சினிமா
Published:Updated:

புதிய சினிமா... பூமிக்கு வா!

புதிய சினிமா... பூமிக்கு வா!
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய சினிமா... பூமிக்கு வா!

புதிய சினிமா... பூமிக்கு வா!

மௌனப் படம், பேசும் படம், முழுநீளத் திரைப்படம், குறும்படம் என, சினிமாவில் புதுவரவு இணைய சினிமாக்கள். ‘ஆன்லைனில் திருட்டுத் தனமாகத் திரைப்படம் வெளியாவதைத் தடுக்க வேண்டும்’ என்று சினிமாக்காரர்கள் இப்போதும் கோரிக்கையுடன் கோர்ட் வாசல் ஏறும் நாளில், திரையரங்குகளுக்கு அப்பால் இணையதளத்துக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்படும் சினிமாக்கள் வரத் தொடங்கிவிட்டன. அதற்கான ரசிகர் கூட்டமும் பெருகத் தொடங்கியுள்ளது. 

புதிய சினிமா... பூமிக்கு வா!

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான முதல் நேரடித் தமிழ்ப் படமான ‘சில சமயங்களில்’ படத்தைத் தயாரித்த இயக்குநர் விஜய், “ஊடகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் நுட்பத்துக்கேற்றமாதிரி தன்னைப் புதுப்பிச்சுக்கும். அந்த மாதிரி ஒரு பரிமாணமாகத்தான் இந்த நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜீ5 போன்ற பிளாட்பாரங்களும். புதிய திறமையாளர்கள் இதன் மூலம் அறிமுகமாவது வரவேற்கத்தகுந்த அம்சம்.

புதிய சினிமா... பூமிக்கு வா! மாதவன் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில் வந்த ‘ப்ரீத்’ தொடர் எடுத்த மயன்க் ஷர்மா சினிமாவுக்குப் புதுமுகம்தான். ஆனா, இன்று அவர் தேசிய அளவுல புகழ்பெற்றிருக்கார்.  குறும்படங்கள் மூலம் வந்த இயக்குநர்கள், நடிகர்கள்போல இந்த வெப் சீரிஸ்கள் மூலமும் பல திறமையாளர்கள் வெளி வரும் சாத்தியங்கள் நிறைய உண்டு. ஆன்லைன் சினிமாக்களால் திரையரங்க சினிமாக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இன்னும் சொல்லப் போனால் தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களின் டிஜிட்டல் உரிமமும் நல்ல விலைக்கே வாங்கப்படுகிறது. 

புதிய சினிமா... பூமிக்கு வா!

வர்த்தகம், ஹீரோ இமேஜ், சென்சார் போர்டு போன்ற தடைகள் இல்லாததால் புதுப்புது ஜானர்களில் புதுப்புது முயற்சிகள் ஆன்லைன் சினிமாக்களில் சாத்தியமாகுது” என்றார் இயக்குநர் விஜய்.

புதிய சினிமா... பூமிக்கு வா!

அமேசானில் வெளியான முதல் தமிழ் வெப் சீரிஸைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு, “பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்குப் போன சினிமா இன்னிக்கு பர்சனல் வியூவிங் (Personal Viewing) வரை வந்துடுச்சு. ஆனா, தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம், மொபைல் போன்னு வளர்ந்த அளவுக்கு  SVOD(Subscription Video On Demand)னு சொல்லப்படுற இந்த டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ஸ் இன்னும் பெரிய அளவுல இங்க வளரலை, அதற்கு காரணம் பைரஸி. கோடிக்கணக்கான பேர் மொபைல் போன்கள் பயன்படுத்தும் இந்தியாவில் என்னோட கணிப்புப்படி அதிகபட்சம் 20 லட்சம் வாடிக்கையாளர்கள்தான் சப்ஸ்கிரைப் செய்து இணைய சினிமாக்களைப் பார்க்கிறாங்க. 

புதிய சினிமா... பூமிக்கு வா!

சேட்டிலைட் சேனல்கள் தங்களோட டிஜிட்டல் பிளாட்பாரங்களுக்குப் படங்களை வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. பொருளாதாரக் காரணங்களால் தியேட்டர் ரிலீஸுக்குப் போக முடியாத தரமான படங்கள்மேல இந்த டிஜிட்டல் ஆட்களோட பார்வையும் திரும்பியிருப்பது ரொம்ப சந்தோஷமான விஷயம்.

புதிய சினிமா... பூமிக்கு வா!

ஒரிஜினல்ஸ்னு இந்த நிறுவனங்கள் நேரடியா நம்ம தயாரிப்பாளர்களைப் படங்கள் தயாரிச்சுத் தரச் சொல்லிக் கேக்கறாங்க. தணிக்கை இல்லாதது படைப்புச் சுதந்திரத்துக்கு வழிவகுத்தாலும், படைப்பாளிகளுக்குன்னு சொந்தமா பொறுப்பு உணர்வும் வேண்டும். சென்சார் இல்லை என்பதால் அளவுக்கு மீறிய வன்முறையும் ஆபாசக் காட்சிகளும் இடம்பெற்றுவிடக்கூடாது” என்றவரிடம், “தியேட்டர் ரிலீஸுக்கும் ஆன்லைன் ரிலீஸுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டேன்.

புதிய சினிமா... பூமிக்கு வா!

“ஒரு பெரிய தியேட்டர்ல ரசிகர்களோட கைத்தட்டல்கள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். ஆன்லைன் சினிமாக்களில் இது சாத்தியமில்லை. ஆனால் அதேநேரத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எழுதப்படும் விமர்சனங்கள் எங்கள் சினிமாக்களுக்கான அங்கீகாரங்கள்” என்கிறார் எஸ்.ஆர்.பிரபு. 

புதிய சினிமா... பூமிக்கு வா!

ஜீ தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிளாட்பாரம் ‘ஜீ5’. மாதம் ஒரு புதிய திரைப் படத்தை நேரடியாக தங்களது ஆப் மூலம் வெளியிடத் திட்டமிட்டு முதல் படமாக கதிர் நடித்த ‘சிகை’ படத்தை சென்றவாரம் வெளியிட்டது. 

புதிய சினிமா... பூமிக்கு வா!

“இங்கே இருக்கும் டிஜிட்டல் பிளாட்பாரம் எல்லாம் டிவி சேனல்களின் ஒரு அங்கமாதான் இருக்கு” என்று தொடங்கிய ஜி5 குழுமத்தின் தென் பிராந்திய அலுவலர் சூர்யா,  “ ஆரம்பத்தில் ஜி5-ல் வெப் சீரிஸ் எடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். கார்த்திக் சுப்புராஜ் தயாரிச்ச ‘கள்ளச்சிரிப்பு’ எங்களுக்குப் பெரிய வரவேற்பைக் கொடுத்துச்சு. இப்போ இங்கே இருக்கும் நிறைய புது இயக்குநர்கள் எங்களை அணுக ஆரம்பிச்சிருக்காங்க. எங்கள் பார்வையாளர் களுக்கு மாதம் ஒரு புதுப்படத்தைத் தரவேண்டும் என்பது எங்கள் முடிவு. அதன் முதல் படம் ‘சிகை.’ 

புதிய சினிமா... பூமிக்கு வா!

வரும் மாதங்களில் ‘ஒரு பக்க கதை’, ‘களவு’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. ஆரம்பத்தில் இதனால் பெரிய லாபம் கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்த முயற்சிகள் அதிகரிக்கும் போது, இது ஒரு தனி வணிகமாக மாறும். 

புதிய சினிமா... பூமிக்கு வா!

இந்தக் கட்டத்துல எங்களால சின்னப் படங்கள் மட்டும்தான் வாங்க முடியும்.  இது மறைமுகமா, திரையரங்குகளுக்கு வரும் பெரிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கவும் வசதி செய்யுது. மற்ற சர்வதேச நிறுவனங்களுக்கு இருக்கிற மாதிரி வாடிக்கையாளர்கள் வர்ற பட்சத்தில் தமிழ்ல நாம ரொம்ப நாளா எதிர்பார்க்கும்  மருதநாயகமேகூட எடுக்கலாம்” என்கிறார் நம்பிக்கையுடன்.

கட்-அவுட், பாலாபிகேஷம், திரைக்கு மேலே லாட்டரிச் சீட்டுகளைப் பறக்கவிடுவது மிஸ் ஆனாலும் நிச்சயம் புதிய அனுபவங்களைத் தரும் இந்த இணைய சினிமாக்கள்தான் நாளைய எதிர்காலம்.

அலாவுதின் ஹுசைன்