Published:Updated:

``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..!’’ - ராபர்ட்

மா.பாண்டியராஜன்
``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..!’’ - ராபர்ட்
``சிம்புவுக்கும் எனக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணி வெச்சார்..!’’ - ராபர்ட்

1

நடிகர் மற்றும் நடன இயக்குநராக இருக்கும் ராபர்ட்டுக்கு, நடிகர் சிம்பு சின்ன வயதிலிருந்தே நல்ல ஃப்ரெண்ட். இவர்கள் இருவரும் இணைந்து பல மாஸ் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில், ராபர்ட்டின் நடிப்பில் உருவான `ஒண்டிக்கி ஒண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிம்புவை அழைத்திருக்கிறார் ராபர்ட். சிம்பு கண்டிப்பாக வருவார் என்று நினைத்துக்கொண்டிருந்த ராபர்ட்டுக்கு ஏமாற்றம்தான். அதனால், விழா மேடையிலேயே தனது வருத்தத்தையும் பதிவுசெய்திருந்தார். அது பயங்கர வைரலாச்சு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நீண்ட நாள்களாகப் பேசாமல் இருந்த சிம்பு - ராபர்ட், தற்போது ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் இணைந்து வேலைபார்த்துள்ளனர். 

இந்தப் படத்தின் ’ரெட் கார்டு’ பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடலில், சிம்புக்கு ராபர்ட் நடனம் சொல்லித்தரும் சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து ராபர்ட்டிடம் பேசியபோது, ‘’எனக்கும் சிம்புவுக்கும் சுந்தர்.சி சார்தான் பஞ்சாயத்து பண்ணினார்னு சொல்லலாம். இந்த ’ரெட் கார்டு’ பாடலின் ரெக்கார்ட்டிங் முடிஞ்சதுக்கு அப்பறம், ‘இந்தப் பாட்டுக்கு யாரை கோரியோகிராஃபராகப் போடலாம் என சிம்புவுக்கு வாய்ஸ் நோட் அனுப்பியிருக்கிறார். பதிலுக்கு சிம்புவும், ‘எனக்கு ராபர்ட்தான்; ராபர்ட்டுக்கு நான்தான். அதுனால இந்தப் பாட்டை அவரே கோரியோ பண்ணட்டும்’னு வாய்ஸ் நோட் அனுப்பியிருக்கிறார். அதை சுந்தர்.சி சார் எனக்கு அனுப்பினார். அந்த ஆடியோவைக் கேட்டதும், என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியலை. உடனே சிம்பு வீட்டுக்கு கிளம்புப் போயிட்டேன். சிம்புவை கட்டிப்பிடிச்சு அழுது; ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். ‘இந்தப் பாட்டைக் கேளு; நம்மளோட ஸ்டைலிலேயே இந்தப் பாட்டை பண்ணுவோம்’னு சிம்பு சொன்னார். சாங் கேட்டேன்; பயங்கரமா இருந்துச்சு. இந்தப் பாட்டை நாலு நாள் ஷூட் பண்ணினோம். ரொம்ப நல்லா வந்திருக்கு. பழைய சிம்புவோட டான்ஸை இந்தப் பாட்டுல பார்க்கலாம்’’ என்றார்.