கும். அவங்க எல்லாரோடும் நடிக்கணும்.’’

ME TOO குறித்து உங்களுடைய கருத்து என்ன?

``நம்முடைய அனுமதி இல்லாமல், நம்மிடம் ஒருவர் தவறாக நடந்துக்க முயற்சி பண்றாருங்கறப்போ, சோஷியல் மீடியால அதைப் பதிவு பண்ணும்போது அது நிச்சயம் நல்ல தீர்வை நோக்கிக் கொண்டுபோகும்னு நம்புறேன். இதுவரைக்கும் வொர்க் பண்ணுன எந்த செட்லயும் ME TOO மாதிரியான விஷயங்களை நான் சந்திச்சது கிடையாது.’’


-மா.பாண்டியராஜன்