ஆனந்த விகடன் விருதுகள்
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இந்தப் படத்துல நீங்கதான் ட்விஸ்ட்டு!

இந்தப் படத்துல நீங்கதான் ட்விஸ்ட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தப் படத்துல நீங்கதான் ட்விஸ்ட்டு!

இயற்கை போற்றி இயைந்து வாழ்!

சினிமா என்பது 2D, 3D என்பதைக் கடந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. 

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் டக்கென ஹீரோ உங்களிடம் அடுத்து ராஜா பாட்டு கேட்கலாமா இல்லை ரஹ்மான் பாட்டு கேட்கலாமா எனக் கேட்டுவிட்டு, நீங்கள் சொல்லும் பதிலுக்கு ஏற்ப பாடலைத் தேர்வு செய்து, கதையைத் தொடர்ந்தால் அட எனத் தோன்றும் அல்லவா. அதுதான் Interactive சினிமா.  

இந்தப் படத்துல நீங்கதான் ட்விஸ்ட்டு!

12B படத்தில் இரண்டு வாய்ப்புகளை நம் முன் காட்டிய சினிமா, இப்போது அந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனையும் தருகிறது.

ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் உட்பட பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் இன்ட்ராக்டிவ் சினிமாதான் வருங்காலம் என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க,  அதைச் சாத்தியப்ப
டுத்திக்காட்டி ‘சூப்பர் ஒன்’  ஆகிவிட்டது நெட் ஃபிளிக்ஸ்.

ஆம், நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வெளியான பிளாக் மிரர்: ‘பேண்டர்ஸ்னேட்ச்’ என்ற படம் அபாரமான இன்ட்ராக்டிவ் சினிமா.
 
டெக்னாலஜியின் கறுப்புப் பக்கங்களை, ஆபத்தைப் பட்டியலிடும் தொடரான ‘பிளாக்மிரர்’-ன் ஒரு சிறப்புப்பகுதியாக இந்த பேண்டர்ஸ்னேட்சை வெளியிட்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ். வெளியான முதல் நாளிலிருந்தே இதற்கு ஏகோபித்த வரவேற்பு. இதை எப்படிச் சாத்தியப்படுத்தினார் பிளாக் மிரர் தொடரின் எழுத்தாளர் சார்லி ப்ரூக்கர்?

1984-ம் ஆண்டில் நிகழும் இதன் கதை ரொம்பவே சிம்பிள். கம்ப்யூட்டர் கேமிங்கில் ஆர்வமாக இருக்கிறான் ஸ்டீஃபன்.  அந்தத் துறையில் ஜாம்பவானாக இருக்கும் ஒரு பெரிய நிறுவனம் அவனுக்குத் ‘தெறி’ கேம் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.    இதனிடையே தாயின் மரணம், தந்தையுடனான உறவில் விரிசல் என வரிசையாக நிகழும் சம்பவங்கள் ஸ்டீஃபனை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன. அவற்றையெல்லாம் கடந்து அந்த கேமை வெற்றிகரமாக ஸ்டீஃபன் முடித்தானா... என்பதுதான் பேண்டர்ஸ்னேட்ச்சின் கதை. 

இந்தப் படத்துல நீங்கதான் ட்விஸ்ட்டு!

ஆனால், ஹீரோ அடுத்து என்ன செய்ய வேண்டும் என இதன் திரைக்கதையைத் தீர்மானிக்கும் பொறுப்பு பார்வையாளர்களாகிய நம் வசம்.  சிலருக்கு ஒரு மணி நேரத்தில் முடியும் சினிமா, வேறு சிலருக்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் செல்கிறது. காரணம் நாம் எடுக்கும் முடிவுகள்!

நாம் தேர்வு செய்வதை வைத்துத்தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் என்பதால் பல்வேறு முடிவுகள், கிளைக் கதைகள் என பேண்டர்ஸ்னேட்ச்சின் களம் பிரமாண்டமாக விரிகிறது. கதையின் ஓட்டத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன்களைப் பொறுத்து, கதையின் தன்மையே மாறிவிடும். நமக்கு வழங்கப்படும் இரண்டு  வாய்ப்புகளில் இதற்குப் பதில் அதைத் தேர்வு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிற ஆர்வமே ரசிகர்களை வெறிகொண்டு ரிப்பீட் அடிக்க வைக்கிறது. 

இந்தப் படத்துல நீங்கதான் ட்விஸ்ட்டு!

இதில் முக்கியமான அம்சம், தேர்வு செய்த ஆப்சனை மாற்றுவதோ, சில நிமிடங்கள் முன் செல்ல ஸ்லைடரை அழுத்துவதோ இங்கே சாத்தியமில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனுக்கான முடிவைப் பார்த்தேயாக வேண்டும். ஐந்து க்ளைமாக்ஸ் பார்த்துவிட்டேன் என்றால் ‘இந்த ஆப்ஷன் பார்த்தியா’ என இணையம் புதிதாக வைக்கும் இன்னொரு முடிவு மீண்டும் பேண்டர்ஸ்னேட்ச்சைப் பார்க்கத் தூண்டுகிறது. ஒரு க்ளைமாக்ஸில், ‘என்னைக் கன்ட்ரோல் பண்றது 21ம் நூற்றாண்டில் நெட்ஃப்ளிக்ஸ்னு ஏதோவொண்ணுல படம் பார்க்குற ஆள்தான்’ என  ஸ்டீஃபன் மூலம் வண்டியை நம் பக்கம் திருப்பி விடுவதெல்லாம் வேற லெவல் மெர்சல்.

நோலன் படங்களில் கதை, அதற்குள் இன்னொரு கதை என, பார்ப்பவர்களைச் சுத்தலில் விடும் வித்தைகள் நிறைய இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியொரு சமாசாரம் இருக்கிறது. இந்த இன்ட்ராக்டிவ் சினிமாவுக்குள் ஸ்டீஃபன் டிசைன் செய்ய முயல்வது ஓர் இன்ட்ராக்டிவ் கேம். அந்த கேம் டிசைன் செய்ய அவனைத் தூண்டுவது ஓர் இன்ட்ராக்டிவ் புத்தகம். எத்த......ன?!    

இந்தப் படத்துல நீங்கதான் ட்விஸ்ட்டு!

“இதை எழுதுவது தவறான ஐடியா எனப் பல சமயங்களில் நினைத்ததுண்டு. எழுதும் சமயங்களில் என் தலைக்குள் ஒரு ரூபிக்ஸ் க்யூப் சுழல்வது போல இருக்கும். ஒவ்வொரு கதாபாத்தி ரத்துக்கும் பல்வேறு டைம்லைன்கள் யோசிக்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய சவால்’’ என்கிறார் சார்லி ப்ரூக்கர்.

‘Breaking the fourth wall’ என்பது படம் பார்க்க வந்த ரசிகர்களோடு படத்தின் கதாபாத்திரங்கள் நேரடியாக உரையாடும் கான்செப்ட்.  ஹாலிவுட்டின் டெட்பூல் கதாபாத்திரம்  தொடங்கி நம்மூர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் பட பார்த்திபன் வரை பார்வை யாளர்க ளோடு உரையாடுவது இப்படித்தான்.
 
இது அதன் அடுத்த கட்டம். ஆனாலும், இது வெறும் ஆரம்பம்தான்.

கார்த்தி